தாயுமானவன்

தாயுமானவன் பாலகுமாரனின் ஒரு அற்புத நாவல். நாவலின் தலைவனுக்கு வேலை போகிறது. அதற்கு காரணம் அவன் “தலைவனாக (அலுவலகத்திலும்)” இருப்பதால் தான். ஒரு வருடம் வீட்டிலேயே முடங்கி கிடைக்கிறான். வீட்டில் இருக்கும் பிரச்சனைகள், குழந்தை வளர்ப்பு, சமையல் எல்லாம் கற்றுக்கொள்கிறான். அந்த ஒரு வருடம் அவனுக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. ஒரு வருடம் கழித்து அவன் குடும்பமும், அவனும் என்ன ஆகிறர்கள் என்பதை அழகாக சொல்லி முடிக்கிறார் பாலகுமாரன்.

குடும்ப உறவுகளை கை ஆள்வதில் பாலகுமாரனுக்கு ஆளுமை அதிகம். அவரின் ஒவ்வொரு குடும்பம் சார்ந்த படைப்புகளில் இதை காணலாம். புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பிரச்னையை பேசுகிறது. அதற்கு ஒரு தீர்வையும் சொல்லி முடிக்கிறது. அந்த குடும்பத்தில் நீங்களும் பரமுவுடன் சேர்ந்து வாழ முடியும். அவன் பிரச்னையை அருகில் இருந்து யோசிக்க முடியும். அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியும், அவன் எடுக்கும் முடிவிற்கு ஆலோசனை வழங்க முடியும். இந்த விஷத்தில் பாலகுமாரன் இந்த நாவலில் ஜெயிக்கிறார்.

அலுவலகத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் தீர்க்கமாக யோசித்து முடிவு செய்யும் பரமு, வேலை போகும் வரை, எந்த இடத்திலும் உணர்ச்சி வசப்படுவதில்லை. அந்த பொறுமையை வீட்டிலும் அவன் கடைபிடிக்கிறான். தன் மனைவி, மகளை கோவித்து கொள்ளும் போதும், அவளை பொறுமையாக சொல்லி தரும் படி வற்புறுத்துகிறான். குழந்தைகளை மென்மையாக வளர்க்க வேண்டும் என்பதை முழு நாவலிலும் பரமு வற்புறுத்துகிறான். அமைதியான குடும்பம் குழந்தைகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை அந்த இரண்டு குழந்தைகள் மூலம் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.

அமைதியான குடும்பம், மென்மையான, குதூகலமான குடும்பம். அமைதி, சொல்லிலும், செயலிலும்.

அடுத்த புத்தகத்தில் சந்திப்போம்,
அன்புடன்,
பிரதீப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s