அப்பா- ஒரு குழந்தை வளர்ப்பு என்பது அந்த குழந்தையின் வாழ்வியலை எப்படி உருவாக்கும் என்பதை 4 அப்பாக்கள் மூலமா சொல்லி இருக்குறாரு இயக்குனர் சமுத்திரக்கனி. வாழ்க்கை முறை கல்வி, படிப்பு மட்டும் தான் வாழ்க்கை, நாமுண்டு நம்ம வேலை உண்டு இருக்கணும், படிக்க வைக்கிறது தான் பெத்தவங்க கடமை, படிக்கிறதும் படிக்காததும் பிள்ளைங்க விருப்பம், இந்த 4 வகை அப்பாக்களின் மன நிலையையே படம் சொல்லுது.
படத்துல எல்லாருமே நல்ல நடிச்சிருக்காங்க. அதும் அந்த சின்ன பையன் அருமை. சில இடங்கள்ல கண் கலங்க வச்சிடுறான். சமுத்திரக்கனியோட வசனம் படத்துக்கு ப்ளஸ். கடைசில சசி குமார் பேசும் வசனங்கள் டாப் கிளாஸ். படத்துல இளையராஜா ம்யூசிக் எதும் கை கொடுக்கலை, தேவையும் படல. கொஞ்சம் எதார்த்த மீறல், பசங்களோட அதிகப்ரசங்கி தனம் எல்லாம் கொஞ்சம் படம் பாக்றவங்கள வெறுப்பேத்துநாலும், படம் நல்ல கருவோடு பயணிக்கிறது நால அது நமக்கு மறந்துடுது. எந்த ஒரு கமர்ஷியல் விஷயங்களையும் சேர்க்காமல், சரியான நீளத்தோட சொன்னதுக்கு இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.
நம்ம வீடு இல்ல, சுத்தி இருக்குறவங்க வீட்ல பிள்ளைகளை எப்படி வளர்க்குறாங்கன்னு கவனிச்சோம்ம்னா இந்த படத்தோட ஒப்பிட்டு பாக்க முடியும். கண்டிப்பா படம் பாக்றவங்களுக்கு ஒரு கேள்விய ஏற்படுத்தும். அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்ங்கறது அவுங்க அவுங்க கைல இருக்கு. போட்டி நிறைஞ்ச உலகம்ன்னு யோசிக்கிற நாம படம் பார்த்த உடனே மாறிடவும் முடியாது. ஆனா, எல்லாரும் கல்வி, வாழ்க்கை முறை ரெண்டையும் சேர்த்து யோசிக்க ஆரம்பிக்க இந்த படம் கண்டிப்பா உதவும்.
அப்பா – நன்மைக்காக