‎டிஜிட்டல் இந்தியா‬

இந்த வாரம் இதான் ஹாட் ஹேஷ்டாக்… ‪#‎டிஜிட்டல்இந்தியா‬

அப்படினா என்னனே தெரியாம தான் நம்மில் பல பேர் ரெயின்போ (Rainbow DP) ப்ரொஃபைல் பிக்சரா வச்ச மாதிரி (ஹையோ…!!! ஹையோ…!!!), இப்ப மூவர்ண கொடி வச்சி இருக்கோம்.

அது என்னனு ஒரு சின்ன தொகுப்பு:

டிஜிட்டல் இந்தியா திட்டம் பயன்பாட்டிருக்கு வரும் பட்சத்தில், ஏறக்குறைய இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு, இந்த ஆண்டின் இறுதிக்குள் இணைய இணைப்பு, உங்களின் அனைத்து அரசாங்க ஆவணங்களையும். நீங்கள் இணைய லாக்கரில் பத்திரமாக வைத்துக் கொள்ளும் வசதி, 2018க்குள் நாற்பத்தி இரண்டாயிரம் கிராமங்களுக்கு மொபைல் சேவை, அரசாங்கப் பொதுச் சேவைகளை இணையத்தின் மூலம் இணைக்கும் திட்டம், மின்னணுச் சாதனங்களின் உற்பத்தி, இணையத்தின் வழி மக்களின் ஆலோசனைகள் பெருதல்ன்னு பட்டியல் நீளுது…

இதற்க்கு முதலீட்டாக கூகுள், மைக்ரோசாப்ட், டிசிஸ், இன்போசிஸ் என்று பல உள்நாட்டு மற்றும் பன்னநாட்டு நிறுவனங்கள் களம் இறங்க உள்ளது.
இதில் நாட்டில் முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை (WiFi) திட்டத்தை கூகுள் கையில் எடுத்துள்ளது. முதல் கட்டமாக குறைந்தது தினமும் ஒரு கோடி மக்கள் கடந்து செல்லும் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த முதல் கட்ட பணியை ஆரம்பித்துள்ளது.

இந்தியாவை இணையம் மூலம் இணைக்கும் இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் பல நல திட்டங்கள் கொண்டு இருந்தாலும், அரசாங்க மருத்துவனையில் இருக்கும் கடைநிலை ஊழியனுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை, அரசாங்க வங்கிகளில் வந்து நிறுக்கும் முதியவர்களையும், வறியவர்களையும் வங்கி ஊழியர்கள் மரியாதை இல்லாமல் அழைக்கும் விதம், அரசாங்க பேருந்துகளில் இருக்கும் ஓட்டைகள், டாஸ்மாக்கே கதி என்று தவம் கிடக்கும் குடிமகன்கள், தேர்தல் பிரசாரத்தில் மட்டுமே பார்க்க முடியும் மாநில முதல்வர்கள், அமைச்சர்கல்ன்னு இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு யார் தீர்வு யோசிக்க போறான்னு தெரில.

இதற்க்கும் முன்னால், மனிதர்கள் எல்லோருக்கும் உணவு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், உள்ளூரில் தொழில் தொடங்க இந்தியர்களுக்கு எளிதான வழிமுறைகள், விவசாயத்துக்கான நீர் ஆதாரம், காவேரி நீர் மேலாண்மை, நசிந்து கொண்டு இருக்கும் கல்வி தரம், மழை இல்லாமல் வறண்டுப் போகும் பூமி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, முதியவர்களின் பாதுகாப்பு, பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகள், கொலைக் குற்றங்கள், தீவிரவாதம் என்று முதல் நிலை பிரச்சனைகளுக்கு அனைவருக்கும் இணையம் தீர்வாகுமா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s