கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா – இந்த வார இறுதியில் நான் படித்து முடித்த புத்தகம். கண்ணனை, சம கால நிகழ்வுகள், ஆராய்ச்சிகள், அறிவியல் உண்மைகளோடு ஒப்பிட்டு எழுதி இருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. இந்த நூற்றாண்டின் ஒரு சிறந்த படைப்பாகவே இது வரை இந்த நாவல் பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணனின் யாதவர் குலம் நாசமாகிறது. கிருஷ்ணனும் இறக்கும் தருணம். கிருஷ்ணன் எப்படி இறக்க போகிறான் ?, யாரால் ?, அவன் இறந்து விட்டால் என்ன ஆகும், அவன் இறந்த செய்தியை யார் நமக்கு சொல்வார்கள்? இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் விடை சொல்கிறார் ஆசிரியர்.

கிருஷ்ணன் ஒரு அவதாரம். குறும்பு பயல். அனைவருக்கும் பிடிக்கும் ஒரு உயிர். அது அவன் கடவுள் என்பதற்காக அல்ல. அவனுடைய குணத்திற்க்காக. அவன் எந்த இடத்திலும் தன்னை கடவுள் என்று சொல்லி கொள்வதில்லை. அவன் செய்த எல்லா கர்மங்களுக்கும், நியாயம் கற்பிக்கிறான். பாரத போரில் நடந்த அத்துணை சதிகளுக்கும் அவனே காரணம். தர்மம், தர்மம், என்று பேசும் அனைவருக்கும் இவன் கூறும் விடை ஒன்றே, தர்மம் அதர்மம் என்று இல்லவே இல்லை. ஒரு செயலின் முடிவை பொறுத்து தான் அது அமைகிறது என்று.

புத்தகத்தில் ஆசிரியர், கிருஷ்ணனின் ஒவ்வொரு அரசியல் தந்திரங்களும், அவன் எடுக்கும் முடிவுகளுக்கும் இக்கால psychological விளக்கம் அளிக்கிறார். பல ஆராய்ச்சியாளர்களின் பெயர்களையும், பல மேல் நாட்டு கதாபாத்திரத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.

கிருஷ்ணன், அவனின் யாதவ குலம், அதை தோற்று வித்தது யார்? யயாதி யார், அவனின் தந்தை நகுஷன் யார்? என்று கிருஷ்ணனின் 3 தலைமுறைக்கு முன்னாள் நீள்கிறது கதை. குருக்ஷேத்திர போர் முடிந்து துவாரகையில் நடந்த சில நிகழ்வுகள் பற்றியும் பேசுகிறார் ஆசிரியர். அது மட்டும் மல்லாமல், கிருஷ்ணனின் மகன் ப்ரத்யும்னன், கிருஷ்ணனின் பேரன் அனிருத்தாவின் காதல் வரை இந்த பக்கம் நீள்கிறது. இதில் கிருஷ்ணனின் அனைத்து 8 மாணவிகளை பற்றியும் சொல்ல வில்லை என்றாலும், கிருஷ்ணா ராதா காதல், ருக்குமிணி, சத்தியபாமா விவாஹம், எல்லாம் வருகிறது. காதல் ராதையை பார்க்க கிருஷ்ணன் திரும்ப கோகுலம் வந்திருந்தால், அவனின் மனநிலை இப்படி இருந்துருக்கும் என்ற உணர்வோடு கதை முடிவை நோக்கி நகர்கிறது.

216 பக்கங்களில் இவ்வளவு சொல்ல முடியுமா என்று பார்த்தால், அங்கு தான் ஆசிரியரின் படைப்பு மேலோங்கி இருக்கிறது.இது கீதை போலவோ, ஹரிவம்சம் போலவோ, விஷ்ணுபுரம் போலவோ இல்லை, அதனால் இதில் காணும் உபதேசங்களை தேடாதீர்கள் என்ற disclaimer உடன் முடிக்கிறார் ஆசிரியர்.

அடுத்த புத்தகத்தில் சந்திப்போம்,
அன்புடன்,
பிரதீப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s