வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க- எப்பவும் போல ஹீரோவும் சந்தானமும் எதோ பண்ண, இவுங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி பண்ணாங்கனு ஒரு ராஜேஷ் பட ஃப்லேஷ்பேக் ஓட படம் ஆரம்பிக்குது. வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்கன்னு பெயர் வச்சதுக்கு பதிலா “ஒன்ன குடிச்சவங்கன்னு” வச்சி இருக்கலாம். படம் முழுக்க ரெண்டு பேரும் குடிச்சிட்டே இருக்காங்க. புது வகையான மது விலக்கு போராட்டமோ என்னமோ, அரசியல் எதுக்கு நமக்கு?. ராஜேஷ் படத்தோட யுஷுவல் ஃபார்முலா, எப்பவும் போல படத்துல கதை இல்ல. ரெண்டரை மணி நேரம் காமெடி யெண்டர்டைனெர்ன்னு படத்த ஓட்டிருக்காங்க. லவ் / கல்யாணம் நால ஃபிரண்ட்ஷிப்க்கு பிரச்சனை, கிளைமாக்ஸ் என்ன. ஏற்கனவே அரச்ச மாவுல தான், திரும்ப தோச சுட்டு இருக்காரு இயக்குனர். படம் முழுக்க வர ஆர்யாவும் சந்தானமும் எதாவது சொல்லி சிரிக்க வைக்றாங்க. சில நேரம் கடுப்பும் ஏத்துறாங்க.

அடிக்கடி ஆர்யா “செம களாய் மச்சி, செம களாய் மச்சி”ன்னு சொல்றது கொஞ்சம் காண்டு யேத்துது. ஃபாக்டு, ஃபாக்டு, ஃபாக்டு (factu) ன்னு முந்தின படத்துல சொல்ற மாதிரி இந்த படத்துல ஒன்னு, ஒரே மாதிரி சீன் சீக்குவன்ஸ், பீர் பாட்டில்ன்னு, கொஞ்சம் எதாவது புதுசா யோசிங்க பாஸ். தமண்ணாஹ் இந்த படத்துல உண்மையா நடிச்சி இருக்காங்க. கொடுக்குறே ரியாக்சன்லையும், சிணுங்கல்லயும் நம்ம மனசுல நிக்றாங்க. சந்தானம் வித்யாவ கூப்டற பெயர் எல்லாம் ரசனை. சுவாமிநாதன் அவர் பாணில கொஞ்சம் பேசிட்டு போறாரு.

என்னடா படம் முடியவே மட்டேன்குதுன்னு நாம யோசிக்கும் போது இன்னொரு ஹீரோ இன்ட்ரோ கொடுத்து படம் முடிய போற உணர்வ தராரு. ஏகப்பட்ட ஃப்லேஷ்பேக் வச்சி, என்ன நடந்ததுனான்னு சொல்லும் போது, என் பக்கத்துல உட்காந்து இருந்தவரு நீ சொல்லிட்டே இரு நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன்னு கெளம்பி போயிட்டாரு. அத்தன ரீவைண்டிங் படத்துல.

நிராவ் ஓட சினிமோ எப்பவும் போல அழகா இருக்கு. எல்லாரும் பாக்க ரொம்ப ஆவாசா இருக்காங்க. எவண்டா ஃபிரான்ட்டு, சுப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபல் பாடல்கள் ஜாலி ரகம். இமான் ஓட பி.ஜி.எம். ஓகே ஓகே ரகம். மத்தபடி படத்துல வேற ஒன்னும் இல்ல. வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க- பெயில்(Fail) ஆய்டாங்க

அடுத்த படத்தில சந்திப்போம்,

பிரதீப்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s