இறைவி (Iraivi)

இறைவி – படத்தோட தலைப்பிலேயே பெண்மையின் மகத்துவம், பெண்ணியம் பத்தின படம்ன்னு நினைத்து தான் தியேட்டர் போனேன். அதுல ஒரு 50 சதவீதம் நிறை வேருச்சுன்னு சொல்லலாம். தலைமுறைகள் கடந்து நம்ம இங்கு இருந்தாலும், இன்றும் பெண்கள் தங்களின் வாழ்க்கை பிரச்சனையை சகித்து தான் வாழனும்ங்ற கட்டாயத்துல இருக்காங்க. அந்த கூட்டத்தில் இருக்கும் 4 பெண்களின் வாழ்க்கையும், அதை நகர்த்தும் ஆண்களை பற்றிய கதையே இறைவி. ஆண் (க்ளைமாக்ஸ்ல  விளக்கும் சொல்றாங்க) அவனுடைய செயல்கள், ஒரு பெண்ணை, அந்த பெண்ணை நம்பி இருக்கும் குடும்பத்தை எப்படி பாதிக்குங்கறத அழகா சொல்லி இருக்கார் இயக்குனர் கார்த்திக். ஆனா படத்துல, யாராலையும் அந்த கதாபாத்திரங்கள வாழ்க்கையோட ஒப்பிட முடியாது. நிறைய லாஜிக் மிஸ்(என்னடா இப்படியா  நிஜத்துல நடந்துக்குவாங்கன்னு யோசிக்க வைக்குது) க்ளைமாக்ஸ் ரொம்ப நீளம்.இப்ப முடிஞ்சிடும் இப்ப முடிஞ்சிடும்ன்னு பாத்துட்டே இருக்க வச்சி இருக்காங்க. பாட்டலாம் தேவையே இல்ல படத்துக்கு. ஒரு நல்ல சீன் வரும் போது, அடுத்த சீன் சோர்வ தருது.

 

கதாபாத்திரம் தேர்வுக்கு உண்மையா இயக்குனருக்கு சபாஷ் போடலாம். அவ்வளவு பேரும் அருமையா நடிச்சி இருக்காங்க. குடிகாரனாவே குடித்தனம் நடத்தும் எஸ். ஜே. சூர்யா, உணர்ச்சி வசம் பட்டு செயல்கள் செய்யும் விஜய் சேதுபதி (போதும், இதே மாதிரி நடிச்சது), பொறுமையா யோசிச்சு பேசும் பாபி, கணவனின் செயலை மாற்ற துடிக்கும் கமலினி (நல்ல கம் பேக்), தனது சின்ன சின்ன ஆசையை நிறை வேற்ற முடியாமல் ஏங்கும் அஞ்சலி, தன்னோட நிலமையை ஞாயப்படுத்தும் பூஜா, சித்தப்பா சேது, ராதா ரவின்னு எல்லாருமே சூப்பர்.

 

டயலாக் படத்துல பிளஸ். “கருவுல ஒரு குழந்தை இருக்கும் போது, எப்படிமா என்னொரு குழந்தைய பெத்துக்க முடியும்”, “ஆண் நெடில்”, பூஜா சித்தப்பாட்ட பேசும் வசனம் எல்லாம் தையிரியமான முயற்சி. ஜெனரல் ஆடியன்ஸ எப்படி படம் அணுக போதுன்னு தெரில. மழைல நனைய ஆசைப்படம் 3 பெண்களோட ஆரம்பிகிற படம்,  அஞ்சலி குழந்தையோட மழைல நனையிரதோட, மனிதின்னு புது தமிழ் வார்த்தையோட ஆரம்பிகிற பாட்டோட முடியுறது அழகு. இறைவி – பெண் குறில்

 

அடுத்த படத்துல சந்திப்போம்…

 

படம் ஆரம்பிக்கும் போது இயக்குனர், பாலசந்தர், பாலு மகேந்திரா, சுஜாதா இந்த மூணு பேருக்கும் நன்றி சொல்றாரு. இந்த கதை 3 பெண்களின் கதையா, ஆண்களால் பாதிக்க பட்ட பெண்களின் கதையா இல்ல 3 ஆண்களின் கதையான்னு தெரில. படம் முழுக்க ஆண் என்ற நெடில் பிம்பத்தால் பெண் குறில் அடி பட்டுட்டே இருக்கா. ஆனா, அவளால எந்த சூழ்நிலையும் சமாளிக்க முடியும். கொஞ்சம் யோசனை, தீர்க்கமான சிந்தனையோட அந்த முடிவ எடுப்பா. படம் பெண்ணின் இயலாமைகளை காட்டி, ஆணின் சுயனலத்த காட்டி, பெண் நெடிலா இருந்தா நல்ல இருக்குமேன்னு சொல்ல முயற்ச்சி பண்ணி இருக்கு…

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s