இன்று விகடன் விருதுகள் சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. வெறும் சினிமாகாரர்களுக்கான விருது வழங்கும் விழா.
அந்த விளம்பரத்தை பார்த்தவுடன், நான் 10 நாள் முன்னால் படித்த வலைப்பதிவு தான் ஞாபகம் வருகிறது. அதன் லிங்கை கீழே கொடுத்துள்ளேன் நேரம் இருந்தால் படியுங்கள்.
விகடன் மாதிரியான வெகு ஜனங்கள் வாசிக்கும் பத்திரிக்கை சமீப காலமாக அந்த பத்திரிக்கையை வெறுக்க வைத்திருப்பதை நீங்கள் பலர் சொல்லி கேட்டு இருக்கலாம். காரணம் அதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம்.
நானும் வாரா வாரம் தவராமல் புத்தகம் வாங்குபவன் தான். ஆனால் அதன் மீது உள்ள வெறுப்பு கூடிக்கொண்டே செல்கிறது. 1.5 நேரத்துக்கு மேல் வாசிப்பதற்கு தரமான உள்ளடக்கங்கள் இல்லை. வெறும் சினிமா சார்ந்த பதிவுகள், அவர்களின் வாழ்க்கை பற்றிய தகவல்கள். இருந்தாலும் வேள்பாரி, ஒரே ஒரு பூமி மாதிரியான சில உள்ளடக்கங்களே வாங்குவதற்க்கு தூண்டச் செய்கிறது. மாற வேண்டும், விகடன் உள்ளடக்க தரத்தில்.
அந்த லிங்க் இதோ:
http://www.nisaptham.com/2017/01/blog-post_13.html?m=1
அன்புடன்,
பிரதீப்.