சமூக வலைத்தளங்களின் நிலை (Social Networking Status)

சமூக வலைத்தளங்களில், நாம் அன்றாடம் கடந்து வரும் சில காமெடிகள், கடுப்புகள், கிறுக்குத்தனங்கள், வெறுப்புகள் பற்றிய சிறிய அலசல்.

முக்கியமா சோசியல் மீடியாஸ்ல வளம் வர விஷயம், 60 சதவீதம், சினிமாவும், சினிமா சார்ந்த விஷயமாவும் தான் இருக்குது. அதுல முதல் பிரச்சனை அஜித் vs விஜய். ஒரு ஃபோட்டோல, ரெண்டு பேருமேஇருப்பாங்க. அஜித்ன்னா லைக் போடுங்க, விஜய்ன்னா கமண்ட் போடுங்க. அந்த லைக்கையும் கம்மன்ட்டையும் வச்சி நீங்க பண்ண போறீங்க, இல்ல அவுங்க தான் என்ன போறாங்கன்னு தெரில.

அடுத்து, கலை துறையில் உள்ளவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய பதிவுகள். அவுங்களுக்கு கல்யாணம் ஆயிட்டு, இவுங்களுக்கு நிச்சியதார்த்தம் ஆயிட்டு, அவுங்களுக்கு பிரேக் அப் ஆயிட்டுன்னு ஏகப்பட்ட விஷயங்கள். சொந்த அக்கா கல்யாண நாள் தெரிஞ்சு, விஷ் பண்றாங்களோ இல்லையோ, சூர்யா ஜோதிகா கல்யாண நாளுக்கு ஏகப்பட்ட பேர், இங்க விஷ் பண்றாங்க. ஆனா யாரு அது எல்லாம் பாத்து அவுங்கள்ட்ட சொல்றாங்கன்னு தெரில.

அதுக்கு அப்பறம், இந்த படம் இவ்வளோ பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷன் ஒரு வாரத்துலன்னு போடுறவன். எப்படி இவ்வளோ கோடி வசூல் ஆகுது?, இது எல்லாத்துக்கும் டாக்ஸ் (Tax) உண்டா இல்லையா? ஆமா!!! முதல்ல அந்த பாக்ஸ் ஆபீஸ்ன்னா என்ன? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க…

இந்த ரோட்ல கஷ்டப்பட்டு வண்டி இழுத்துட்டு போற தாத்தா, வடை சுடுற பாட்டி படம்ன்னா போட்டு, யார் யாருக்கோ லைக் போடுறீங்க “Why can’t like this picture?” அந்த லைக் எதுக்கு அவுங்களுக்கு?

அப்துல் கலாம் படம் ருபாய் நோட்ல வரணும்ன்னா “Like and Share this more”ன்னு போடுறது…

சின்ன வயசு பெப்சி ஐஸ், கை வீடியோ கேம், டாம் அண்ட் ஜெர்ரி, மாஸ்க் படம் எல்லாம் போட்டு, “only 90s kids know this”. பழைய ஞாபகங்கள் வர தான் செய்யுது.

சில காமெடி படங்களோட இந்த வாசகம் அதிகம் பார்க்க முடியும் “Your life would not be awesome without this…” நிறைய இப்படி பார்த்து இருப்பீங்களே??

இந்த இமேஜ் போடுறவன தான், நான் ரொம்ப நாள் தேடிட்டு இருக்கேன். டெண்டுல்கர் 200 ரன் அடிச்சது, ஷேவாக் 319 ரன் அடிச்ச ஃபோட்டோ போட்டு “I bet, you can’t scroll down, without liking this…” கடுப்பின் உச்சம்…

கவுண்டமணி, வடிவேல் படங்கள போட்டு வரும் அரசியல் விஷயங்கள், விளம்பரங்களின் தரம், தற்போதைய செய்திகள் பற்றி வரும் மீம்ஸ்கள், பெருசுகளையும் சிரிக்க வைக்கும்.

இப்ப ஒரு நியூ டிரண்ட் என்னனா, விஷயத்த எல்லா GIF ஃபார்மட்ல போடுறது. அதுல முக்கால் வாசி படங்கள், வெளிநாட்டுல சின்ன குழந்தைகள் பண்ற குறும்பு தனமா தான் இருக்கு… நம்ம ஊர் பிள்ளைங்க குறும்பு பண்றது இல்லயா, இல்ல, நம்ம ஊர்ல யாருக்கும் GIF பண்ண தெரிலயா??

கடந்த ரெண்டு மாசத்துல பயங்கர காமெடி பண்ண ரெண்டு கமெண்ட்:

1. Winter is coming
2. God is writing my love story

எவன் ஆரம்பிச்சான்னு தெரில…

இன்னும் நிறைய உலாவுது. நியூஸ் ஃபீட் எப்பவுமே நிரம்பி தான் வழியுது. தேவையான விஷயத்த படிங்க. நாட்டு நடப்பு, அறிஞர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவுகள், நல்ல புத்தகங்கள் பற்றிய குறிப்புகள், அகழ்வாராய்ச்சி, ஞானிகளின் தத்துவங்கள், ஃபோட்டோகிராபி முறைகள்ன்னு எவ்வளவோ விஷயங்கள் வருது. போகிற போக்கில் மீம்களை கடந்து செல்வதும் நல்ல சுகம் தான். சமூக வலைத்தளங்களில், சரியான, தேவையான விஷயங்களை தேர்ந்து எடுப்பது நம் கையில்.

முக்கியமான விஷயம் லைக்கும், கம்மன்ட்டும் முகநூலின் ஒரு அம்சமே தவிர, அது ஒரு கெளரவம் இல்ல…

அடுத்த பதிவுல சந்திப்போம்…

அன்புடன் பிரதீப்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s