காதலும் கடந்து போகும் (Kaathulum Kadanthu Pogum)

காதலும் கடந்து போகும் – சூது கவ்வூம்க்கு அப்பறம் நலனோட ரொம்ப நாள் எதிர் பார்த்த படம். வேலை தேடும் பெண்ணாக மடோனா, அடியாளாக விஜய் சேதுபதி, இருவர்க்கும் இடையில் இருக்கும் உறவு காதலா, நட்பா என்பதை நலன் அவர் பாணியில், இல்ல அந்த கொரியன் படம் பாணியில் சொல்லி இருக்குறார். படம் முழுக்க ரெண்டே முகம் தான். ஒன்னு நம்ம விஜய். எது சொன்னாலும் தியட்டர்ல அப்ப்லாஸ் தான். “ஒரு பழமொழி சொல்றேன், அது

பழசா தான் இருக்கும்”, “எஸ்கிமோ நாய்” என்று  பல வசனங்கள். மடோனா என்னம்மா நீ இப்படி இருக்கியேமா…!!!. அழகுல லைக்ஸ் சும்மா அள்ளிட்டு தான் போகுது அந்த பொண்ணு. தமிழ்ல இதான் முதல் படம் மாதிரி தெரில. எக்ஸ்ப்ரஷன், டியலாக் மாடுலேஷன் எல்லாம் சூப்பர். ஏன் இவளோ நாள் வேல கிடைக்கலன்னு கேக்குற கேள்விக்கு மடோனா கொடுக்குற பதில் நச்.படம் ரொம்ப மெதுவா நகர்ந்தாலும், எங்கேயும் நமக்கு எப்படா படம் முடியும்ன்னு தோண வைக்காமல் நகர்த்துனதுக்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். க க க போ பாடல தவிர, வேற எந்த பாடலும் மனசுல நிக்கல. அதுக்கு விஜய் சேதுபதி போடும் கெட்ட ஆட்டம் அருமை. சந்தோஷோட பின்னணி இசை நின்னு பேசுது. வில்லன்க்கு வெயிட் இல்ல, கொஞ்சம் சலிப்பு, நாடகத்தனமான சில சீன்ஸ், இதெல்லாம் படத்தோட மைனஸ். யாழினிக்கு வேலை கிடைக்கும் போதும் சரி, கதிரை திரும்ப பார்க்கும் போதும் சரி, எதோ மனசுல ரெண்டு பேரும் நிக்கறாங்க. எதார்த்தத்தை  தாண்டி சில விஷயம் படத்துல இருந்தாலும்,ரெண்டு பேர்க்கும் உள்ள வேதியியல்க்காக படம் பார்க்கலாம்.

காதலும் கடந்து போகும் – வாழ்கையில்

அடுத்த படத்துல சந்திப்போம்…

அன்புடன் பிரதீப்…

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s