Budget‬ 2016

பட்ஜெட்ல உருப்படியா என்ன வந்துருக்குன்னு தெரில… இருந்தாலும் இன்னைக்கு நியூஸ் ஃபுல்லா ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்… மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத பட்ஜெட்…. யாருக்கும் பயன்படாத பட்ஜெட்… நாட்டின் பொருளாதாரத்தை வலுவிழக்க செய்யும் பட்ஜட்ன்னு தான் பேசுவாங்க… பேசாம எல்லாரும் சரவணன் மீனாட்சி பாருங்க… ‪#‎Budget‬

காளி(WWE) காயம்!!!

“மல்யுத்த வீரர் காளி(WWE) காயம்” அடி குடுத்த காளிக்கே இவ்வளவு காயம்னா… அடி வாங்குனவன் உயிரோட இருப்பான்னு நினைக்கிறையா நீ… ‪#‎WWE_GREAT_KAALI‬

School Boys Bike Lift

இனிமேல் ஸ்கூல் பசங்களுக்கு வண்டில லிஃபட் கொடுக்க கூடாதுப்பா… போகும் போது தேங்க்ஸ் அங்கிள்ன்னு சொல்லிறாயிங்க…. Very bad… ‪#‎SchoolBoys‬ ‪#‎Bike_Lift‬

கனவு கன்னி…

கனவு கன்னி சினேகா பாரத் மாட்ரிமோனி விளம்பரத்துக்கு வராங்க… புன்னகை அரசியா அது… புழுங்கலரிசி மூட்டை மாதிரி இருக்காங்க… என்னமா நீங்க இப்படி ஆயிடிங்களேமா…. ‪#‎BharathMatrimony‬

மகா மகம்… (Mahamaham)

நாளைக்கு மகா மகமோட கடைசி நாள். இது வரை அந்த குளத்துல 45 லக்ஷம் பேர் புனித நீராடி இருக்காங்க. நல்லதே நடக்கும்ன்னு நம்பிக்கைல தான் எல்லாரும் பண்றாங்க… தினமும் அந்த குளத்துல முங்கி எந்திரிச்சி பிச்சையெடுக்கும் பிச்சைக்காரனுக்கு நடக்கும் நல்லதை விடவா, 12 வருஷத்துக்கு ஒரு முறை குளிக்கிர ஆளுக்கு நடந்துர போது… ‪#‎Mahamaham‬

மிருதன் (Miruthan)

மிருதன் – தமிழ் சினிமால முதல் சோம்பி படம். தைரியமான முயற்சி தான், ஆனா மொக்கையான முயற்சி. எவளோ சோம்பி படம் பாத்து இருப்போம், அந்த எதிர் பார்புல ஒரு 10 சதவீதம் கூட இந்த படம் நிறைவேத்தல. வைரஸ் தாக்குது, சோம்பி ஆராங்க, கடிக்க ஆரம்பிக்குது, ஹீரோ சுட ஆரம்பிக்ராறு…. கடிக்க… சுட… கடிக்க… சுட… நாமளும் படத்துல எவளோ நேரம் தான் கடிய தாங்குறது. டைரக்டர்க்கு எதோ ராசி பாப்பாரு போல, போன படம்…

Freedom251‬

At last Rakesh got freedom 251 mobile after 4 months… With limitless joy crying, he switched on the phone and Pressed 1… Chaka chaiya chaiya Chaka chaiya… kling kling…. Pressed 2… Am a Barbie girl in the Barbie world… ‪#‎Freedom251‬ ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேன்னு தூங்கிட்டு தானே இருந்தேன்…. 251 ரூபாய்க்கு மொபைல் மொபைல்ன்னு சொல்லி மொத்த தூக்கத்த கெடுத்துடீங்களேடா…….

புது கல்யாண் விளம்பரம்…!!!

