சென்னை 6000028, II இன்னிங்ஸ்

சென்னை 6000028, ரெண்டாவது இன்னிங்ஸ் – வந்துட்டோம்ன்னு சொல்லு, 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனோமோ அப்படியே திரும்ப வந்துட்டோம்ன்னு சொல்லுன்னு “Boys are back” ன்னு வந்துருக்காங்க இந்த வெங்கட் பிரபு ரியூனியன்ல. அதே கூட்டணி வச்சி, கதை தொடர்ச்சில, வசன தொடர்ச்சில, காட்சிகளின் அடுத்த வரிசைல திரைக்கதையை அமைச்சதுக்கு இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.

எஸ்.பி.பி குரல்ல எல்லாருக்கும் முதல் பாகத்துல இன்ட்ரோ, இங்க வெங்கட் பிரபு குரல்ல படம் ஆரம்பிக்குது. 10 வருஷத்துல எல்லாரும் இள அங்குல்ஸ். ஜெய்க்கு தேனீல கல்யாணம். அங்க ஒரு பிரச்சனை, அதுக்கும் கிரிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம், பிரச்சனை என்ன, கல்யாணம் நடந்ததாங்கிறதா விறு விறுப்பா சொல்லி இருக்காங்க.

ஷார்க்ஸ் டீம்க்கு எப்படி அந்த பெயர் வந்தது தெரியுமா? எனக்கே தெரியாது. ஏன்னா அது அவளோ பழசு. எங்க வியட்நாம் காலனி படத்தை தான், நீங்க காப்பி அடிச்சு அவதார் எடுத்து இருக்கீங்க காமரூன்ன்னு சிவா பேசுற டியலாக்ஸ்க்கு எல்லாம் தியேட்டர்ல க்ளாப்ஸ் அள்ளுது. முதல்பாகத்துல கில்லியா இருந்த நிதின் சத்யா, விஜய் வசந்த் இப்போ மனைவிக்கு பயந்த கணவர்களா நச். பிரேம்ஜிக்கு இந்த படத்துலயும் விர்ஜின் பாயவே வராரு. புது இணைப்பா வரும் வைபவ், கிராமத்து வில்லத்தனத்துக்கு பக்கவா பொறுந்துறாரு. ஒரு பாட்டு நாளும் சொப்பன சுந்தரியா வந்து போறாங்க மனிஷா.

கல்யாண வாழ்க்கைனா டார்ச்சர் மச்சான்ன்னு எப்பவும் போல இந்த படத்துலயும் சொல்லி இருக்காங்க. அதுக்காக எதுக்கு எடுத்தாலும் “மச்சி ஓபன் தி பாட்டில்” ன்னு கெளம்புறது ரொம்ப ஓவர் பாஸ். இதுல கங்கை அமரனையும் அசிங்க படுத்தணுமா?ஜெய் பொண்ணு கொடுக்க மாட்டேன்ன்னு சொல்ற அப்பா, கட்டப்பஞ்சாயத்து பண்ற ஒருத்தனுக்கு கட்டி கொடுக்க சம்மதிக்கிறது, சச்சு செய்யும் பாட்டிகள் ட்ராமா, கிழக்கே போகும் ரயில் காலத்துக்கு டெக்னீக் சார். யுவன் இசை அந்த அளவுக்கு எடுபடல படத்துக்கு. சொப்பன சுந்தரி, வீட்டுல யாரும் இல்ல பாடல்கள் கேக்குரே ரகம். இந்த படம் முதல் பாகம் பண்ணும் போதே 3 பாகம்ன்னு யோசிச்சதாக வெங்கட் பிரபு சொன்னாரு. அதே பாணில படத்தை முடிச்சசு இருக்காங்க.
சென்னை 6000028, ரெண்டாவது இன்னிங்ஸ் – ரெண்டாவது இன்னிங்ஸ்ல விண்ணாய்ட்டாங்க. பைனல்ஸ்ல பாப்போம்….

அடுத்த படத்துல சந்திப்போம்,
அன்புடன்,
பிரதீப்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s