தனி ஒருவன் (Thani Oruvan)

தனி ஒருவன்- வேலாயுதம் படத்துக்கு அப்பறம் ஜெயம் ராஜாவ ஆளையே காணும்ன்னு யோசிக்கும் போது, மோகன் ராஜான்னு பெயர் மாத்திட்டு I am back ன்னு வந்துருக்றார். சுபா ஓட இணைந்து இந்த படத்த அவரே (அவரே அவரே ) எழுதி இயக்கி இருக்கறார்.

சஸ்பென்ஸ்னா படத்துல ஒன்னும் இல்ல. ஒரு பேடன்ட்(patent) பண்ண கூடிய மெடிசின், இந்திய மக்களுக்கு பயன்பட வைக்கணும் நினைக்றவங்களுக்கு, எதிரா வில்லன். அவருக்கு எதிரா நம்ம ஹீரோ. அவளோ தான். சக்திவாய்ந்த எதிரியான அரவிந்த்சாமியை நாயகன் ஜெயம்ரவி எப்படி எதிர்குறார், இதே பழைய கதைய கொஞ்சம் பூசி முழுகி அழகு படுத்தி இருக்காங்க.

படத்துல ஏகப்பட்ட பாசிடிவ் விஷயங்கள். விறு விறு திரைக்கதை நிறைய நேரம் சீட் முனைல நம்மல உட்கார வைக்குது. அடுத்து, ஜெயம் ரவி. ரொம்ப நாள் அவர் எதிர் பாத்துட்டு இருந்த ஒரு ஆக்க்ஷன் படம், அவருக்கு கிடைச்ச தீனி. கடந்த ரெண்டு படத்துல நம்ம வாய்ல வாங்குன திட்டு எல்லாத்துக்கும் பதில் சொல்ற மாதிரி, கிடைச்ச எடுத்துல எல்லாம் பெர்ஃபோர்மான்ஸ் பின்னி இருக்குறார். ஆக்க்ஷன் படம்ன்னு சொன்னாலும், வர ரெண்டே ரெண்டு ஸ்டன்ட் கொரியோக்ராஃபி சூப்பர்.

 

வயசு கொறைய எதோ வரம் வாங்கிட்டு வந்து இருக்றாங்க போல நம்ம நயன்தாரா. படம் முழுக்க அழகுல நம்மல மயக்குறாங்க.எனக்கு லவ் ப்ரொபோஸ்ன்னா பண்ண தெரியாது, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சிணுங்கும் போதும், ரவி இக்கட்டான சூழல் ப்ரொபோஸ் பண்ணும் போதும், நமக்கே ஒரு தவிப்பு ஏற்பட தான் செய்யுது. உன் நிதானத்த இழந்துட்டியேன்னு சொல்லும் போதும், எது பேசினாலும் கட்டி கொண்டு பேசவும்ன்னு நயனதாரா எழுதும் காட்சியும் அழகு படைப்பு.

 

அரவிந்த் சுவாமி, ரொம்ப அனுபவ நடிப்ப வெளி காட்டி இருக்காரு. ஹைஃபை, ஹைலி க்வாலிஃபைட் பத்மஸ்ரீ வில்லன். மிக பெரிய பாதகமான விஷயத்த இதழ் புன்னகையில் செய்யுற அரவிந்த் ஓட நடிப்பு பலே பலே. அதிலும் கடைசி காட்சி அருமை.

 

தம்பி ராமையா, நாசர், வம்சி கிருஷ்ணன் எல்லாரும் தங்களோட வேலைய ஒழுங்கா செஞ்சிட்டு போய் இருக்காங்க. ரவி ஓட போலீஸ் நண்பர்கள இன்னும் பயன் படுத்தி இருக்கலாம் ராஜா. மந்திரி, முதலமைச்சர் விஷயத்துல தலை இடற போலீஸ்க்கு மேல் அதிகாரியிட்ட இருந்து எந்த அழுத்தமும் இல்ல, அரசியல்வாதி தம்பி ராமையா கரக்டர் நம்பும் படி இல்ல, உலக புகழ் பெற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனர் இறந்ததுக்கு எந்த விசாரணையும் இல்ல, இந்த மாதிரி சில விஷயங்கள் படத்துல இல்ல மிஸ்டர் ராஜா.

இரண்டாம் உலகம்க்கு அப்பறம் வெல்கம் பாக் ஒளிபதிவாளர் ராம்ஜி. ஹிப் ஹாப் தமிழா ஓட பாடல் வரிகளும், இசையும் படத்தோட ஒன்றுது படத்துக்கு ஏத்த விறு விறுப்பும், சுறு சுறுப்பும் இருக்கு. இந்த ஆண்டு வெளி வந்த படங்கள்ல ஒரு தரமான தமிழ் சினிமா. தனி ஒருவன்- தனித்து போராடி.

 

அடுத்த படத்துல சந்திப்போம்,

பிரதீப்  

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s