க.பெ அத்தியாயம் ஒன்று

சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் முதல்பாகம் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். பொதுவாக ஒரு புத்தகம் வாசித்து முடித்த உடன் அதை பற்றி எனது கருத்தை, அந்த புத்தகத்தின் முன்னுரை போல் எழுதுவேன். ஆனால், சுஜாதாவின் புத்தகத்திற்கு அப்படி எழுதுவது அவ்வளவு எளிதல்ல. காரணம், நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அதில் விஷயங்கள் பொதிந்து கிடைக்கும். அதை நாம் மீண்டும் அசைபோட்டு எழுதுவது கொஞ்சம் கடினமே. அதும், க.பெ ல், அவர் சொல்லும் கருத்துக்கள், எழுத்தாளர்கள், தத்துவங்கள், உபநிஷதங்கள்,…

மெர்சல்

விஜய் அட்லீ கூட்டணியில் இரண்டாவது படம். தெறியில் மெர்சல் காட்டுன விஜய், மெர்சலில் தெறிக்காவிட்டாரா என்பதே மெர்சல். 3 விஜய். 1 விஜய்க்கு வில்லன் துரோகம் பண்றான். பழிவாங்க இன்னும் ரெண்டு விஜய் வராங்க. எதுக்கு பழி வாங்குறாங்க, என்ன துரோகம் என்பதை மெடிக்கல் மாஃபியா மூலமா ஒரு சமூக கருத்தோட சொல்லி இருக்குது இந்த மெர்சல். படத்தோட மொத்த பாரத்தையும் தாங்கி நிக்குற மனுஷன் விஜய் மட்டும் தான். 2 கெட்டப் ல, 3 விஜய் அதகளம்….

கொடக்கோனார் கொலை வழக்கு

எப்படி எனக்கு இந்த புத்தகம் அறிமுகமானது என்பது ஞாபகம் இல்லை. ஆனால், எதற்காகவோ, எனது புத்தகம் வாங்கும் விருப்பப்பட்டியலில் முன் வரிசையிலே இருந்தது. நாவல் நிகழும் நிலத்தின் பண்புகளை மாற்றாமல், பண்பாட்டு மரபைச் சிதைக்காமல், நிறைய வரலாறு பேசினாலும், சமகால நாவலாக எழுதி இருக்கிறார் அப்பணசாமி. புது எழுத்தளார்களின் புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும் போது ஒரு சிக்கல் உண்டு. முதல் 2,3 பக்கங்களுக்கு அவர்களின் எழுத்து நடை நமக்கு பிடிபடாது. அவர்களின் மொழி நடையை பிடித்து, வாசிப்பிற்குள்…

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்…

நான் ஒரு நாள் எனது நண்பருடன், தேநீர் அருந்த சென்றிருந்தேன். தேநீர் அருந்தி விட்டு, அந்த பிளாஸ்டிக் கோப்பையை அவர் கையில் எடுத்தார். “அதை அங்கேயே வைத்து விடுங்கள், இடத்தை சுத்தம் செய்பவர்கள் எடுத்து போட்டு விடுவார்கள்” என்றேன். ஜப்பான்ல மூன்று வருடம் இருந்த பழக்கம்; அதான் அப்படியே தொடர்கிறது என்று குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டார். தனக்கு உள்ள ஒரு வேலையை, இன்னொருவர் மீது சுமத்தும் இந்த குணாதிசயம் நம்முள் எப்படி வந்தது. இது சோம்பேறித்தனமா?…

நாய்க்கு உணவு

இன்று காலை ஒரு பூங்காவில், அதன் காப்பாளர் தனது வளர்ப்பு நாய்க்கு பிஸ்கட் துண்டுகளை போட்டுக் கொஞ்சிக்கொண்டிருந்தார். அதை பார்த்த, அந்த நாயின் சகாக்கள், அந்த பிஸ்கட் துண்டுகளை அதனுடன் பகிர்ந்துகொள்ள வந்தது. அதை பார்த்த, பூங்கா காப்பாளர், கடும் கோவம் கொண்டு மற்ற நாய்களை விரட்டினார். “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் பிள்ளை தானே வளரும்ங்கிறது” மாதிரி, தெரு நாய்க்கு பிஸ்கட் போட்டா, தன் நாய்க்கு தானே பிஸ்கட் கிடைக்காதா என்ன…?

மகளிர் மட்டும்

இதே செப்டெம்பர் மாதம், 2 ஆண்டுகளுக்கு முன், பிரம்மாவின் ‘குற்றம் கடிதலுக்கு’  நான் மிகவும் ரசித்து விமரிசனம் எழுதினேன். இரண்டு ஆண்டு கழித்தும், அதே சந்தோஷத்துடன் இந்த விமர்சனத்தை தொடங்குகிறேன். காரணம், படம் பார்த்து முடித்த உடன் நமக்குள் ஏற்படும் உணர்வு. குற்றம் கடிதலுக்கு பின், மகளிர்க்காக மட்டும் என்று நம்மை மீண்டும் ஒரு அற்புத உலகிற்கு அழைத்து சென்றமைக்காக இயக்குனர் பிரம்மாவிற்கு பல லைக்ஸ்கள். 3 கல்லூரித்தோழிகள் 38 ஆண்டுகளுக்கு முன் பல காரணங்களால் பிரிகின்றனர். அவர்களின்…