“நம்பிக்கை அதானே எல்லாம்”ன்னு சொல்லிட்டு இருந்தாங்க… அவரோட காண்ட்ராக்ட் முடிஞ்சிட்டு போல… புதுசா ஒரு, இல்ல இல்ல ஒரே மாதிரி நிறைய விளம்பரம் போடுராங்க… நீங்க சிவாஜி தாத்தா மாதிரி இருக்குரீங்கன்னு ஒரு காமெடி பண்ணாங்கலே, அத விட இதுல நல்ல காமெடி பண்றாங்க… ஆனா ஒவர் ஆக்டிங்… கொடுத்த தங்கத்துக்கு நடிங்கப்பா… மோதுரத்துக்கு நடிக்க சொன்னா ஒட்டியானத்துக்கு நடிக்றீங்க…

காதலர்கள் தினம்…! :(

என் ஃப்ரண்டுட்ட என்னடா பண்றேன்னு கேட்டேன். நடாஷாவோட பேசுறேன்னு சொன்னான். கிட்ட போய் பாத்தா வாட்ஸ் அப் யூஸ் பண்ணிட்டு இருந்தான். என்னடா நாம நடாஷாங்ற பொண்ணோட ஹைக் மெச்சஞ்சர்ல தானே பேசுனோம்ன்னு பாத்தா அது உண்மையான பொண்ணு நடாஷா… நம்ம நிலமைய இதுக்கு மேல எப்படி சொல்ல… வாழ்க காதலர்கள்…!! இனிய காதலர்கள் தின நல்வாழ்த்துகள்…. ‪#‎HappyValentinesDay‬ ‪#‎Feb14‬ ‪#‎Sunday‬ ‪#‎AdaPongaDa‬

ஜில் ஜங் ஜக் (Jil Jung Juck)

ஜில் ஜங் ஜக் – பெயர் நல்ல வசீகரமாதான் இருக்கு, ஆனா… படத்துல ஆனாவும் இல்ல ஆவனாவும் இல்ல… அதிகமா படம் பாக்கும் போது கொட்டாவி தான் வருது. ஹீரோயின் இல்ல, யூஷுவல் ஒளிப்பதிவு இல்ல, யாருமே படத்துல அழகா இல்ல… இப்படி தமிழ் பட இலக்கணத்த மீறி ட்ரை பண்ண புதுமையான அட்டம்ப்ட். போதை பொருள் கடத்துறாங்க, யாரு கடத்துறா, எப்படி கடத்துறாங்க அவளோ தான் கதை. இந்த ஜெயசங்கர் காலத்து கதைய 2020ல நடக்குற…

ஏர்டல் 4ஜி பொண்ணு…

ஏர்டல் 4ஜி விளம்பரதுனால 4ஜி பிரபலமாச்சான்னு தெரில. ஆனா அந்த பொண்ணு பிரபலமாயிட்டு. இப்ப நிறைய விளம்பரத்துல வருது… முடியும் வளந்துட்டு… ஒன் ரவுண்ட்…. லெஃப்ட்…. டூ ரவுண்ட….. மடித்து….. மேல எடு….. 🙂 😀 ‪#‎Airtel_Girl‬ ‪#‎MomsMagic‬ ‪#‎Airtel4G‬

விசாரணை (Visaranai)

சினிமா என்பது ஒரு பொழுது போக்கு என்பதைத்தாண்டி சில உண்மை நிகழ்வுகளை பதியவைக்கும் ஊடகமாக இருக்கும் என்பதை சொல்லப் போராடும் விசாரணை வெற்றி மாறனின் பெயர் சொல்லும் படம். காட்சி அமைப்பிலும், பாத்திர வடிவைமைப்பிலும் எதார்த்தத்தை இயக்குனர் கையாண்டது இப்படத்தின் வெற்றி. எத்தனை வருஷமா டிபார்ட்மென்ட்ல இருக்கீங்க, இன்னும் ‘தொழில்’ கத்துக்கலையே..!’’ – காவல் துறையின் கறுப்புப் பக்கங்களில் சகஜமாக நடக்கும் அராஜகங்கள் வெட்டை வெளிச்சம். நேர்மையா இருக்கனும்ன்னு போராடும் சமுத்திரக்கனி வேற லெவல். பயத்தோட நாலு…