ரெமோ

ரெமோ – SK ஆண்ட் KS நடிச்சிருக்காங்க. அட அப்படி தாங்க படத்துல காட்டுறாங்க. படத்துல சஸ்பென்ஸ்ன்னா ஒன்னும் கிடையாது. ஹீரோ லவ்விங், பொம்பள வேஷம், ஹீரோயின் நாட் லவ்விங், அப்பறம் லவ்விங், ஒரு ஃபைட்டிங், அப்பறம் டும் டும், டும். இதே புளிச்ச மாவு கதை தான். புதுசா சொல்லனும்னா சிவா நர்ஸ் வேஷம். காதல் மன்னன், அவ்வை ஷண்முகி, சேத்து ஒரு கலவையா கொடுத்துருக்காரு இயக்குனர் பாக்யராஜ்.

படத்த 2 பேர் தூக்கி நிறுத்துறாங்க. முதல் ஆள் சிவா. கௌண்டர், காமடின்னு எப்பவும் போல பண்ணிட்டு இருக்காரு. ரெண்டாவது ஆள். பி.சி. மனுஷன் எல்லா சீன்ஸ்லயும் சும்மா அப்படி உழைச்சிருக்காரு. என்னா கலரு, என்னா லைட்டிங்கு. அடுத்து அனிருத். இவரையும் சொல்லணும் கண்டிப்பா. செஞ்சிட்டாலே, தமிழ் செல்வி பாடல்கள் உண்மையா அல்டிமேட். பி.ஜி.யம்மும் சூப்பர்.

ஆனா ஏகப்பட்ட சொதப்பல் திரைக்கதை. ரொம்ப யூகிக்க முடியுறது படத்துக்கு பெரிய மைனஸ். திரைக்கதை பல எடத்துல சோர்வை கொடுக்குது. அட என்னடா இதுன்னு தோணுது. கடைசி 40 நிமிஷம் காதல், ஆக்ஷன், இமோஷன்ஸ் எல்லாம் சூப்பர். தொடரில பேசுற டயலாக்ஸ்னா இதுலயும் பேசுறாங்க. அதுக்காக லூசுன்னு நெனச்சீராதீங்க. 23 வயசுன்னு சொல்றாங்க, பிரசவம்ன்னா பாக்குறாங்க, பெரிய டாக்டர் போல. யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், சரண்யா எல்லாரும் அப்பப்ப வந்து போறாங்க. எப்பாவது கொஞ்சம் காமெடி.

ரெமோ – ரெமோ அளவுக்கு அம்பி அளவுக்கு தான் இருக்கு.

அடுத்த படத்துல சந்திப்போம்…

அன்புடன்,
பிரது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s