பசங்க 2 (Pasanga 2)

பசங்க 2 – ஹைக்கூ ன்னு படம் பேர் வச்சி வரி விலக்கு காரணமா பசங்கன்னு பேர் மாற்றம் செஞ்சி இருக்காங்க. குழந்தைங்கள வச்சி பண்ற படம், கண்டிப்பா எதோ மெசேஜ் இருக்கும்ன்னு டிரைலர் பாக்கும் போதே தெரிஞ்சிட்டு. அதோட எதிர் பார்ப்ப எந்த ஒரு ஏமாற்றமும் இல்லாம கொடுத்துருக்கார் இயக்குனர் பாண்டிராஜ். ஒரு மன தத்துவ மருத்துவர்ட்ட போய் ஏதாது ஒரு நோய் பேர் கேட்டுட்டு அத வச்சி ஒரு கதை வந்துருது. மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் (அந்நியன்), பை போலார் டிஸ் ஆர்டர் (மயக்கம் என்ன), அட்டன்ஷன் டெபிசிட் ஹைப்பர் ஆக்டிவ் டிஸ் ஆர்டர் (பசங்க 2). 2 தம்பதிகள் ஒரே நேரத்துல கரு உருறாங்க, 6 மாத கருவுல இருக்கும் போதுல இருந்தே குழந்தைங்களோட வளர்ச்சி எப்படி இருக்கு, அதுக்கு காரணமான சூழ்நிலை என்ன, பகட்டான நகரத்து வாழ்க்கையில குழந்தைங்கறது எப்படி ஒரு வர்த்தகமா பார்க்கப்படுது, அதுனால ஏற்படும் விளைவு என்ன, அதுக்கான தீர்வு என்னங்கறத படம் சொல்லி இருக்கு. படத்தின் முதல் பகுதி முழுக்க ரெண்டு சின்ன குழந்தைகளின் சுட்டி தனம். பல தருணங்கள்ள அதை ரசிக்கவும், சில தருணங்கள்ள அதை பெற்றோர் மன நிலைல இருந்து பார்க்க வச்சதும் அழகு காட்சி அமைப்பு. பிள்ளைகளின் வளர்ப்பு பெற்றோர் கையில தான் இருக்கு, பிள்ளைங்க கெட்ட வார்த்தைங்க பேசுறது இல்ல, கேட்ட வார்த்தைய தான் பேசுறாங்க, பிள்ளைங்கல்ட நல்ல மதிப்பெண் வளர்க்கறத விட நல்ல மதிப்பான என்னங்கள வளர்க்கணும்ன்னு அப்பப்ப சூர்யா டயலாக் பேசிட்டு போறாரு. கடைசி நடக்குற காம்படீஷன்ல யூசுவல் க்ளைமாக்ஸ் மாதிரி வைக்காம, நல்ல படியா யோசிச்சது நல்ல முடிவு. முநிச்காந்த்க்கு இருக்குற பணக்கார வியாதி, பள்ளி முடிஞ்சதுமே இன்னைக்கு டி.சி கொடுத்துருவாங்கலோன்னு பயந்து கிடக்கும் பெற்றோர், அமைதியான தாத்தா பாட்டி, நல்ல டாக்டர் சூர்யா, அழகு டீச்சர் அமலா பால், பிள்ளைகளின் சுட்டி தனத்த வெறுக்குற ஆசிரியர்கள், மதிப்பெண் மட்டும் முக்கியம்ன்னு பாக்குற பள்ளி முதல்வர்கள்ன்னு ஒரு நகரத்து குழந்தை வளர்ப்புல உள்ள அத்தனை பிரச்சனையையும் எல்லாரும் அழகா நடிச்சிருக்காங்க. இது குழங்களுக்கான படம் இல்லை, பெற்றோர் காண வேடிண்டிய படம்.

பசங்க 2 – பாடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s