ஆயுத பூஜை

ஆயுத பூஜை வந்துட்டா போதும், வீட்ல பல வருஷமா சும்மா இருக்குற சைக்கிளுக்கு கூட ஒரு பொட்டு வச்சி, ஒரு மாலை போட்டு, அதை சந்தனத்துல குளிக்க வச்சி… பாடா படுத்திருவோம். அந்த சைக்கிளே நம்மள பாத்து, டேய், நான் பாட்டுக்கு ஒரு மூலைல தானேடா இருந்தேன். என்னைய ஏன்டா புதுசா ஷோ ரூம்ல எடுத்த வண்டி மாதிரி ஆக்கி வச்சிருக்கே? முதல்ல என் டயருக்கு காத்து அடிடான்னு சொல்லும். ஆயுத பூஜை யாரு கொண்டாடணும் தெரியுமா……

சீமராஜா

அம்பாசமுத்திரம் ஜில்லாவை சேர்ந்த சிங்கம்பட்டி ஜமீன். ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்துக்கு பின் மிச்சம் இருக்கும் கொஞ்சம் நிலமும் ஒரு அரண்மையோடும் அதன் வாரிசு இப்ப அந்த ஊர்ல எப்படி இருக்காரு, ஊர் மக்களுக்கு என்ன பண்றாரு என்பதே சீமராஜா. படத்துக்கு பலம் சிவ கார்த்திகேயன். வர எல்லா கெட்டப்பில் நம் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கிறார். ஜாலி,கேலி சீமராஜாவாக மனதில் சௌகர்யமாக அமர்கிறார். 14ஆம் நூற்றானைடை சேர்ந்த கடம்பவேல் ராஜாவாக வரும் போது அந்த ராஜாவையே நம்…

வடசொல் அறிவோம்

ஒரு மொழியானது தனக்குள்ளாகவே சொல்வளம் மிகுந்திருப்பது. அதிலும் நம் தமிழைப்போன்ற தொன்மையான மொழியில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. தமிழில் மூன்று இலட்சம் முதல் ஆறு இலட்சம் வரையிலான சொற்கள் இருந்தன என்கிறார்கள். ஆனால், தமிழ் மொழியகராதிகளில்கூட அறுபதாயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலான சொற்கள்தாம் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்றைக்கு ஆங்கிலம் எப்படித் தமிழோடு தொடர்ந்து கலந்து வருகிறதோ அவ்வாறே சமஸ்கிருதம் எனப்படும் வடமொழியும் உருதும் தொடர்ந்து கலந்தன. இன்றைக்குத் தமிழில் கலந்துள்ள ஆங்கிலச் சொற்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். காபி, டீ,…

துயரத்தில் தமிழகம்!

இன்று தமிழகத்தின் ஒரு சகாப்தம் முடிவடைந்தது. இணையில்லா ஒரு அரசியல் தலைவரை நாடு இழந்து நிற்கிறது. தமிழ்நாட்டை ஒரு வளர்ச்சி பாதைக்கு இட்டு சென்ற பெருந்தகைகளில் ஒருவரை நாம் இழந்து நிற்கிறோம்.  50 ஆண்டுகளாக கட்சியின் தலைமை பொறுப்பு,  சுமார் 60 ஆண்டுகள், 12 முறை தொடர்ந்து  சட்டமன்ற உறுப்பினர் பதவி, 5 முறை தமிழக முதல்வர் என்று அவரின் நீண்ட நெடிய பயணத்தை பட்டியலிடலாம். தமிழக அரசியல் என்ற புத்தகத்தில் தனி ஒரு பெரும் அத்தியாயமாக திகழந்த…

இரும்புத்திரை

சுமார் 2 மாதம் படம் வெளிய வராம இருந்த நமக்கு, இந்த படம் ஒரு நல்ல அனுபவத்தை தரும்னே சொல்லலாம். நம்ம எல்லாரும் டிஜிட்டல் உலகத்துல இருக்கோம். 50 ஆண்டுகளுக்கு முன்னாடி இரண்டு நாடுகளுக்கு இடையே ஆயுதப்போர் நடந்தது. அதுக்கு பின் பயோ போர் (Biowar), இப்ப நடக்குறது சைபர் போர் (Cyber War). அமெரிக்கால டிரம்ப் ஜெயித்ததுல இருந்தது நம்ம ஆதார் கார்ட் விஷயம் வெளிய சுத்துறது வரை எல்லாமே இதில் அடங்கும். என் அக்கௌன்ட்ல…

சுஜாதாவிற்கு ஒரு ட்விஸ்ட்… 

கதை எழுத அனுபவ அறிவு அவசியமா ? -சுஜாதா பெங்களூரில் ஒருநாள் ராத்திரி, ஓர் அன்பர் என்னை சந்திக்க வந்தார். “நீங்கள் எழுதும் எந்தக் கதையையும் போட்டு விடுகிறார்கள். ஆனால், நான் எழுதிய சிறந்த கதைகள் திரும்பி வந்து விடுகின்றன. இவற்றில் என்ன தப்பு என்று ஒருமுறை படித்துவிட்டுச் சொல்லுங்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் கதை எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்.” என்று பை நிறைய வைத்திருந்த கையெழுத்துப் பிரதிகளை எடுத்து மேஜையில் பரப்பினார். நான் அவற்றில்…

