தை திருநாள்…

தை பிறக்கப்போகிறது. எல்லா வருடமும் போல் இந்த வருடமும் ஜல்லிக்கட்டுக்கு நாம் மல்லுக்கட்டிட்டு தான் இருக்கிறோம்.
தமிழரோட, தமிழ் கலாச்சாரத்தோட, விவாசியோட ஒரு அழகு பண்டிகையாக பார்க்கப்படும் நாள் தை திருநாள்.

புத்தாடை உடுத்தி, புது பானையில் பொங்கலிட்டு, கரும்பு கடித்து கொண்டாடும் அற்புதமான பண்டிகையே பொங்கல். அது என்ன பொங்கல் 4 நாள் கொண்டாடப்படுகிறது. எதற்கு ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பெயர்? போகி முதல் காணும் பொங்கல் வரை. எதற்க்காக இந்த 4 நாள்? யோசித்தது உண்டா?

உழவுக்கு பண உதவி செய்தவர்கள், உழவு தொழில் செய்பவர்கள், உழவுக்கு உதவிய இயற்கை, கால்நடைகள், அதனால் பயனடைந்தவர்கள்ன்னு அனைத்து மக்களும் கொண்டாடவே பொங்கல் 4 நாள் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு இடத்திலும் (தமிழக பகுதிகளில்- தஞ்சாவூர், திருவள்ளூர்,கன்யா குமாரி, மதுரை மாதிரியாக) ஒவ்வொரு பெயர்களில், ஐப்பசியில் பயிர் நட்டு, மார்கழி தையில் அறுவடை நடக்கும். பெரும்பாலும் இந்த சமயங்களில் சம்பாவும், நவாரயும் இருக்கும். அதை போகம் பண்ணுதல் என்று அழைப்பார்கள். தங்களது நிலங்களில் போகம் பண்ணுபவர்கள், ஆரம்பிக்கிறார்கள், கொண்டாட்டத்தின் முதல் நாளை போகி பண்டிகையாய்.

அடுத்து அந்த உழவு தொழிலை, ராப்பகலாய் அயராது பாடுபட்டு அறுவடை செய்த விவசாயி, பொங்கலிட்டு, உழவை ஆசிர்வதித்த சூரிய பகவானுக்கு படையலிட்டு, கொண்டாடும் பண்டிகையே இரண்டாம் நாள் கொண்டாட்டம்.

இந்த உழவு தொழிலுக்காக தனது உழைப்பை நமக்காக அளிக்கும் மாடுகளுக்காக, அதை வளர்ப்பவர்கள் கொண்டாடும் 3ஆம் நாள் கொண்டாட்டம் மாட்டுப் பொங்கல்.

உழவு தொழிலில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத தொழில் செய்பவர்களான, வீடு கட்டுபவர்கள், ஆயுதம் செய்பவர்கள், தச்சு வேலை செய்பவர்கள் என்று உழவு தொழிலை வெறும் கண்ணால் காண்பவர்கள் கொண்டாடும் நாளே காணும் பொங்கல்.

இப்படி எல்லா மக்களும், அன்போடும், நன்றியோடும் கொண்டாடவே 4 நாள் பண்டிகை மிக விமர்சையாக தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

நம் வீட்டில் இந்த பழமொழியை அதிகம் நாம் கேட்டதுண்டு. “தை பிறந்தால் வழி பிறக்கும்”. தை மாதம் வரை அடர்த்திகையாக செழுமையாக வளர்ந்து நிற்கும் நெற்கதிர்கள், தை மாதம் அறுவடை செய்யப்படும். ஒரு வரப்பில் இருந்து எதிர் வரப்பிற்கு செல்ல, வழி தை மாதத்தில் பிறக்கும் என்பதே இதன் உண்மையான பொருள்.

பிறக்கும் தை திருநாள், அனைவருக்கும் நல்ல வழியை உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துகள் சொல்லும்,

உங்கள் அன்பு பிரதீப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s