பொறியியலின் கறுப்புப் பக்கம்…

#‎Education‬ ‪#‎Engineering‬ ‪#‎BlackBox‬
பொறியியலின் கறுப்புப் பக்கம்! என்ற தலைப்பில் சில வாரம் முன் விகடனில் ஒரு கட்டுரை வந்தது. அதை படித்து விட்டு பல வாசகர்கள், தங்களின் எண்ணத்தை சொல்லி இருந்தனர். அந்த ரியாக்ஷன் குவியலுக்கு என்னால் அனுப்ப முடியாத இந்த கட்டுரையை இங்கு எழுதுகிறேன்.
நானும் சராசரி மாணவனை போல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், எதற்க்கு இன்ஜினியரிங் படிக்க போறோம்ன்னு தெரியாமல், அந்த படிப்பின் உபயோகம் என்னனும் தெரியாமதான் பொறியியல் சேர்ந்தேன்.

4 வருடம் முடிந்து வெளியே வரும் போது, புத்தகத்தில் இருந்த ஃபார்முலா ஞாபகம் இருந்தாலும், எங்க பயன்படுத்த்துவது என்று தெரிய வில்லை. இதற்க்கு பெற்றோர் என்னை எனக்கு பிடித்த்தததை படிக்க வைக்க வில்லை என்றோ, வாத்தியார் ஒழுங்காக பாடம் சொல்லி தர வில்லை என்றோ, கல்லூரி நிர்வாகம் சரி இல்லை என்றோ யாரயும் குறை கூற நான் விரும்பவில்லை. கூறும் உரிமையும் எனக்கு இல்லை. காரணம் நான் ஒழுங்க படிக்கலனா வேற யார குறை கூற முடியும். உடனே, நாம் எல்லார் மனத்திலும் உதிக்கும் ஒரு பதில், “கரக்ட் தான், நீ தான் புரிஞ்சு படிச்சி இருக்கணும், அது உன் தப்பு தான்”. சரி, அது என் தப்பு தான். ஆனா 12ஆம் வகுப்பை வரை மார்க் மட்டுமே உலகம்ன்னு படிக்க வைக்கும் போது, திடீர்னு இன்ஜினியரிங் முதலாம் ஆண்டுல இருந்து நான் புரிஞ்சு படிச்சி விடுவேனா? சரி … நாங்க உன்னை 12 ஆம் வகுப்பு வர புரிஞ்சு படிக்க கூடாதுன்னு சொன்னோமான்னு கேட்கலாம்.

அங்க தாங்க பிரச்சனையே. புரிஞ்சு படிக்கிறதுனா என்ன? நாம் ஊர்ல ஆங்கில வழி கல்வி படிக்கிற பசங்களின் பெற்றோரில் 80% பெருக்கு புரிஞ்சு படிக்கிறதுனா என்னனே தெரில. அவுங்களை பொருத்தவரை, புரிஞ்சு படிக்கிறதுனா இங்கிலிஷ்ல உள்ளதை தமிழ்ல புரிஞ்சுகிறதுன்னு அர்த்தம். “Atom” னா என்னமான்னு கேட்கும் பையனுக்கு, அம்மா சொல்லும் பதில் தமிழில் “அணு” என்று பொருள். இதான் புரிஞ்சு படிக்றது. அணு என்றால் என்ன? தெரியாது. காரணம் 2 மார்க் வினாவுக்கு தேவாயன வரிகளை மனப்பாடம் செய்தாகி விட்டது.. 9ஆம் வகுப்பில் படித்த “Surface Tension” என்றால் எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும்.

எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் 3ஆம் வகுப்பு படிக்கும் தனது பையனுக்கு கணக்கு சொல்லி கொடுக்கிறார். சிறு வயதில் “Statement Problem” என்றால் அது பெரிய கேள்வி. 5 மதிப்பெண். ஆனாலும் அங்கயும் அதே கூட்டல், பெருக்கல் தான் இருக்கும். கேள்வி இதோ, 5 மாம்பழங்களின் விலை 25 ரூபாய், ஒரு மாம்பழத்தின் விலை என்ன? அடுத்தது, ஒரு ஆப்பிளின் விலை ரூபாய் 8 எனில் 6 ஆப்பிளின் விலை என்ன?
அவர் தனது பையனுக்கு சொன்ன குறிப்பு கண்டு நான் அசந்துவிட்டேன். தம்பி, நல்லா கேட்டுக்கோ, மாம்பழம் ப்ராப்லம் வந்த வகுக்கணும், ஆப்பிள் ப்ராப்லம் வந்த பெருக்கணும். அவன் கணக்குல 100/100 வாங்கிட்டான். அதான் இப்ப உள்ள பெற்றோருக்கும் முக்கியம்.