Microsoftஇல் வேலை

Bill Gates அவரது Microsoft நிறுவனத்திற்கு ஒரு புதிய Chairman பதவிக்கு ஆள் எடுக்க 5000 நபர்களை Interview எடுக்க வரவழைத்தார்.. அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்று கூடினர்… இதில் நமது ஊரைச்சேர்ந்த ராமசாமியும் அடக்கம்… Bill Gates : “ Thank you for coming…. Those who do not know JAVA may leave for the day…. “ JAVA தெரியாதவங்கள போக சொன்னதும் 2000 பேர் அந்த இடத்தை…

சிறந்த படங்கள் 2017

2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பாகுபலி மாதிரியான பிரம்மாண்டங்களும், நடிப்பில் அழகு சேர்த்த அருவி வரை நிறைய நல்ல படங்கள் வந்தது. அதை பற்றிய ஒரு அலசல் பதிவு இது. சில படங்களுக்கு விமர்சனம் எழுதிருப்பேன். சில படங்கள் ஒரு வாரம் தாமதமாக பார்த்ததால் எழுத வாய்த்திருக்காது. அவ்வாறு தவற விட்ட படங்களையும் இங்கே பார்ப்போம். வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம். பாகுபலி 2 இந்த வருடம் வந்த படங்கள்ல நம் எல்லார் மனதையும் தட்டி சென்றது…

அருவி

அதிக எதிர் பார்த்த ஒரு படம். ஏகப்பட்ட சர்வதேச விழாவில் பாய்ந்தோடி, திரையரங்கை அடைந்துள்ளது. பொதுவாகவே, அவார்ட் படங்களுக்கு தியேட்டரில் கூட்டமும் அவ்வளவாக இருக்காது. இந்த படமும் அப்படியே. ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் எதோ நடந்தேறுகிறது. குடும்பத்தில் இருந்து, சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்படுகிறாள். இதற்கு மேல் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்ற விரக்தி அடைகிறாள். ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்கிறாள். அரங்கிற்குள் சாதாரண அருவியாக செல்லும் அந்த பெண், வெளியே வரும் போது தீவிரவாதி அருவியாக…

எனது பாட்டன்

இன்று 11-12-2017. 12-12-2017 என்ற தேதியில் வரும் நினைவு கூட நம்மில் பல பேருக்கு இன்றைய தேதியை பார்த்து வருவதில்லை அல்லவே? வெறும் பாடபுத்தகத்தில் மனனம் செய்த சாதாரண தேதியாக போய்விட்டது. நாட்காட்டியை கிழிக்கும் போது சில பேர் கவனித்திருக்கக்கூடும். இன்று நம் பாட்டனார் மகாகவியின் பிறந்த நாள். ஆம், இளம் வயதில் தமிழ் இலக்கிய பணி செய்து, அனைவருக்கும் விடுதலை வேட்க்கை தூண்டி, பல அற்புத படைப்புகளை படைத்த மீசை முறுக்கிய எம் மகாகவியின் பிறந்த…

உலகிலேயே நான் தான் உயர்ந்தவன்

ஒரு சமயம் யோகி ஒருவர் ஒரு ஞானியிடம் வந்தார். அவர் ஞானியிடம், “சாமீ… எனக்கு ஆகாயத்தில் பறக்கும் சக்தி இருக்கிறது. பூமிக்குக் கீழ் நீண்ட நேரம் புதையுண்டு மூச்சை அடக்கும் சக்தி இருக்கிறது. தண்ணீருக்குள் அதிக நேரம் மூழ்கி இருக்கும் அபரிமிதமான சக்தியும் இருக்கிறது“ என்றார் பெருமையாக. ஞானி அவர் சொன்னதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. யோகிக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “சாமீ… இந்த விசயங்கள் எல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை அல்லவா…? அப்படியென்றால்…

க.பெ அத்தியாயம் ஒன்று

சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் முதல்பாகம் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். பொதுவாக ஒரு புத்தகம் வாசித்து முடித்த உடன் அதை பற்றி எனது கருத்தை, அந்த புத்தகத்தின் முன்னுரை போல் எழுதுவேன். ஆனால், சுஜாதாவின் புத்தகத்திற்கு அப்படி எழுதுவது அவ்வளவு எளிதல்ல. காரணம், நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அதில் விஷயங்கள் பொதிந்து கிடைக்கும். அதை நாம் மீண்டும் அசைபோட்டு எழுதுவது கொஞ்சம் கடினமே. அதும், க.பெ ல், அவர் சொல்லும் கருத்துக்கள், எழுத்தாளர்கள், தத்துவங்கள், உபநிஷதங்கள்,…