அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா – கௌதம், சிம்பு, ரஹ்மானோட அடுத்த காம்போ படம். பயங்கர எதிர் பார்ப்புகள். முதல் பாதில மஞ்சிமாவோட ரொமான்ஸ் பண்ண முயற்சி பண்ற சிம்பு, இரண்டாம் பாதில 2 துப்பாக்கியை வச்சி அச்சம் இல்லாம எல்லாத்தையும் சுட ஆரம்பிக்கறாரு. கடைசில எல்லாரும் என்ன ஆனாங்க என்பது தான் அச்சம் என்பது மடமையடா. முதல் பாதி ரொமான்ஸ்ல கௌதம் அப்லாஸ் வாங்குறார். மஞ்சிமாவும் சிம்புவும் ஓரக்கண்ணால் ரசிச்சிக்கிற எல்லா சீன்ஸுமே அழகு. ரெண்டு பேரும் சேர்ந்து பைக் ட்ரிப் போறாங்க. “பறக்கும் ராசாளியே” ன்னு பயணம் தொடங்குவது அருமை. அங்க கெமிஸ்ட்ரி, ஜாகிரஃபி, மாத்ஸ்ன்னு எல்லாத்தையும் புகுத்திருக்கிறார் இயக்குனர்.

சிம்பு நல்லாவே நடிச்சிருக்காரு. அவருக்கு ஏத்த தீனி பட கதைல இல்ல. மஞ்சிமா, மாலிவுட் படங்களை பாக்றவங்களுக்கு புதுசு இல்லனாலும், தமிழுக்கு புதுசு. சிரிக்குறாங்க, கடைக்கண்களால் நோட்டம் விடுறாங்க, ரெண்டாம் பாதில அழுதுட்டே இருக்காங்க, ஆனா நடிக்கவே மாற்றங்க. ஏன்னு தெரில.

படத்தோட மொத்த கதையை கிளைமாக்ஸ்ல 5 நிமிஷம் சொல்றாங்க. அட போங்கடா நொன்னைகளான்னு ஒரு ஃபீல் வருது நமக்கு. அதும் சிம்பு கடைசில… அய்யயோ… நான் என்னனு சொல்ல அத….

படத்துல வில்லனுக்கு முக்கியத்துவம் இல்லங்கிறத விட, வில்லன் யாருன்னே நமக்கு தெரில.துப்பாக்கி சத்தம் தான் கேட்டுட்டே இருக்கு. ஒரே கன் ஷூட்டிங் அத்தியாயம் தான். போலீஸ் நாலே ஒருத்தர் தான் மஹாராஷ்ட்ரால? எப்ப பாத்தாலும் எங்க போனாலும் அவரே வராரு!!!

ரொம்ப எதிர் பாக்க பட்ட, தள்ளி போகாதே பாடல், காட்சி அமைப்பும், புகுத்துன இடமும் பட்டாசு. ரஹ்மான்ஜி இசைல பாடல்கள் ஏற்கனவே ஹிட். பின்னணி இசை ஓகே டைப்.

அச்சம் என்பது மடமையடா – செகண்ட் ஹாஃப் ரொம்ப கொடுமையடா (100 ரூபாய்க்கு ஒர்த், அதுக்கு மேல ஒர்த் இல்ல)

அடுத்த படத்துல சந்திப்போம்,

அன்புடன்,
பிரது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s