சரித்திர நாவல்களின் அரசர்… (Historical Novels Kings)

இவரை சரித்திர நாவல்களின் அரசர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. அழகு நடை, அட்டகாசமான உவமைகள், பிரம்மாண்ட படைப்புன்னு இவர் செதுக்கிய பார்த்திபன் கனவு, சிவாகமியின் சபதம், பொன்னியின் செல்வன் நாவல்கள், தமிழ் உலகின் முக்கியப் படைப்புகள். எக்கச்சக்க முடிச்சுகள், ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன், மந்தாகினி, பூங்குழலி என்று கற்பனை கதாபாத்திரங்கள் கொண்டு இவர் தீட்டிய பொன்னியின் செல்வன் நாவல் இன்றைக்கும் புகழ் பெற்றதாக திகழ்கிறது. தமிழ் புத்தகம் வசிப்பவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவையாவது…

The Mother I never knew

பெண்கள் தங்கள் வாழ்வில் படிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் என்ற விகடன் கட்டுரையின் மூலமே எனக்கு இந்த புத்தகம் பரிச்சயம். இந்த புத்தகத்தின் எழுத்தளார் சுதா மூர்த்தி. சுதாவை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை பார்த்தபின் இந்த புத்தகத்தை பற்றிய முன்னுரைக்கு செல்வோம். சுதா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் (IISc)இல் கணினி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். 50 ஆண்டுகளுக்கு முன்னர் அக்கல்லூரியில் முதுகலை பட்டம் படித்த ஒரே பெண் அவர் தான்….

சில இறகுகள் சில பறவைகள்

2016 ஆம் ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருது பெற்ற வண்ணதாசனின் கடிதத்தொகுப்பு. கல்யாணி.சி என்று நெருக்கமானவர்களால் அறியப்படும் வண்ணதாசன் (அது அவர் இயற் பெயரும் கூட), கல்யாணியாய் தனது நட்பு, தோழமை வட்டாரங்களுக்கு எழுதிய கடிதங்கள் இந்த புத்தகம். வெறும் 200 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தை, ஒரு கதை புத்தகத்தை போல் என்னால் கடந்து செல்ல முடியவில்லை. தினமும் 10 பக்கம் மட்டுமே வாசிக்க முடிந்தது, அதன் ரசத்தை ஒரு நாள் முழுவதும் லயிக்க முடிந்தது….

தரமணி

ராமோட “இங்கிலிஷ் எம்.ஏ” படம் என்று சொல்லலாம். ரொம்ப ஆழமான,ரொம்ப எதார்த்தமான விஷயங்களை போற போக்குல சொல்லி இருக்குற ராம் பாராட்டுக்குரியவர். ஒரு துணிச்சலான முயற்சி. தரமணியில், படத்தின் பேசு பொருள் கதாநாயகன், கதாநாயகி அல்ல. கருப்பொருள், நமக்கு நடக்கும், பார்க்கும், கேட்கும், இயங்கும், நம்மை இயக்கவும் சில நிகழ்வுகள். ஆண்ட்ரியா, அஞ்சலி, இன்ஸ்பெக்டர் மனைவி முதல் வீனஸ் வரை, அனைத்து பெண் கதாபாத்திரமும் அதன் இயல்பை பேசியது கனகச்சிதம். படத்துல கவனிக்க வைக்குற ரெண்டு முக்கியமான…

பெயர்கள்…

நம் வீட்டில் இக்காலத்தில் குழந்தைகளுக்கு எப்படி பெயர்கள் வைக்கிறோம் என்பதை பற்றி ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். நாம் வைக்கும் பெயர்களுக்கு அர்த்தமே தெரியாமல் சம்ஸ்கிருத பெயர்களை வைக்கிறோம். இந்தி வழி சம்ஸ்கிருதச் சொற்கள் வருகையில் அவை உருமாறி நாம் ஏதாவது கேட்கப்போகும் முன் வாயில் விரல்வைத்து ”உஷ்! உஷ்!’ என அதட்டுகின்றன. சுமேஷ், [சும+ ஈஸன்] சுரேஷ் [சுர+ ஈஸன்] கணேஷ் [கண+ஈஸன்] ரமேஷ் [ரம்+ ஈஸன் அல்ல ரம + இஸன்] –…

உலகப்புகழ்பெற்ற மூக்கு

உலகப்புகழ்பெற்ற மூக்கு வைக்கம் முகமது பஷீர் அவர்களின் ஒரு சிறுகதை தொகுப்பு. பொதுவாக, சிறுகதை தொகுப்புகளை தொகுக்கும் தொகுப்பாளர்கள், அந்த தொகுத்த புத்தகத்திற்கு பெயர் வைப்பதில்லை. அந்த தொகுப்பில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஒரு கதையின் பெயரையே வைப்பார்கள். அந்த வகையில் சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி? புத்தகமொரு சான்று. சரி, விஷயத்திற்கு வருவோம். சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்னர் புதுயுகம் தொலைக்காட்சியில் காலை வேளைகளில் ‘இனியவை இன்று’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் (இப்பொழுதும் வருகிறதே என்று நீங்கள்…