புலி (Puli)

புலி- சிம்புதேவனோட அடுத்த பிரம்மாண்ட படைப்பு, விஜய்யோட புது அவதாரம்ன்னு ஏகப்பட்ட பில்ட் அப் ஓட இந்த படம் ரிலீஸ் ஆயிருக்கு. ஒரு கொடூரமான வேதாளம் கூடத்துல இருந்து நாட்ட எப்படி விஜய் காப்பாத்துராருங்க்றது தான் கதை. இது முதல்லையே நமக்கு தெரிஞ்சுருது. படம் ஆரம்பிச்சதுல இருந்ததே படம் கொஞ்சம் மந்த நிலைல தான் இருக்கு. விஜய் ஓட அறிமுக காட்சி தொய்வா ஆரம்பிக்குது. பழைய கதையும், ரொம்ப பலவீனமான திரைக்கதையும் படத்துக்கு அடி. முதல் பகுதில வர குள்ளர்கள், ஆமை, கருஞ்சிறுத்தை எல்லாம் படைத்தே அடுத்த நிலைக்கு கொண்டு போகுது. ஒரு ஃபாண்டஸி உணர்வையும் தருது. விஜய், ஸ்ரீதேவி, சுருதி, ஹன்சிகா, இமான் அண்ணாச்சி, ரோபோ ஷங்கர், பிரபு, சுதீப்ன்னு ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் எந்த கதாப்பாத்திரமும் மனசுல நிக்கல. உதிரி உதிரியா வர சீன்ஸ்ல அந்த அந்த கதாப்பாத்திரம் பேசிட்டு போது. “என்னங்க…!!!” ன்னு ஒரு டயலாக் பேச நந்திதா. ஏகப்பட்ட கிளை கதைகள் இருந்தநால மெயின் ஹீரோயிசம் அடி வாங்கிட்டு.

நிறைய சீன்ஸ் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்த ஞாபக படுத்துது சிம்புதேவன். 3 வித மக்கள் (ஹீரோ இருக்குற கூட்டம், வேதாளம், குள்ளர்கள் (-புலி) vs ஹீரோ இருக்குற கூட்டம், கிழக்கு கட்டை, செவ்விந்தியர்கள்). இதே மாதிரி ஏகப்பட்ட ஒற்றுமைகள் படத்துல. நட்டி ஓட ஒளிப்பதிவு ஃபாண்டஸி லுக். டி.எஸ்.பி ஓட இசை எப்பவும் போல (உங்களுக்கே தெரியும்). ஏண்டி ஏண்டி பாட்டு முணுமுணுக்க வைக்கும் விதம். கண்டிப்பா சின்ன குழந்தைகள் ரசிக்கும் படமா அமஞ்சிருக்கு. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எம்மற்றமே. புலி- கூண்டில் அடைப்பட்டு.

(சிந்துன மூக்கு சளின்னும் சொல்லலாம்…)

அடுத்த படத்துல சந்திப்போம்…

அன்புடன் பிரதீப்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s