சுஜாதா – ஒரு ஸ்ரீரங்கத்து நாயகன், மே 03 முதல்

புத்தக வாசிப்பு என்பது சில பேருக்கு அலாதியானது. அந்தப் பழக்கம், வழக்கமாக மாறுனதர்க்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். குடும்ப நபர்கள், நல்ல நண்பன், ஆசிரியர், பக்கத்து வீட்டு அண்ணன், இல்ல, ஒரு நல்ல எழுத்தாளன். சில எழுத்தாளரின் வார்த்தைகளும், மொழி நடையும், உவமைகளும், அவர்கள் புத்தகங்களை படிக்கத்தூண்டிக் கொண்டே இருக்கும். அப்படிப் பட்ட எழுத்தாளர்களின் வரிசையில் சுஜாதாவின் நிலை முன்னிலையே.
வகுப்பகளில் புரியாத பல அறிவியல் விதிகளை போற போக்கில் அவருடைய கதை புரிய வைத்து செல்லும். அவரின் ஒவ்வொரு கதையும், புத்தகமும், அறிவியல் சார்ந்த குறிப்புகளும், அவர் நடையும், மொழி வளமும், சாதாரண மக்களை சென்ற அடையும் அளவுக்கு அற்புதமானவை. சுமார் 80களில் அவரின் புத்தகங்களை படித்தவர்கள், இக்கால புது கண்டு பிடிப்புகளை கண்டு ஆச்சரிய படவே மாட்டார்கள். சிலிகான் சிப்புகள், ரோபோ, தொடுதிரை, லேசர் துப்பாக்கிகள், ஆட்டோமாடிக் கார்ஸ்ன்னு எவ்வளவோ விஷயங்கள். 2022 நடக்கும் என் இனிய இயந்திரா ஒரு வெர்சுவல் இந்தியாவில் நாம் வாழும் உணர்வை தரும். அதன் கதாநாயகன் ஜீனோ நாய், ஐசக் அசிம்மொவின் ரோபோ விதிகளை பற்றி பேசிக்கொண்டே இருக்கும். நம்மில் பல பேருக்கு எந்திரன் பட பாடல் வரிகளை கேட்ட பின்னர் தான் ஐசக் அசிமொவையே தெரியும் (அதிலும் சுஜாதா பங்கு இருக்கிறது என்பது வேறு).
கொலை உதிர் காலம் என்ற திகில், அமானுஷியம் நிறைந்த கதையில் ஹோலோக்ராம் எனப்படும் முப்பரிமாணப்படம் உருவாக்குவதன் மூலம் பண்ணக் கூடிய வித்தைகள் எல்லாம் அழகாக சொல்லி இருப்பார். இறுதியில் அது உண்மையலேயோ பேய் தானோ என்ற குழப்பத்துடனே வரும் முடிவு தலைவரின் படைப்பின் அழகு.
கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை.
ஆ, வாய்மையே சில சமயம் வெல்லும், 24 ரூபாய் தீவு, சுமார் 60 கதாபாத்திரங்கள் கொண்ட ஆஸ்டின் இல்லம், அன்புள்ள அப்பா, என் இனிய இயந்திரவின் சீக்குவல் மீண்டும் ஜீனோ, கடவுள் வந்திருந்தார், பிரியா, விளிம்பு, 6961, விதி, நிர்வாண நகரம் போல எத்தனையோ கதை முடிச்சுகளை அவிழ்க்கும் கணேஷ், வசந்த் கதா பாத்திரம்ன்னு ஐயாவை பற்றி, அவர் புத்தகங்கள் பற்றி பேசிக் கொண்டே போகலாம்.
சுருக்கமா சொல்லனும்னா, அவரோட புத்தகங்களை எல்லாம் ஒரு அலமாரில அடுக்குங்க, கண்ணை மூடி எதாவது ஒரு புத்தகத்தை எடுங்க, எதாவது ஒரு பக்கத்த திறங்க, கண்ணைத்திறந்து எதாவது ஒரு வரில இருந்து படிக்க ஆரம்பிங்க, சத்தியமாக சொல்கிறேன், உங்களால் புத்தகத்தை கீழே வைக்க முடியாது.
அப்படிப் பட்ட எழுத்தாளனின், எனக்கு புத்தகம் மூலம் நிறைய பாடம் சொல்லி தந்த எனது ஆசானின் பிறந்த நாள் என்னுடைய உத்தியோகபூர்வ பிறந்த நாள் அன்னைக்கு இருப்பது எனக்கு மிகவும் பெருமை. என் மனம் கவர்ந்த எழுத்தளர், என் இனிய எந்திரனுக்கு, பிரதீப்பின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். நீங்கள் எங்களுடன் இல்லா விட்டாலும், உங்கள் படைப்புகளில் வாழ்கிறீர்கள்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s