ஜோக்கர்

ஜோக்கர் – விகடன் மூலம் நமக்கு பரிச்சயமான ராஜு முருகனோட படம். ஏற்கனவே குக்கூல இவரோட படைப்பை நாம பாத்தது நால இவருக்கு எந்த இன்ட்ரோவும் தேவ இல்ல. படத்துக்கு வருவோம். நாட்ல எங்க பாத்தாலும் ஊழல், யாரும் அதே தட்டி கேக்குறதுக்கும் தயாரா இல்ல. இந்தியாவுல யாருக்கு அதிக பவர்? பரதமருக்கா இல்ல ஜனாதிபதிக்கா? நாட்டுல உள்ள பிரச்சனைக்குனா யார் தீர்வு காணுறது? இப்படி ஒருத்தருக்கு கேள்வி வர, அவர் தனக்கு தானே பதவி பிரமாணம் செய்து கொண்டு மக்கள் ஜனாதிபதியா பொறுப்பேத்துகிறார்.

அவர் யார், அவரின் பின்புலம் என்ன, ஏன் அவருக்கு இந்த கேள்விகள் எழுந்தது, அவர் அதுக்கு அப்பறம் என்ன பண்ணார் என்பதை நம் மூஞ்சில் அறையுற மாதிரி சொல்ற படம் தான் ஜோக்கர். குத்து பாட்டு இல்ல, அடி தடி சண்டை இல்ல, மசாலா ஏதும் இல்ல, நட்சத்திர பட்டாளம் இல்ல, தமிழ் படத்தோட சூத்திரம் எதுமே இல்லாம படத்தை எடுத்துருக்குற ராஜு, வெல் டன்!!!.

படத்துல முக்கியமான கதாபாத்திரமா வருவது 3 பேர் தான். இந்த மூணு பேர சுத்தி தான் கேமராவும் நகருது. ஒன்னு நம்ம ஜனாதிபதி சோமசுந்தரம். அவரோட மெடுக்கும், நடையும், புருவ தோரணையும், மிளிர்கிறார். வித விதமான போராட்டம் பண்ணும் போது, நகைச்சுவை உணர்வை நமக்கு தந்தாலும், அதுல உள்ள சமூக பார்வைல அவர் மனசுல நிக்குறார். ‘ஒரு கண்ணு காந்தி, இன்னொரு பக்கம் பகத்சிங்கை வச்சிருக்கேன். எனக்கு கோவம் வந்துச்சி பகத்சிங்க அவுத்துவிட்டுருவேன் பாத்துக்க’ என்று சொல்வதில் ஆரம்பித்து, தனது காதலிக்கு வீட்டை சுத்தி காட்டும் போதும் உள்ள நெளிவு வரை அப்ளாஸ் அள்ளுறார்.

அடுத்து, சரியான சட்டங்கள் தெரிந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் மாதிரி இருக்குற பொன்னூஞ்சல். கொள்கை பரப்பு செயாலாளரா வர இசை. ரெண்டு பேரும் காட்சிகளுக்கு கனகச்சிதம்.

படத்துல ஒவ்வொரு வசனமும்  சாட்டியடியாய் நம்மை தாக்குகிறது. ‘சகாயம் பண்ணுங்கனு சொல்லலை… சகயாம் மாதிரி பண்ணுங்க’னுதான் சொல்றோம்!’, ‘இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னு பார்த்தா… இப்போ பேள்றதையும் கஷ்டமாக்கிட்டாங்களே..!’, ’குண்டு வைக்கிறவன்லாம் விட்டுருங்க, உண்டகட்டி வாங்கி திண்ணுட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க’, ’உழைக்கிறவன் வண்டியதான போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வெச்சுக்கும்? எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’ ‘கக்கூஸ் கட்டுன காசு நாறாது’ என்று சகட்டுமேனிக்கு தாக்குது வசனங்கள். அதுக்கு ராஜு க்கு விக்ஷேஷ பாராட்டுக்கள். எந்த இடத்துலயும், பிசிர் குறையாம, காட்சிக்கு ஏத்த மியூசிக்ல பின்னுகிறார் சீன் ரோல்டன்.

ஒரு கழிவறை கட்டறதுல கூட இவ்வளோ அரசியலா, நாட்ல கிராமத்துல கழிவறைகள் இல்லாம பெண்கள் படுற கஷ்டம் எல்லாம் பாக்கும் போது மனசு பதறுது. 2 மணிநேரம் படத்தை பத்தி சொல்ல, விஷயம் நிறையவே இருக்கு. தவறாம இந்த படத்த பாருங்க. அடுத்த வருடம் இந்த படத்துக்கு விருதுகள் பல எதிர் பார்க்கலாம்.

ஜோக்கர் – இந்த நாட்டில் நாம் தாம்.

அடுத்த படத்துல சந்திப்போம்,
பிரதீப்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s