ஆண்டவன் கட்டளை

ஆண்டவன் கட்டளை – காக்க முட்டை மணிகண்டனோட 3ஆவது படம். ஒரு பொய் சொன்னா, அதை மறைக்க, நிறைய பொய் சொல்ல வேண்டி வரும். இந்த ஒன் லைனை மையமா வச்சி, ஒரு பாஸ்போர்ட் வாங்குற பிரச்சனையை அழகான திரைக்கதைல சொல்ற படம் தான் ஆண்டவன் கட்டளை.

ஜஸ்ட் லைக் தாட் விஜய் சேதுபதி ஸ்கோர் பண்றாரு. ஊமையை நடிக்கும் போதும், வீடு தேடும் போதும், பிரிட்டிஷ் எம்பசில, கோர்ட்ல ன்னு ஒரு ஒரு ரியாக்ஷன்ல ஒரு ஒரு உடல் மொழில அசத்துறாரு.

அடுத்து சண்டைக்காரி ரித்திகா. எப்ப கோவம் வரும், எப்ப உதிவி பண்ணுவாங்கன்னு தெரியாத, துரு துரு துணிச்சல் பொண்ணு. க்ளைமாக்ஸ்ல, லவ் ப்ரோபோசல் அப்ப, வெட்கப்படுறாங்களா, யோசிக்கறாங்களா, இல்ல உணாச்சி வசப்படுறாங்களான்னு தெரியாத மாதிரி கொடுக்குற ரியாக்ஷன் ஆஸம்.

யோகி பாபு, முதல் பாதில அவர் தான் படத்துக்கு உயிர். அவர் லண்டன் போன உடனே படமே டல் ஆகுது. அடுத்து கடைசி 40 நிமிஷம் அவர் ஃபோன் காலுக்கு அப்பறம் தான் திரும்ப சூடு பிடிக்குது. ‘அவ்ளோ நல்லவனுகளை ஏண்டா நாட்ட விட்டு தொரத்தினோம்?’, ‘நீ லண்டன் சிட்டிசன் மேல கை வைக்கறடா’ என்று அவர் வசனங்களுக்கெல்லாம் சிரிசிரி ரகம்.

விஜயோட படம் முழுக்க பயணிக்கிற இலங்கை அகதி, பெர்பாமன்ஸ், சான்ஸே இல்ல. அதும் போலீஸ் புடிச்சிட்டு போகும் போது வர சீன்ல கண் கலங்க வச்சிடுறாரு.

அருமையான காஸ்ட் தேர்வு. ஜார்ஜ், வினோதினி, ஜட்ஜ், சிங்கம் புலி எல்லாருமே ரொம்ப நிறைவா நடிச்சிட்டு போறாங்க.

இன்வஸ்டிகஷன் சீன்ஸ்ல எல்லாம், நாமே போலீஸ் ஜீப்ல உட்காதுருக்குற ஃபீலோட , அடி வயிர கலக்குது. அதுக்கு காரணம் கே வோட இசை. 4 பாட்டு, 4 ஃபாய்ட்ன்னு மசாலா படம் விரும்புவர்களுக்கு இந்த படம் கொஞ்சம் கண்டிப்பா போர் அடிக்கும். காதலும் கடந்து போகும் படம் நல்லா இல்லன்னு சொன்னவங்களையும் சேர்த்து தான். மத்தவங்களுக்கு, அருமையான திரைக்கதைல ஒரு மெஸேஜோட நகர்ந்து, அழகா முடியுற படம், மனசுக்கு ஒரு இதத்தை கண்டிப்பா தரும்.

ஆண்டவன் கட்டளை – ஆண்டவனின் சித்தம் என்றும் சுபம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s