ரியோ ஒலிம்பிக்ஸ் 2016

ரியோ ஒலிம்பிக்ஸ் முடிஞ்சாச்சு. எல்லாரும் நாட்டுல என்ன என்ன மாற்றம் வரணும்ன்னு பேசியாச்சு. எல்லா செய்தி தொலைக்காட்சியும் அதை சென்சேஷனா ஆக்கியாச்சு. 2 மெடலும் வாங்கியாச்சு. எல்லாரும் பிரேசில்ல இருந்து வீடு திரும்பியாச்சு. நாம எல்லாரும் ஒலிம்பிக்ஸ் மறந்தாச்சு. இப்ப சிந்து எந்த கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துறாங்கன்னு பேச ஆரம்பிச்சாச்சு.

எத்தனை ஏக்கம் இந்தியா பதக்கம் வெல்ல. தனிமனிதனா நாம எத்தனை பேர் அதுக்கு தேவையான வேலைய செஞ்சோம்? வாய் கிழிய, நம்ம காது கிழிய சண்டை போட்டுக்கிட்ட பல செய்தி தொலைக்காட்சி அதுக்கு அப்பறம் என்ன பண்ணிச்சு? அவுங்க விவாதிச்ச ஏதாவது ஒரு விஷயம் அரசின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள பட்டதா?
பின்ன ஒவ்வொரு ஊடகமும் ஏன் இதை எல்லாம் பண்ணுகின்றது (அதை அடுத்த பதிவுல பாப்போம்). யாருக்கு தெரியும், நம்ம தான் பின்னியால 1 ரன் தோற்று போன வெறுப்புல இருக்கோமே.

எல்லாரும் நம் வீரர்கள் ஒவ்வொரு சுற்று ஜெயித்த பின்னர் தான் நாம அவுங்க யாருன்னே விக்கில தேடுறோம். கண்டிப்பா தீபாவையும், சாக்ஷியும் (காமன்வெல்த் பார்த்தவர்கள் இதில் விதிவிலக்கு) நமக்கு தெரிஞ்சி இருக்க வாய்ப்பே இல்லை. இந்திய விளையாட்டுத்துறையின் அலட்சியம் அதிகமா இருக்குறது தான், இந்திய பதக்கம் வெல்லாமல் இருக்க பெரிய காரணம்.

100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற முதல் வீராங்கனை டூட்டிச்சந்த். 36 மணி நேரம் பயணம் இந்தியா டு ரியோ. வீரர்களுக்கு வசதி குறைவான எக்கனாமி கிளாஸ் டிக்கெட், அதிகாரிகளுக்கு பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட். 36 மணி நேரம் பயணத்திற்கு பின், உடல் சோர்ந்து சென்ற டூட்டிச்சந்த் அங்கு சென்று இந்த நிகழ்வை சொல்லி அழுதாராம்.

நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட தீபா கர்மகர், ரியோ ஒலிம்பிக்ஸ் செல்லும் முன் தனது பிஸியோதெரபிஸ்ட் ஒருவரை கூட கூட்டி செல்ல வேண்டும் என்று இந்திய விளையாட்டுத்துறையிடம் கேட்டாராம். விளையாட்டுத்துறை அந்த கோரிக்கையை நிராகரித்தது. உயிரை பணயம் வைத்து “புருடோனோவா” வால்ட் செய்யும் ஒரு வீராங்கனையின் கோரிக்கை குப்பைக்கு சென்றது. இறுதி போட்டிக்கு செல்லும் போது தான் இந்திய விளையாட்டு துறை அமைச்சர் தீபாவிற்கு என்ன வேண்டும் என்றே கேட்டாராம்.

வேக நடை போட்டியில் தமிழ் நாட்டில் இருந்து போட்டியிட்ட கணபதியை எத்தனை பேருக்கு தெரியும். அவர் பதக்கம் வெல்லவில்லை. ஆனால் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து ரியோ ஒலிம்பிக்ஸிற்கு போனவர். வேக நடை எளிதான போட்டி அல்ல. 20 கிலோ மீட்டர் நடை பயணம். முக்கியமான விதிமுறை 20 கிலோமீட்டர் முழுவதும் எதாவது ஒரு கால் தரையில் முழுவதுமாக ஊன்றி இருக்க வேண்டும்.

சாக்ஷி வெண்கல பதக்கம் வெல்ல பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஒரு பெண் பிள்ளை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதில் உள்ள கஷ்டத்தை இவர் கடந்து வந்த பாதையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும், தனது மகள் ஆசைக்காக, அவ்வளவு கஷ்டத்தையும் தகர்த்து ஒரு சாதனை மகளாக மாற்றிய சாக்ஷியின் தந்தைக்கு, பெருமை படும் தருணம் இது.

ரியோ ஒலிம்பிக்ஸ் தூதர்களாக இந்த ஆண்டு இந்தியாவின் சார்பாக நியமிக்க பட்டவர்களில் ரஹ்மானும், சல்மான் காணும் அடக்கம். பெரிய நட்சத்திரங்களை இதற்க்கு முன் நிறுத்துவது எந்த விதத்தில் வீரர்களுக்கு பயன் தரும்? அந்த துறை சார்ந்த வீரர்களை தூதர்களாக நியமிக்க வேண்டும்.

வெற்றியாளருக்கு ஏகப்பட்ட பரிசு பொருட்கள் ஒவ்வொரு மாநிலமும், தொழில் அதிபர்களும் அறிவித்த வண்ணம் உள்ளனர். நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின், 3 வீர மங்கையருக்கு பி.எம்.டபுள்யூ கார்களை நேற்று பரிசாக கொடுத்தார். பாராட்ட வேண்டியவர்கள். பாராட்டுக்குத் தகுதியானவர்கள். இதே போல் எத்தனையோ கிராமத்தில், திறமை இருந்தும் வெளியே வர கஷ்ட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் பல வீரர், வீராங்கனைகளை உலக வெளிச்சத்திற்கு கொண்டு வர ஆவண செய்ய வேண்டும். இல்லை என்றால், ஸ்பான்சர் கிடைக்காம தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்ட குற்றாலீஸ்வரன் போல, நாம் இன்னும் பல நல்ல வீரர்களை இழக்க நேரிடும். அவரை போல் நாம் பல மைகேல் பெல்ப்ஸை இழந்து கொண்டி இருக்கிறோம்.

அரசு அதிகாரிகள் திருந்த வேண்டும். நல்ல திறமையான வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இப்பவே நாடு சுதாரிக்க வேண்டும். இல்லை என்றால், டோக்யோவிலுமும் அவமானங்கள் தொடரும்.

அடுத்த பதிவுல சந்திப்போம்…
அன்புடன்,
பிரதீப்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s