கற்றதும் பெற்றதும் 2

எனது இனிய எழுத்தாளனை நான் கொண்டாட சில உதாரணங்கள்… கற்றதும் பெற்றதும் வரிசையில் 2 ஆவதாக… ஆறு வார்த்தைகளில் ஒரு கதை எழுத முடியுமா என்று ஹெமிங்வே சவால் விட்டு, ‘விற்பனைக்கு – குழந்தைக் காலணிகள், எப்போதும் அணியாதது ‘ (For Sale. Baby Shoes. Never Worn.) என்று எழுதி பிரம்பிக்க வைத்தார். அதைத் தொடர்ந்து ஜான் அப்டைக், நார்மன் மெய்லர் போன்றவர்களும் ஆறு வார்த்தைகளில் கதைகள் எழுதினர். தமிழில் எனக்கு பிடித்த ஆறு வார்த்தை…

எஸ்.ரங்கராஜன் என்கிற நான்…

பிப்ரவரி 27 – எழுத்தாளர் சுஜாதாவின் நினைவுநாள். திருச்சி பெரியகடைத் தெருவில் இயங்கி வந்த `சிவாஜி’ இதழில், ‘எழுத்தில் ஹிம்சை’ என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய முதல் சிறுகதை வெளியானது. எஸ்.ரங்கராஜன் என்கிற தனது இயற்பெயரில்தான் அந்தக் கதையை எழுதியிருந்தார் சுஜாதா. அப்போது அவருக்கு வயது 18. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்துதான் அவர் மீண்டும் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். “கதை வெளிவந்தபோது திருச்சி நகரமே அலம்பிவிட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் ‘சிவாஜி’ இதழின் காப்பிகள்…

மெர்க்குரிப் பூக்கள்

எழுத்தாளர் பாலகுமாரனோட ரொம்ப புகழ் பெற்ற நாவல். அவருடைய பல நாவல்களின் தளமான ஒரு தொழிற்சாலையின் யூனியன் பிரச்சனை, அதை சார்ந்த தொழிலாளர்களின் குடும்ப சூழலை தான் இந்த நாவலிலும் கையில் எடுத்திருக்கிறார். அழகாக ஒரு கணவன் மனைவி அறிமுகத்தோடு தொடங்கும் நாவல், அவர்களை சார்ந்த சுகங்களோடு நகரும் என்ற எதிர்பார்ப்பை சுக்குநூறாக்குகிறது. கணவன் கொலை செய்யப்படுகிறான். எதற்க்காக கொலை செய்யப்படுகிறான்? அவன் உயிர் பலி அவன் குடும்பத்தை தவிர்த்து யாரை எல்லாம் பாதிக்கின்றது, அவன் உயிர் போனதற்கு ஒரு…

உலக தாய்மொழி தினம்

பிப்ரவரி 21, உலக மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியை கொண்டாட யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று. வங்கதேச தலைநகர் டாக்காவில் 1952ம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் 1998ல் முன்மொழிந்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த யுனெஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டு இந்த தீர்மானத்தை அங்கீகரித்தது. இதையடுத்து 2000த்திலிருந்து உலக தாய்மொழிகள்…

அபத்தங்கள்…

கமல் டிவிட்டரில் பதிவிடுவதன் நோக்கம் என்ன? தனது கருத்தை சொல்வதற்க்கா…!!! இல்லை, அந்த பதிவு யாருக்கும் புரிய கூடாது, அப்ப தான் நம்மள பத்தி பேசிட்டு இருப்பாய்ங்க என்பதற்கா…!!! இதுல எதோ புரிஞ்சு மாதிரி 5000 பேர் லைக்ஸ் வேற… அதும் இன்னைக்கு போட்ட பதிவுல தெளிவா வார்தைய உச்சரிக்க ஏதுவா ஆபாச வார்தையோடு…

சி 3

சி 3 – சிங்கம் வேட்டையாடும் 3 ஆவது களம் விசாகபட்டினம். தூத்துக்குடில இருந்து  பஸ் புடிச்சு சென்னை வந்தவரு, ஒரு டிரெயின் ஏறி விசாகபட்டினத்துல இறங்குறாரு. இறங்குன உடனே ஒரு சண்டை. அவள்ளோ பேரையும் புரட்டி எடுக்குறாரு. அங்க ஆரம்பிக்குது சிங்கத்தின் வேட்டை. மருத்துவ கழிவுகள், மின்னணு கழிவுகள், இதுக்கு தான் போராடுறாரு ஹீரோ. சிங்கம் 1,2 மாதிரி, இந்த படத்துலயும் திரைக்கதைல எந்த தொய்வும் இல்ல. ஹீரோ பண்ற எல்லா காரியங்களுக்கும், கூடவே இயக்குனர் நியாயம்…

வரலாம் வா…

​இவன் அட்டாக் பண்ற புலி… இவன் அட்ராக்ட் பண்ற புலி… இவன் அட்டகாசமான புலி…  இவன் அசல்ட்டான புலி… இவன் அசாத்திய புலி… இவன் ஆணவ புலி… இவன் அடங்காத புலி… வரலாம் வா… வரலாம் வா… #SittingNearTheSeatCorner #Speech #Ore_ThrillingScene

பிரிவோம் சந்திப்போம்

பிரிவோம் சந்திப்போம் – சுஜாதாவோட ஒரு பிரபலமான புத்தகம். பெயரின் வசீகரமும் அதற்கு காரணமாக இருக்கலாம். கதையை வாசீக்க ஆரம்பித்த உடன், இவையெல்லாம் ஏற்கனவே பார்த்த இடத்திலும், பார்த்த நிகழ்வுகளாகவும் இருக்கிறதே என்று தோன்றியது. அதற்கு முதல் காரணம், கதை முழுக்க பாபநாசம், அப்பர் டாம், தாமிரபரணி ஆறு, பாண தீர்த்தம், திருநெல்வேலி ரயில் நிலையம் என்று நகர்வது தான். எனக்கு அம்பாசமுத்திரம் என்பதினால் (அம்பாசமுத்திரம், பாபநாசத்தில் இருந்து 10 கி.மீ.) இந்த இடங்கள் பரிச்சயம். இரண்டாவது…