“நான் உன்கிட்ட என்ன சொன்னேன் ?”
“பழைய ஐந்நூறு ஆயிரம் செல்லாதுன்னு சொன்னீங்க.”
“வேற என்ன சொன்னேன் ?”
“அதை பேங்கில கொடுத்து மாத்திக்கன்னு சொன்னீங்க…”
“உன்கிட்ட எவ்வளவு இருந்தது ?”
“இரண்டு ஐந்நூறும் ஓர் ஆயிரமும் இருந்தது”
“பேங்குக்குப் போனியா ?”
“போனேனே”
“அங்கே என்ன நின்னுது ?”
“பெரிய வரிசை நின்னுது”
“நீயும் நின்னியா ?”
“நின்னேனே”
“நாலு மணி நேரம் கழிச்சு உள்ள போனியா ?”
“போனேனே”
“உள்ளே போய் என்ன கொடுத்தே ?”
“உள்ள போய் என் ஐந்நூறையும் ஆயிரத்தையும் கொடுத்தேன்”
“அதுக்கு அவன் என்ன கொடுத்தான் ?”
“ஒரு இரண்டாயிரம் ரூவா நோட்டு கொடுத்தான்”
“வாங்கினியா ?”
“வாங்குனேன்”
“வெச்சிருக்கியா ?”
“வெச்சிருக்கேன்”
“ஏன் வெச்சிருக்கே ?”
“மாத்த முடியல. வெச்சிருக்கேன்”
“இப்ப நான் கறுப்புப் பணம் ஒழிஞ்சிடுச்சுன்னு சொல்றேன்…”
“என் பணத்தை நான் மாத்திகிட்டதுல எப்படி ஒழியும் ?”
“அவன் மாத்த முடியாது… அதனால் ஒழியும்”
“அப்ப வரிசைல நிக்கிறவன்லாம் யாரு ?”
“அது உன்னை மாதிரி ஐந்நூறு ஆயிரம் வெச்சிருக்கிறவன்”
“அவனை ஒழிக்க நான் ஏன் துன்பப்படணும் ?”
“தேசம் நல்லாருக்கணும்னா நீ துன்பப்படணும்”
“நான் என்னய்யா பாவம் பண்ணினேன் ?”
“வஉசி செக்கிழுத்தார். பகத்சிங் தூக்குல தொங்குனார். நீ லைன்ல நில்லு”
“கறுப்புப் பணம் வெச்சிருக்கிறவன் எப்ப துன்பப்படுவான் ?”
“அவன்கிட்ட இருப்பது இப்ப செல்லாது… மீண்டும் அதைச் சேர்க்கறதுக்குத் துன்பப்படுவான்…”
ஒன்னு இங்க இருக்கு…இன்னொன்னு…
Advertisements