மனிதன் (Manithan)

மனிதன் – நானும் நல்ல நடிப்பேன்ய்யான்னு உதயநிதி கஷ்டப்பட்டு நடிச்சிருக்காரு. டிரைலரும், படத்தோட முதல் 5 நிமிஷம் பாத்தவங்களும் கதைய சொல்லிரலாம். ஒரு கேஸ், உதயநிதியும், பிரகாஷ் ராஜும் எதிர் எதிரா ஆஜர் ஆராங்க, கடைசில ஹீரோ தானேப்பா ஜெயிப்பாரு. சல்மான் கான், கார் பிரச்சனைய மையமா வச்சி ஹிந்தில வெளி வந்த ஜாலி எல்.எல்.பி யோட அஃபிஷியல் ரீமேக் தான் இந்த படம். ரொம்ப சுமாரான திரைக்கதை. கோர்ட், சாட்சியம் நாலே, நாம எத்தன படம்…

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம் பண்ணும் வருங்கால எம்.எல்.ஏக்களே… 4ஜி போன் வந்துட்டு, கிராமத்துல புளியம்பட்டி பாய்ஸ்ன்னு வாட்ஸ் அப்ல குரூப் வச்சி இருக்காங்க, பெருசுங்கன்னா சூப்பர் சிங்கர்ல ஃபைனல் இன்னைக்கு, விஜய் டிவி வைன்னு சொல்லிட்டு இருக்குறாங்க, இன்னும் நீங்க பெரியோர்களே தாய்மார்களேன்னு மைக்ல பேசிகிட்டு, வயசான கிழவிய அணச்சி ஃபோடோ எடுத்துக்கிட்டு, ரோட்ல சும்மா உட்காந்து இருக்குறவன குளிப்பாட்டி விட்டுட்டு, மூக்கு ஒழுகுற பையனுக்கு மூக்கு சிந்தி விட்டுட்டு, மரம் நடுற மாதிரி போஸ் கொடுக்குற பழைய…

‎Election Comedies‬

“நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பாஜகவில் இணைந்தார்” அட இவன் வேற அடிக்கடி, இருக்கிற ஜோக்கர் பத்தலேன்னு, அவன் பங்குக்கு சிரிப்பு காமிச்சிக்கிட்டு… ‪#‎ElectionComedies‬ ‪#‎TNElection2016‬

உலக புத்தக தினம்

புத்தகம், என் வாழ்வில் எத்தனையோ தருணங்களில் என் தோளோடு தோள் நிற்கும் ஒரு நண்பன். என்னுடைய ஆளுமையை நான் செதுக்க உதவும் ஒரு காரணி. தனிமையில் இருந்து விடுதலை தரும் ஒரு வரம். புத்தக வாசிப்பில் இருக்கும் சுகம், அளப்பரியது. கதையில் லயித்து இருப்பது, கதாபாத்திரமாகவே மாறுவது, ஓர் ஊரில் வாழ்வது, அவன் அழும் போது, நானும் அழுவது என்று எத்தனை எத்தனை சுகங்கள். இக்கால குழந்தைகளுக்கு வீடியோ கேம்ஸ் வாங்கி தராமல், நல்ல புத்தகங்களை வாங்கி…

அம்மாவும், சின்ன பொண்ணும்

ஒரு நாள் அம்மாவும், சின்ன பொண்ணும் மழை விட்டவுடன், வீட்டுக்கு வெளிய நடந்து போய்ட்டு இருந்தாங்களாம். அம்மா, பொண்ணுட்ட, அங்க பாருடி “ரெயின்போ (வானவில்)” ன்னு சொன்னாங்களாம். அதுக்கு அந்த குழந்தை, நான் ஏற்கனவே பார்த்துட்டேன்ம்மான்னு சொல்லிச்சாம். அப்ப ஏண்டி என்ட சொல்லல…. , நீ அப்பறம் “ரெயின்போ”க்கு என்ன ஸ்பெல்லிங் கேப்ப அதான்… ‪#‎Just_For_Fun‬ ‪#‎Veetla_Nadakkum_Kooththu‬…

தெறி (Theri)

தெறி – விஜய்க்கு துப்பாக்கி அளவுக்கு எதிர் பார்த்த படம். ராணுவத்த, போலீஸ் ஜெய்ச்சுட்டன்னு கேட்டா, பதில் இல்ல தான். எல்லாருக்கும் தெரிஞ்ச கதை தான் . நேர்மையான போலீஸ், மினிஸ்டரோட பிரச்சனையை பண்ணுவாரு, மினிஸ்டர், ஹீரோ குடும்பத்த அழிச்சிருவாறு, அதுக்கு ஹீரோ பழி வாங்குவாரு. அவளோ தான். அதே 80 ஆண்டு கால தமிழ் சினிமாவின் போலீஸ் ஸ்டோரி. இந்த யூகிக்க முடியுற கதை, திரைக்கதை படத்துக்கு தொய்வு. மத்தப்படி விஜயோட பக்கா கமர்ஷியல் படம்….

TN 2016 Election – தே.மு.தி.க

தே.மு.தி.க ல இனி எல்லாம் அண்ணி தானாம்… ப்ரேமலதா, விஜயகாந்த்ட்ட, “நான் எல்லாம் செக் பண்ணிடேன், நீங்க வீட்ட பூட்டிட்டு மட்டும் வாங்க”ன்னு சொல்லிட்டாங்களாம்… ‪#‎TNElection2016‬ ‪#‎Fun_Time‬

Alamelu_Is_Better‬

அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவ, சொன்னீங்களே, செஞ்சீங்களான்னு போட்டு சாவடிக்கிறாய்ங்க…. இதுக்கு நம்ம அழு மூஞ்சு அலமேலுவே தேவல போல… ‪#‎Alamelu_Is_Better‬

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Tamizh puththaandaye “Happy Tamizh New Year” nu thaan soldraanga… Ivan mattum periya yokkiyam, neeyum athae english la thaane da type pannirukkae nu neenga soldrathu enakku kekuthu… இப்படி தான் வாழ்த்துகள் சொல்ட்றாங்கன்னு சொன்னேன்… இனிய துர்முகி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்… 🌲🌴🌷🌻💫

சாப்புட்ரதுக்காக சம்பாதிக்கிறது?

உடல் வருத்தி கொஞ்சமா சம்பாதிக்கிற தொழிலாளி கூட மறக்காம காலைல சாப்டறாங்க… லட்சக்கணக்குல சம்பாதிக்கிற பெரும்பான்மையான கார்ப்பரேட் தொழிலாளிகள் காலை சாப்பட்றது இல்ல… ஒரு வேல சாப்புட்ரதுக்காக சம்பாதிக்கிறது இல்லயோ..? ‪#‎AppraisalTime‬ ‪#‎SoSad‬

பனாமா பேப்பர்ஸ்

“பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட பட்டியலில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பெயர்கள் அடங்கும்” பனாமா பேப்பர்ஸில் சொன்னது உண்மையென்றால் நடிகர்கள், தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்ன்னு போன வாரம் தான் ரகுராம் ராஜன் சொன்னாரு. இப்ப அமிதாப் பச்சன் கல்யாண் விளம்பரத்துல ரிசப்ஷன்னுக்கு நகை பட்ஜெட் 5 லக்ஷம்ன்னு சொல்லிட்டு இருக்காரு. தனி ஒருவன் ஸ்டைல்ல பாத்தா… இதுல எது முதல் பக்க செய்தி, எது வணிக செய்தி…. ? ‪#‎What_Is_This_Maarkabandhu‬?