குற்றம் கடிதல் (Kutram Kadithal)

குற்றம் கடிதல்- படத்தின் தலைப்பின் வசீகரமும், “காலை நிலா” பாடலின் காட்சி அமைப்பும் என்னை இந்த படத்தை பார்க்கத்தூண்டியது. இந்த ஆண்டில் தமிழ் சினிமா உலகத்துக்கு தரமான படங்கள் வந்த வண்ணம் உள்ளன. என்ன ஒரு கதை களம்… மயிர் கூச்சரியும் நிகழ்வுகளும், கண்ணீர் துளிகளும் படம் பார்க்கும் அனைவருக்கும் இருக்கும். 1 மணிநேரம் 55 நிமிடம் படம் முழுக்க ஒரு தெரிந்த முகம் கூட இல்லை. ஆனால் நம் பக்கத்து வீட்டு அக்கா, எதிர் வீட்டு மாமா, தெரு ஓரம் நின்னுட்டு இருக்குற ஆட்டோ அண்ணன், வீட்டு பாடம் பண்னிட்டியான்னு மிரட்டும் டீச்சர்ன்னு எல்லாம் நம்மை சுத்தி இருக்குற, நடக்குற விஷயம் போல் தோன்றுது. ஒரு ஆசிரியை வகுப்பரைக்கு செல்கிறார், அங்கு ஒரு விபரீதம் நடக்கிறது. என்ன விபரீதம் அதிலிருந்து அந்த ஆசிரியை எப்படி மீண்டார் என்பதே கதை.

 

ஒரு கிருத்தவ பெண் கலப்பு திருமணதிற்கு பிறகு முதல் முதலாக பொட்டு வைத்துக்கொள்கிறாள். அன்றே தனக்கு இந்த விபரீதம் நடந்ததால், தான் தன் மதத்திற்கு மாறாய் நடந்ததால் தான் என்று பதறும் இடம், தன் மனைவிக்கு ஏதும் நடந்து விடக்கூடாதுன்னு பொறுமையுடன் கையாளும் கணவன், பள்ளியில் பாலியல் கல்வியின் முக்கியம் பேசும் அழகு ஆசிரியை, அதில் உள்ள பிரச்சனையை மட்டும் யோசிக்கும் சக ஆசிரியர்கள், இந்த விஷயத்துல எனக்கு நிறைய அனுபவம் இருக்கு, நீ வீட்டுக்குப் போ நான் ஹாண்டில் பண்ணிக்கிரேன்னு தைரியம் சொல்லும் பள்ளி முதல்வர், பள்ளி முதல்வருக்கு ஆறுதல் சொல்லும் அவர் மனைவி, தப்பு செஞ்சவன் தான் வலி அனுபவிக்கனும்ன்னு பொது ஞாயம் பேசும் ஆட்டோ அண்ணன், அழுகையிலேயே நம்மளையும் அழுக வைக்கும் பையனின் அம்மான்னு படத்துல ஏகப்பட்ட அருமையான விஷயங்கள் சொன்ன இயக்குனர் பிரம்மாவை சிகப்பு கம்பளம் விரித்து தமிழ் சினிமா உலகம் வரவேற்கிறது. பாலியல் கல்வியை மிக அழகாக, எப்படிச் சொன்னால் நன்றாக இருக்கும் என்பதை காட்சியாக இல்லாமல் பாடமாகவே காட்டியுள்ளமைக்கும் இயக்குனர்க்கு சபாஷ் போடலாம். புதுமனத்தம்பதியர்க்கு தேவையான புத்தகம் பரிசளிக்கும் மேலாளர், தன் தவறை ஆசிரியராக ஒற்றுக் கொள்ளும் மெர்லின்க்கு புத்தகம் பரிசளிக்கும் ஆட்டோ அண்ணன், அழகு தருணங்கள்.

 

கண்டிப்பின் அவசியமும், எதற்கு கண்டிக்க வேண்டும் என்பதையும் ஒரு முத்தத்தில், பாடலில் சொன்னது அழகு. “இருக்கற புள்ளையோட அருமைதான் உனக்குத் தெரியும், இல்லாத புள்ளையோட வலி என்னன்னு எங்களுக்குத் தெரியும் போப்பா!! அப்படி எல்லாம் விற்றமாட்டோம்…” என்பது போன்ற கனமான வசனங்கள் படத்தில் சாதாரணமாக கடந்தது செல்லுகிறது. உடனே மீடியாக்காரங்க கேமராவத் தூக்கிட்டு வந்துடுவானுங்க என்று ஒரு பக்கம் மீடியாக்களுக்கும் சவுக்கடிகள் விழுகின்றன. அதைச் சொல்லி முடிப்பதற்குள் ஒரு பைட்ஸ் எடுத்துட்டா நாளைக்கு ஹெட்லைன்ஸ் பக்காவா இருக்கும் என மீடியாக்களின் பசியையும் போகிறபோக்கில் ஆங்காங்கே சீண்டியிருக்கிறார்கள்.

 

படத்துக்கு தோதான இசையில் மின்னுகிறார் ஷங்கர். மது பாலகிருஷ்ணனின் குரலில் காதல் நிலா பாடல், பாரதியார் பாடல் எல்லாம் சரியான இடத்தில் படத்தில் இணைவது சிறப்பு. படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரமும் தங்கள் வேலையே செவ்வன செய்திருக்கிறார்கள். அதில் சிறுவன் செழியன் பண்ணும் குறும்புத்தனமும், லூட்டிகளும், அவன் குணாதிசியமும் லைக்ஸ் அள்ளுகிறது. பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இப்படம்,  இந்தாண்டின் சிறந்த தமிழ் சினிமாக்கான தேசிய விருதும் பெற்றுள்ளது.

 

சமுக அக்கறை கொண்ட படங்கள் வரிசையில் குற்றம் கடிதல் படத்திற்கும் ஓர் இடம் உண்டு. அடுத்த தலைமுறையை உருவாக்கும் முக்கியத்துவம் ஒவ்வொரு ஆசிரியர்க்கும், ஊடகத்திருக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை இப்படம் பறைசாற்றுகிறது.

குற்றம் கடிதல் – பிழை திருத்தி

 

அன்புடன்

பிரதீப்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s