சரித்திர நாவல்களின் அரசர்… (Historical Novels Kings)

இவரை சரித்திர நாவல்களின் அரசர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. அழகு நடை, அட்டகாசமான உவமைகள், பிரம்மாண்ட படைப்புன்னு இவர் செதுக்கிய பார்த்திபன் கனவு, சிவாகமியின் சபதம், பொன்னியின் செல்வன் நாவல்கள், தமிழ் உலகின் முக்கியப் படைப்புகள்.

எக்கச்சக்க முடிச்சுகள், ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன், மந்தாகினி, பூங்குழலி என்று கற்பனை கதாபாத்திரங்கள் கொண்டு இவர் தீட்டிய பொன்னியின் செல்வன் நாவல் இன்றைக்கும் புகழ் பெற்றதாக திகழ்கிறது. தமிழ் புத்தகம் வசிப்பவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவையாவது வாசிக்க ஏங்கும் புத்தகம் பொன்னியின் செல்வன்.


ஒரு சோழ சிற்றரசன் கப்பம் கட்டா தன்னாட்சி புரிய அவன் கண்ட கனவாக பார்த்திபன் கனவு, தன் காதலி சிவகாமி கொண்ட சபதத்தை நிறைவேற்ற புலிகேசி அரசனை வென்று வீழ்த்தி, சிவகாமியை மீட்டேடுத்த நரசிம்ம பல்லவன் கதை சொல்லும் சிவாகமியின் சபதம்ன்னு நம் மனதை கொள்ளை கொண்ட நாவல்கள்.

சரித்திரம் மட்டும் அல்லாமல், சமூக சூழலை உலகுக்கு பறைசாற்றிய கள்வனின் காதலி, தியாக பூமி கதைகள் அழகு படைப்பு. இந்தியா சுதந்திரம் வாங்கும் சமயத்தில் இருந்த சமூக இன்னலையும், குடும்ப பிரச்சனைகளையும் எதார்த்தமாக சொன்ன அலை ஓசை புத்தகம் சாகித்திய அகாதமி விருது (முதல் தமிழ் புத்தகம்) வென்றது.

மது விலக்கு, சாதி ஒழிப்பு, காந்திய கொள்கைகள் என்று தன்னுடைய நாவலிலேயே பிரச்சாராம் செய்தார்.
நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடன் என்று பல இதழ்களில் பணி புரிந்தார். தனது மனைவியின் பெயர் கல்யாணியை தனது இயற்பெயரோடு சேர்த்து திருமாலின் 10ஆவது அவதாரமான கல்கியை தனது புனைப்பெயராக சூட்டிக்கொண்டார்.

என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவரான கல்கி, தமிழ் எழுத்து உலகை ஆள புத்தமங்கலத்தில் (மயிலாடுதுறை அருகில்) பிறந்த தினம் இன்று.

Advertisements

One Comment Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s