Hmm!!!

Hmm க்கு இதான் ஃபுல் ஃபார்மா… ?!?! அட பாவிகளா…! இத தெரியமா கால் நூற்றாண்ட வீணாக்கிட்டேனே… போச்சே… போச்சே…!!! ‪#‎Hmm‬ ‪#‎Unknown_Acronym‬

Revaluation‬

“5 வருடங்களில் ரீ வேல்யூசன் கட்டணமாக ரூ. 75 கோடி வசூல்! அண்ணா பல்கலைக் கழக ஆச்சரியம்…” பேப்பர்க்கு பணத்த கட்டியாவது பாஸ் ஆயிராலாம்ன்னு தான்… ஆனா, நீங்க காச வாங்கிட்டு ஏமாத்திடுறீங்க… அட போங்கயா, நீங்களும் உங்க இஞ்சினீயரிங்கும்… ‪#‎Revaluation‬

‎ChatWorld‬

இப்ப எல்லாம் சேட்டிங், Nice Dp ல ஆரம்பிச்சு, Hmmm ல முடிஞ்சுருது… ‪#‎ChatWorld‬

கல்வி ‎கேலிக்கூத்து‬

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை 276 மாணவர்கள் முறையே 499, 498, 497 எடுத்து சாதனை. தமிழ் நாட்ட தாண்டி உங்க மார்க்க வெளிய சொல்லிராதீங்க… பெற்றோர்களுக்கும் தெரிய மாட்டேங்குது, ஆசிரியர்களுக்கும் புரியமாட்டேங்குது, அரசாங்கத்துக்கும் வெளங்க மாட்டேங்குது… தமிழ்நாடு பள்ளி கல்விக்கு வந்த சாபக்கேடு… ‪#‎TN_Education_System‬ ‪#‎கேலிக்கூத்து‬

எப்படி உயர்வது?

வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களில் இருந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறேன்… எப்படி உயர்வது? சுகி.சிவம் பதில் முன்பெல்லாம் கொலு வைக்கும்போது தஞ்சாவூர் பொம்மை என்றொரு செட்டியார் பொம்மை மற்றும் செட்டிச்சி பொம்மை வைப்பது உண்டு… பார்த்திருக்கிறீர்களா? அந்த பொம்மையின் தாயகம் சீனாதான். சீனாவில், களிமண்ணைக் கொண்டு செய்யப்படும் கைவினைப் பொருட்கள்… எப்போதும் நேர்த்தியாகவும், அர்த்தத்துடனும் தயாராகும். இந்த பொம்மையும் அப்படியே! ‘தருமர் பொம்மை’ என்பதே அதன் உண்மை வடிவம். அதன் உடற்பாகம் உருண்டையாக இருக்கும். அதற்கும் உள்ளே அடிப்பாகத்தில்…

வேட்டி சட்டை

வேட்டி சட்டை தான்டா நம்ம பாரம்பரியம்ன்னு பேசறவன்ட்ட முதல்ல எத்தனை வேட்டி வச்சி இருக்கன்னு கேக்கணும்… அடுத்த கேள்வி கட்ட தெரியுமா??? ஆஃபிஸ்ல டிரடிஷனல் டேன்னு ஒன்னு கொண்டாடி நம்ம உயிரை எடுப்பாங்களே, அன்னைக்கே பாதி பேர் பக்கத்து வீட்ல கடன் தான் வாங்கி கட்டிட்டு வரான்… ‪#‎Oora_Yemaathura_Boys‬ ‪#‎Tamil_Tradition‬

மருது (Marudhu)

மருது – இயக்குனர் முத்தையாவோட 3 ஆவது படம்.குட்டி புலி, கொம்பன் மாதிரியே தான் இந்த படத்துலயும் கதை. அவர் அரைச்ச அதே பழைய மாவ எடுத்து, தோசை சுட்டு இருக்காரு. அது வெந்தும், வேகாமையும் இருக்கு. ஹீரோ ஒரு வில்லன்ட்ட வம்பு வாசிப்பாரு, தப்புன்னு தெரிஞ்ச அடிப்பாரு, வேட்டி கட்டி சாதாரண வேலை செய்வாரு, தாவணி கட்டிட்டு, மஞ்ச பூசிட்டு ஒரு ஹீரோயின் வரும், கல்யாணம் ஆனா பிறகு சேலைல வரும், 4 பாட்டு, 8 சண்டை,…

‎TNElection2016‬ Rasi Palan

எல்லா முக்கிய தொலைகாட்சியிலும் காலைல 7 மணிக்கு ராசி பலன் போட்டாங்க… யாருக்குன்னு தெரில அந்த பலன்… ‪#‎TNElection2016‬ ‪#‎TNElectionResults‬

TNElection2016‬ Complaint

திமுக, ஆதிமுக ஓட்டுகள் மட்டுமே எண்ணப் படுகின்றது… மாற்று அணிகள் குற்றச்சாட்டு… ‪#‎TNElection2016‬ ‪#‎TNElectionResults‬

‎TNElection2016‬ Reaction

சி.எம் ஆயிறலாம் சி.எம் ஆயிறலாம்ன்னு சொல்லிட்டு, கடைசில என்ன எம்.எல்.ஏ கூட ஆக விடலையேடா நீங்க… இது யாரோட மைண்ட் வாய்ஸ்ன்னு சொல்லுங்க…? கரக்ட்… அவர் தான்…. அவரே தான்… கடைசில இப்படி பண்ணிட்டாங்களே சிவாஜி… ‪#‎TNElection2016‬ ‪#‎TNElectionResults‬

TNElection2016‬

“1952க்கு அப்பறம், இடதுசாரிகள் இல்லாத சட்டசபை 2016ல் தான் உருவாகி உள்ளது” என்ன பண்றது, உங்க சேர்க்கை சரி இல்ல…. ‪#‎TNElection2016‬ ‪#‎TNElectionResults‬

தேர்தல் முடிவு

நாளைக்கு தேர்தல் முடிவு … நல்ல ஆக்‌ஷன் பிளாக். பாய்ஸ், ஃபுல் எண்டர்டைன்மண்ட் தான். நாளைக்கு ஆஃபிஸ்ல வேலை பார்க்க போறது இல்ல… ‪#‎TNElection2016‬ ‪#‎TNElectionResult‬