ATM அக்கப்போர்…

மாசக்கடைசி… எ.டி.எம்ல வரப் போறதோ ஒரே ஒரு 100 ருபாய் தாலு.. இதுக்கு கட்டு கட்டா எண்ணுறது மாதிரி சவுண்ட் வருது… இந்த எ.டி.எம் அக்கப்போரு தாங்கலப்பா… ‪#‎MonthEnd‬ ‪#‎ATM‬ ‪#‎Akkappor‬

மாரி…!!!!

தீபாவளிக்கு விஜய் டி.வில மாரி படமாம்… இனி விஜய் டி.வில மாதம் மும்மாரி தான்….

டெல்லி அரசு பஸ் (Govt. Bus)

டெல்லில எல்லா அரசு பஸ்லயும் கண்காணிப்பு கேமரா மற்றும் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்த போறாங்களாம்… நம்ம ஊர் பஸ்ல உட்கார சீட்டே இல்ல…

பெங்களூர் நிலை…

புரட்டாசி மாசத்துல, பங்குனி வெயில் மாதிரி சூரியன் பல்ல காட்டிட்டு அடிக்குது… அறிவிக்கப்படாத மின்வெட்டு… வீட்ல தண்ணீ வரல… இதெல்லாம் தமிழ் நாட்ல உள்ள பிரச்சனைன்னு நினைக்காதீங்க…. பெங்களூர்ல என் வீட்ல உள்ள பிரச்சனை… இது முக்கியமா உனக்கு என்னப்பா பெங்களூர்ல நல்ல குளு குளு குளுன்னு கலர்ஃபுல்லா இருப்பன்னு சொல்ட்ரவனுக்கு… கடுப்பேத்துறார் மை லார்ட்… ‪#‎currentcut‬ ‪#‎Bangalore‬ ‪#‎horrible‬ ‪#‎nowater‬ ‪#‎hot‬

FB Likes…

ஒரு பையன் பக்கம் பக்கமா கட்டுரை எழுதி ஃபேஸ்புக்ல போட்டா 10 பேர் லைக்ஸ் போடுறான்… அதே ஒரு பொண்ணு “Feeling Sad”ன்னு ஒரு ஸ்மைலி போட்ட போதுமே… 2.4k Likes 1.2k Comments 980 Shares நம்ம போஸ்ட்க்கு கீழ எப்ப தான் இப்படிலாம் வரப்போதோ… Feeling Sad….

Thoongavanam

Watched the original script of Thoongavanam… Clean and neat plot of Police Thriller…. Well choreographed actions sequences…. and satisfying last minutes makes the movie good. The hero finally vindicated himself at the end…perhaps not… Will he survive? The movie is sort of exhausting. Scenes perfectly matches with the Thoongavanam trailer in looks, costumes, ambience and…

சரவணா ஸ்டோர்ஸ் – ஜனல் (Saravana Stores Jannal)

சரவணா ஸ்டோர்ஸ் என்ன சபர்மதி ஆஷ்ரமமா… அத உருவாக்க தன் வாழ்க்கையே அர்பணிச்சாருன்னு சொல்றாங்க… இதுல ஜனல், ஜனல் ஒரிஜினல் வேற…

புலி (Puli)

புலி- சிம்புதேவனோட அடுத்த பிரம்மாண்ட படைப்பு, விஜய்யோட புது அவதாரம்ன்னு ஏகப்பட்ட பில்ட் அப் ஓட இந்த படம் ரிலீஸ் ஆயிருக்கு. ஒரு கொடூரமான வேதாளம் கூடத்துல இருந்து நாட்ட எப்படி விஜய் காப்பாத்துராருங்க்றது தான் கதை. இது முதல்லையே நமக்கு தெரிஞ்சுருது. படம் ஆரம்பிச்சதுல இருந்ததே படம் கொஞ்சம் மந்த நிலைல தான் இருக்கு. விஜய் ஓட அறிமுக காட்சி தொய்வா ஆரம்பிக்குது. பழைய கதையும், ரொம்ப பலவீனமான திரைக்கதையும் படத்துக்கு அடி. முதல் பகுதில…

உலக முதியோர் தினம்…

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும் கடந்து போகும் ரயில் நிலையம், டிராஃபிக் சிக்னல், பேருந்து நிலையம், கோவில்கள் முன்னால் நம்மிடம் கையேந்தும் முதியவர்களை பார்க்கும் போது இதயமுள்ள ஒவ்வொருவருக்கும் நெருஞ்சி முள் தைத்தது போல தான் இருக்கும். குடும்ப ஏழ்மை எல்லாம் கடந்து, பிள்ளைகளால் கை விடப்பட்ட பெற்றோர்கள் இன்று தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டோ இல்லை எதோ ஒரு முதியோர் இல்லங்களிளோ தங்கள் பிள்ளைகளின் சிறு பிராயத்தை நினைத்துக்கொண்டு கண்ணீருடன் காலம் தள்ளி கொண்டு இருக்குறார்கள்….