MS தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி

MS தோனி – கிளைமாக்ஸ் என்னன்னு தெரிஞ்சு நாம போய் பாக்குற படம் தான் தோனி, தி அன்டோல்ட் ஸ்டோரி. கோல் கீப்பர் முதல் 2011 கிரிக்கட் உலக கோப்பை வரை தோனியோட பயணம் தான் இந்த படம்.

தோனி வாழ்க்கையில கடந்த தடைகள், பிரச்சனைகள், ஊக்கு விச்ச விளையாட்டு ஆசிரியர், உதவிய நண்பர்கள், தட்டி கொடுத்த உயர் அதிகாரி, கனவை நோக்கி பயணப்படுத்தல்ன்னு நிறைய அழகான சீன்ஸ் படத்துல. இந்த எல்லா தருணத்தையும் தோனி கூட வாழ்க்கைல கடந்தவங்களுக்கு, உண்மையாவே படம் பார்க்கும் போது நெகிழ்ச்சியா இருக்கும். நமக்கும் சேர்த்து தான். இன்ஸ்பிரேஷனல் பயோகிராபி.

சுஷாந்த் நிறைய வீட்டு பாடம் செஞ்சி இருக்காருன்னு தெரியுது. தோனியோட, நடை, உடை, பாவனைகளை நிறையவே உள்வாங்கி நடிச்சிருக்காரு. அக்காவா வர பூமிகா, மோட்டிவேஷன் ஓவர்லோடட். அப்பாவா கண் கலங்கும் அனுபம் அருமையான நடிப்பு. கூட இருக்குற நண்பர்கள், முக்கியமா அந்த சர்தார்ஜியும், கரக்பூர் ஸ்டேஷன் நண்பனும் அல்டிமேட். யுவராஜ் சிங் கேரக்டர் எங்க இருந்து புடிச்சாங்கன்னு தெரில. பக்கா மேட்ச்.

2 ஹீரோயின். அதுல ஒன்னு நமக்கு பரிச்சயமான முகம், “டைரி மில்க்” தீஷா. 2 ஹீரோயின், 2 லவ் இருந்தாலும். படத்துல அது எடுபடவில்லை. தேவை இல்லாம, ரொமான்டிக் சீன்ஸ் பார்க்கும் போது கொஞ்சம் நமக்கு கொட்டாவி வருது. முதல் பாதி இருக்குற விறு விறுப்பு, ரெண்டாம் பாதில எப்படா கீழ 2011 உலக கோப்பை ஃபைனல்ஸ்ன்னு போடுவாங்கன்னு தோன வச்சிருது.

கிராபிக்ஸ் வேலைகள் உண்மையா சூப்பர். மேட்ச்ல, நிறைய சீன்ஸ்ல சுஷாத்தையே காட்டிருக்காங்க. 3 மணி நேரம் இந்த படத்துக்கு தேவை இல்லை. பயோகிராபி படம் இப்படி தான் இருக்கும்ன்னு நம்மள நாமே கொஞ்சம் ஆறுதல் பண்ணாலும், இன்னும் கொஞ்சம் போர் அடிக்காம இரண்டாம் பாதி தந்துருக்கலாம் இயக்குனர்.

MS தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி –  எல்லாமே விக்கிப்பீடியலயே இருக்கு (அன்டோல்ட்  மிஸ்ஸிங்).

அடுத்த படத்துல சந்திப்போம்,
பிரது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s