மகளிர் தினம் 2016

பெண் என்ற கதாபாத்திரம் தமிழ் இலக்கியத்திலும் சரி, புராணங்களிலும் சரி பொறுமை, வீரம், அன்பு, பாசம், நற்பண்பு, போராட்டம், தெளிவுன்னு எவ்வளவோ குணாதிசியங்கள் கொண்டு தான் விளங்கி இருக்கிறது.புறநானூறில் முறத்தால் புலிய அடித்து விரட்டிய பெண், தனது பச்சிளங் குழந்தைக்கு போர் உடை அணிவித்து, போருக்கு அனுப்பும் பெண், ராமாயணத்தில் ராவணன் எதிர் நின்று வீரம் பேசும் சீதை, மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்கள் பக்கம் நடக்கும் வீழ்ச்சியினால் துவண்டு போகும் சமயத்தில் எல்லாம், போர் புரியும் அவசியம் பேசும் த்ரௌபதின்னு எவ்வளவோ கதாபாத்திரம் பெண்களின் மகத்துவம் பேசுகின்றது. அதுனால் தான் த்ரௌபதி ஒரு கொற்றவையாகவே போற்றப்படுகிறாள். சூது நடக்கும் இடத்தில் அவள் சபையினரிடம், தர்மர் தன்னை இழந்தபின் என்னை இழந்தாரா, அல்லது என்னை இழந்தபின் தன்னை இழந்தாரா என்ற கேள்விக்கு பதில் கூற அச்சபையில் யாரும் இல்லை. பெண்களுக்கு அநீதி புராணத்திலும் நடந்திருக்கிறது.

தன் கணவனின் தவறான போக்கு தெரிந்தும், பொறுமையாக இருந்த கண்ணகி, தன் கணவனுக்கு நடந்த கொடூரத்திருக்கு நீதி கேட்டு பாண்டியனிடம் முறையிடுவது, தமிழ் பெண்ணின் துணிச்சலின் வெளிப்பாடு. இலக்கியம் எப்போதுமே பெண்ணின் உரிமையையும், பெண்ணின் வீரத்தையும் பற்றியே பேசுகின்றது.


வீர மங்கை வேலு நாச்சியார் தன் கணவன் இறந்த செய்தி கேட்டு துவண்டு போகாமல், ஆங்கிலேயரை பலி வாங்க அவள் நிகழ்த்திய போர் தந்திரம் பொன் எழுத்துக்களால் பொரிக்க பட வேண்டியவை. தன் தோழி குயிலியை மனித வெடிகுண்டாய் அனுப்பி ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை முற்றிலும் தரை மட்டமாய் ஆக்கினார். ஆங்கிலேயர் கதி கலங்கி போனார்கள்.


ஜான்சி ராணி தனது 23ஆவது வயதில், தனது குழந்தையை சுமந்து கொண்டு போர் புரிந்து வெற்றி வாகை சூடிய கதை எல்லோருக்கும் புல்லரிக்க வைக்கும். மங்கம்மாளின் வீரம் மதுரையை ஆண்ட நாயக்கர்களின் வரலாறை பேசும், தமிழகமே பார்த்திராமல் தென் ஆப்ரிக்காவில் போராடி உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மையின் போராட்ட குணம் என்றும் மறக்க முடியாத ஒன்று.


பெண்களின் குரல்வளை நெரிக்க படாவிட்டாலும், குரல்கள் எப்பவும் சமுகத்தில் நெரிக்கப்படுகிறது. 33 சதவீதம் இட ஒதிக்கீடு தந்தால் மட்டும் அவர்களுக்கான உரிமையை கொடுத்து விடுகிறோம் என்று அர்த்தம் அல்ல. பெண்களை மதிப்போம், பெண்ணியம் பேசுவோம், பெண்மையை போற்றுவோம்…


அனைவருக்கும் பிரதீப்பின் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s