நாம் இப்பொழுது யாரை குற்றம் சொல்லுவது. மார்க் முக்கியம் தான் ஆனா அதை விட அறிவு முக்கியம். அந்த பையனுக்கு கண்டிப்பா வளர்ந்த உடன் பெருக்கல்னா என்ன வகுத்தல்னா என்னன்னு தெரிய தான் போகுது. ஆனா இங்க இருந்து தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. இந்த வழி கல்வியில் தான் நாம் சிறு வயதில் இருந்து படித்து வருகிறோம். 12 ஆம் வகுப்புல, நல்ல மார்க் வாங்கினா தான் நல்ல காலேஜ் போக முடியும், நீ மக் அப் பண்ணியாவது படி படின்னு படிக்க வைக்கப்படுது.

போன வருஷம் IITJEE ல ஸெலெக்ட் ஆனா தமிழ்நாடு பசங்களின் எண்ணிக்கை 65. தமிழ் நாட்டுல வருஷத்துக்கு 8 லட்சம் மாணவ மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதுறாங்க. உலக அளவுல மதிக்கப்படுகிற IIT கல்வி தேர்வுல 65 பேர் மட்டும் தான் தகுதி ஆக முடியுதுனா, நாம் கல்வி தரம் எந்த அளவுல இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க.

மூளைக்கு ஒரு இன்ஜினியரிங் காலேஜ். தங்கள் கல்லூரிக்கு அவுங்க கொடுக்கிரே விளம்பரம் இதோ: இலவச பேருந்து வசதி, எல்லா வகுப்பறையிலும் ஏர் கன்டிஷண்டு வசதி, எதுக்கு எல்லா வகுப்புலயும் நல்ல தூங்கவா? ஏதோ ஒரு இன்ஜினியரிங் காலேஜ்ல என்ன படிக்க போறோம்ன்னு தெரியாம, ஏன் இன்ஜினியரிங் படிக்கிரோம்ன்னும் தெரியாம தான் நம்மில் பல பேர் இன்ஜினியரிங் சேர்கிறோம்.

இன்றிய பெற்றோரின் மனநிலை என்னனா இன்ஜினியரிங் படிச்ச ஏதாவது கம்பனில வேலை கிடைக்கும்ங்றது தான். நம்ம அப்பா அம்மா காலத்துல படிச்சவங்கள யார கேட்டாலும், B.Sc, B.Comன்னு சொல்லுவாங்க. காரணம் அப்போ இருந்த ட்ரெண்ட் அது. எல்லா டிகிரிக்கும் ஒரு சேச்சுரேஷேன் லிமிட் உண்டு. அந்த நிலையை இன்ஜினியரிங் தொற்றுச்சு.

எந்த ஒரு கார்பொரேட்டும் டிகிரி மட்டும் வச்சி இருக்குறவன எதிர் பாக்குறது இல்ல. நான் மெக்கானிக்கல் படிச்சி இருக்கேன்னு சொல்லி எந்த கம்பெனில வேல கேட்டாலும் கொடுக்க போராதும் இல்ல. காரணம் மெக்கானிக்கல்ங்றது ஒரு பெருங்கடல், அதுல உனக்கு என்ன தெரியும்ங்றது தான் கேள்வி. ரேசியூம்ல விருப்பப்பாடம்ன்னு டாபிக் ஃபில் பண்ணுவாங்க. அது இந்த விஷயத்தை சோதிக்கவே.

அதெல்லாம் விட்ருவோம், பெற்றோர்கள் தயவு செய்து பிள்ளைகளை மார்க்குகாக மட்டும் படிக்க சொல்லாதீங்க. மார்க் எடுக்களனா வரும் கஷ்டத்தை சொல்லி பயமுறுத்தாதீங்க. அறிவை மதிப்பிட கூடிய ஒரு அலகு தான் மதிப்பெண். ஆனா இப்ப மார்க் உள்ளவன் எல்லாம் அறிவாளி இல்ல. இதன் நிதர்சனமா உண்மை.

இது வெறும் வரைவு ஆவணம் தான். இந்த மனக்குமுறல் தொடரும்.

அன்புடன்,
பிரதீப்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s