பிரிவோம் சந்திப்போம்

பிரிவோம் சந்திப்போம் – சுஜாதாவோட ஒரு பிரபலமான புத்தகம். பெயரின் வசீகரமும் அதற்கு காரணமாக இருக்கலாம். கதையை வாசீக்க ஆரம்பித்த உடன், இவையெல்லாம் ஏற்கனவே பார்த்த இடத்திலும், பார்த்த நிகழ்வுகளாகவும் இருக்கிறதே என்று தோன்றியது. அதற்கு முதல் காரணம், கதை முழுக்க பாபநாசம், அப்பர் டாம், தாமிரபரணி ஆறு, பாண தீர்த்தம், திருநெல்வேலி ரயில் நிலையம் என்று நகர்வது தான். எனக்கு அம்பாசமுத்திரம் என்பதினால் (அம்பாசமுத்திரம், பாபநாசத்தில் இருந்து 10 கி.மீ.) இந்த இடங்கள் பரிச்சயம். இரண்டாவது காரணம் முடிவில் சொல்கிறேன்.

கதை, கொஞ்சம் சுஜாதாவின் மற்ற நாவல்களை விட சுவாரசியம் கம்மி என்றே சொல்ல வேண்டும். காரணம், கதா பாத்திரங்கள் கம்மி. ஒருவனை சுற்றி நடக்கும் காதல் போராட்டம், அவனின் ஏக்கம், ஆசை, கனவு, பொய், வஞ்சகம், கொடுமை என்று செல்கிறது. அவன் பெயரை சொல்ல மறந்துட்டேனே “ரகு…!!!” (ரகுன்னு டைப் பண்ணா கூகிள்ல ராகுன்னு வருது, கதைளையும் அவனுக்கு கிரஹணங்கள் சரி இல்ல தான்)

பெரிய ஆபிசர் பொண்ணு மதுவின் குணாதிசயம் சற்று நம்மை யோசிக்க வைக்கிறது. ரகுவின் (மறுபடி ராகு) தந்தை கோவிந்தராஜ், உண்மையில் ஒரு அற்புதமான படைப்பு. எவ்வளவு பொறுமை, யாருக்காகவும் பயப்படமானால், தன் மனதிற்கு பட்டத்தை, பொறுமையாக கையாள்கிறார். உடைந்து போன தன் மகனுக்கு தோள் கொடுக்கிறார். கதை முழுக்க ஒரு நண்பனாகவே பயணிக்கிறார்.

இந்த கதையில், நாம் எதிர் பார்க்கும் படி காதல் சுபமாக முடியவில்லை. அதற்கு ஆசிரியர் ஒரு விளக்கம் சொல்கிறார். கதையின் தலைப்பு போலவே இரண்டு பாகங்கள் இந்த புத்தகத்திற்கு. “பிரிவோம்” இந்த முதல் பாகத்தில் சொல்லி முடித்து இருக்கிறார். “சந்திப்போம்” அடுத்த பாகத்தில்.

அதை சுஜாதா எழுத கொஞ்சம் நாழி ஆகும். அதனால் நான் பாலகுமாரனின் மெர்குரி பூக்கள் படித்து விட்டு வருகிறேன்.

பூக்கள் மலர்ந்த உடன் சந்த்திக்கிறேன்,
அன்புடன் பிரதீப்.

அந்த இன்னொரு காரணத்தை சொல்லாமலே போறியேன்னு நீங்க சொல்றது கேக்குது. இந்த புத்தகத்தை தழுவி ஒரு தமிழ் சினிமாவாக வந்துள்ளது. அதில் ஒரு புதுமுக கதாநாயகன், தமன்னா நடித்திருக்கிறார். இதை நான் புத்தகம் வாசித்து கொண்டு இருக்கும் பொழுது, இணையத்தில் பார்த்தது. படம் பெயர் “ஆனந்த தாண்டவம்”. “கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே!!!… ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே!!!…” என்ற பாடல் வருமே அதே தான்.

Advertisements

One Comment Add yours

  1. subramani says:

    மனதுக்குள் ரீங்காரமிடும் கதை

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s