இருமுகன்

இருமுகன்- விக்ரம் டபுள் ஆக்ஷன், பயங்கர ட்ரைலர், செம மியூசிக் ஆல்பும்ன்னு படம் வெளி வந்து இருக்கு. நல்ல எதிர் பார்ப்பும் கூட. ஆனா நமக்கு கொஞ்சம் ஏமாற்றம்ன்னு தான் சொல்லணும். “I am a hero and I am a villain” ன்னு ரெண்டு வேடமும் விக்ரம் பட்டய கிளைப்பிருக்காரு. ரெண்டுமே விக்ரம் ன்னு சொன்ன உடனே விக்ரமன் பட அண்ணன், தம்பின்னு நினைச்சிறாதீங்க. ஒரு மருந்து, வில்லன் விக்ரம் கண்டு பிடிக்கிறான், அது என்ன மருந்து, அதுனால் என்ன ஆபத்து, எப்படி அத ஹீரோ விக்ரம் தடுக்குறாருங்கறது தான் கதை. வில்லன் விக்ரம் உடல் மொழில அப்லாஸ் அள்ளுறாரு.

இந்திய அரசாங்கம் அந்த ஆபரேஷன்க்கு யாரு தகுதி ஆனவங்கன்னு மீட்டிங் போடுறாங்க. எப்பவும் போல நம்ம ஹீரோ தான் கரெக்ட்ன்னு ஒரு ஆபீசர் சொல்ல, உள்ள வராரு விக்ரம்.

ஒரு “RAW” அதிகாரியா வரும் விக்ரம், இன்வெஸ்டிகஷன் மலேசியாக்கு போறாரு. அங்க போய், யாரை புடிச்சி கேட்டாலும் உடனே உடனே உண்மையா சொல்லுறாங்க. அதும் கருணாகரன், அவர் பிறந்த தேதி, 10த் ல எடுத்த மார்க்ன்னு எல்லாமே சொல்றாரு. க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பத்தலை. இன்னும் இயக்குனர் சுஜாதாவோட, கணேஷ் வசந்த் நாவல்ஸ் படிச்சிருக்கலாம்.

முதல் பாதி இப்படி கொஞ்சம் கடந்து செல்லுது. அடுத்த பாதில விக்ரம், வில்லன்ட்ட மாட்டிக்க, வில்லன் விக்ரமட்ட மாட்டிக்க, விக்ரம் வில்லன்ட்ட மாட்டிக்க, வில்லன் விக்ரமட்ட மாட்டிக்கன்னு, இதே தான் அங்க நடக்குது. சுவாரஸ்யமே இல்ல, இரண்டாம் பாதில. மலேஷியா போலீஸ் கொஞ்சம் வீக்கவே இருக்காங்க. அந்த வில்லன் விக்ரம், பாத்தீங்களா!!! அவர் பெயரை சொல்லவே இல்ல “லவ்”. அந்த லவ் ஹாஸ்பிடல்ல , இருக்குற காச்சல் மாத்திரை, பேதி மாத்திரை எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு மருந்து தயாரிச்சு, ஒரு வேல பண்ணுவாரு. அது என்னனும் ஹீரோக்கு விளக்கம் கொடுப்பாரு. ஒரு கெமிஸ்ட்ரி கிளாஸ் லெக்ச்சர் அது. நயன் வேற படத்துல இருக்காங்க. நயன் வந்தாலே ஒரு பாட்டு. அவளோ தானான்னு கேக்குறது குள்ள, ஒரு சின்ன ட்விஸ்ட்டோட, ரீ என்ட்ரி. பில்லா அஜித்ட்ட வேல பாத்துட்டு நேர இங்க வந்துட்டாங்க போல. அதே மாதிரி காஸ்டியூம். அதே நடை. உயிர் கொடுப்பாள் தோழி ரகத்துல நித்யா மேனன். ரொம்ப நாள் கழிச்சு ஹாரிஸோட செம பி.ஜி.எம். செம சாங்ஸ்.

இருமுகன் – கொஞ்சம் இறங்கு முகம் தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s