கபாலி

கபாலி – உலகம் முழுக்க உள்ள தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர் பார்த்த படம். எதுக்கு திடீர்ன்னு இந்த ஹைப்ன்னு தெரில. எந்திரன்க்கு கூட இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததா ஞாபகம் இல்லை. பாட்ஷாக்கு அப்பறம் 21 வருஷத்துக்கு கழித்து இன்னொரு கேங்ஸ்டர் (Gangster) படத்துல ரஜினி நடிச்சதனாலோ என்னமோ!.

 

சரி, படத்துக்கு வருவோம். மலேசியா வாழ் தமிழ் மக்கள், 2, 3 தலைமுறைக்கு முன்னாடி போன மக்கள், மலேசியால ரொம்ப கஷ்டப்படுறாங்க, அவுங்கள காப்பாத்த களம் இறங்குகிறார் இந்த கபாலி. படம் முழுக்க ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள். எல்லாருக்கும் சமமான முக்கியத்துவம் இருக்கு. ஆனா அத்தனை கதாபாத்திரத்தையும் கட்டி ஆள்றார் நம்ம சூப்பர் ஸ்டார். மெதுவான நடை, நிறச்ச தலை முடி, தீர்க்கமான பார்வை, எப்பவுமே எதையாவது யோசிச்சுட்டு இருக்குற முகம்ன்னு ரியாக்ஷன்ஸ் அல்டிமேட். ப்ளேசர் போட்டு வந்தாலும் சரி, லெனின் ஷர்ட் போட்டு நார்மலா வந்தாலும் சரி, ரஜினி ரஜினி தான்.

 

இவ்வளோ பெரிய எதிர் பார்ப்பு உள்ள படத்துக்கு ஸ்டோரி லைன் வெய்ட் இல்ல.  முதல் பாதில மெனக்கிட்ட திரைக்கதையை, இரண்டாம் பாதிலயும் கடை பிடிச்சி இருக்கலாம். ராதிகா ஆப்தேவே தேடிட்டே இருக்குற சீன்ஸ் கம்மி பண்ணி இருக்கலாம்.(ரஜினி படத்துல அவுங்கள தேடி கார்ல எவ்வளோ நேரம் யா போவீங்க.) அட்டக்கத்தி தினேஷ், ரித்விகா, ஜான், ராதிகா ஆப்தே எல்லாரும் அவுங்க அவுங்க வேலைய ஒழுங்கா செஞ்சி இருக்காங்க. ராதிகாவுக்கு ஸ்பெஷலா சபாஷ் போடலாம்.

 

ரஜினிக்கு எதிர் நின்னு ஒரு ரகுவரன் மாதிரி கவுண்டர் பேசுற வில்லன் இல்லாதது படத்துக்கு மிக பெரிய மைனஸ். ஆனா ஒன்னு, நம்ம ஊர்ல சண்டை நடந்தா கையால, காத்தியால சண்டை  போடுறாங்க (பாண்டிச்சேரி பயிட்), மலேசியால சண்டை நடந்தா ஒன்லி துப்பாக்கி. சந்தோஷோட பி.ஜி.எம்மும் நெருப்புடா ஓட நின்றுது. மாய நதி பாட்டு கேக்கும் போது இருந்த பீல், படத்துலயும் கொடுத்தது அழகு.

கபாலி – ரஜினிக்காக மட்டும்.

 

அடுத்த படுத்துல சந்திப்போம் ,

அன்புடன் பிரதீப்

 

Advertisements

One Comment Add yours

  1. எதிர்ப்பார்ப்பு இருந்த எதுவும் நல்ல இருக்காது என்பதற்கு கபாலி ஒரு நல்ல உதாரணம்

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s