24

24 – 6 வருஷத்துக்கு முன்னாடி விக்ரம் வச்சி ஆரம்பிச்ச படம், பெரிய பட்ஜெட் காரணமா கை விடப்பட்டு, 6 வருஷம் டைம் மெஷின்ல டிராவல் பண்ணி விக்ரம் குமார் இந்த படத்த எடுத்து இருக்கார். டைம் மெஷின் படம், வாட்ச் திருப்பி முன்னாடி போராதும், பின்னாடி போரதும்ன்னு இருக்கும்ன்னு எல்லாத்துக்கும் தெரியும், அத கொழப்பாம சொல்றதுல தான் இயக்குனர் டச் இருக்கு. அந்த விஷயத்துல விக்ரம் குமார பாராட்டலாம். 3 சூர்யா, விஞ்ஞானி, ஹீரோ, வில்லன். ஒரு வாட்ச், இந்த 3 பேருக்கும் வாட்ச்க்கும் என்ன சம்பந்தம்ங்கறது தான் கதை. படம் முழுக்க சூர்யா மட்டுமே வராரு (3ல யாரவது ஒருத்தர் வருவாரு சீன்ல), அதுனால கொஞ்சம் சலிப்பு தட்டுது. வில்லனுக்கும் விஞ்ஞானிக்கும் ஏன் இவளோ பகைன்னு விளக்காதது, மத்த எந்த கதாபாத்திரமும் மனசுல நிக்காததுன்னு படத்துல சில குறைகள் இருக்கு.சமந்தா, என்னமா நீ. கோபாலசமுத்திரம் வீட்டில் சூர்யா- சமந்தா இருவரும் அட்ரஸ் அட்ரஸாகப் பேசுற சீன்ல, நாமே ஸ்க்ரீனுக்குள் குதித்து சூர்யாவின் வாட்சில் 20 நிமிடங்களை தள்ளிவைத்துவிடலாமான்னு தோணுது. குழப்பாத திரைக்கதை, வில்லன் சூர்யா அக்டிங் படத்துக்கு பிளஸ். சூட்கேஸ் நம்பர், முதல் சீன்ல வர ஷார்ட் சர்கியூட், வாட்ச் மெக்கானிசம் எல்லாம் நல்ல இருக்கு. வருஷ கணக்கா ஆராய்ச்சி  பண்றார் அப்பா விஞ்ஞானி, பையன் ஒரே நைட்ல நாள், வருஷம்னா வாட்ச்ல சேத்துறான். கோபாலசமுத்திரம் ஊர் போற ரயில் பாதையா அது?  ரஹ்மான் மியுசிக்ல ஒரு பாட்டு கூட மனசுல நிக்கல. திருவோட  ஒளிப்பதிவு அழகு. மழைத்துளியை பாதியில் நிறுத்தும் அழகியலாகட்டும், டைம் டிராவல் உண்டாக்கும் கிராபிக்ஸ் ஆகட்டும் தூள்!  வாட்ச் குள்ள 750 ஸ்பேர் பாட்ஸ் இருக்கு டா, அதுல ஓடாத வாட்சாடா கழுகு ரெக்கையில ஓட போகுதுங்கற ஃபீல் வந்தாலும், சயின்ஸ் ஃபிக்ஷன் படம்ன்னு பாத்தா நோ ப்ராப்ளம்.

24 – டைம் டிராவல்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s