சி 3

சி 3 – சிங்கம் வேட்டையாடும் 3 ஆவது களம் விசாகபட்டினம். தூத்துக்குடில இருந்து  பஸ் புடிச்சு சென்னை வந்தவரு, ஒரு டிரெயின் ஏறி விசாகபட்டினத்துல இறங்குறாரு. இறங்குன உடனே ஒரு சண்டை. அவள்ளோ பேரையும் புரட்டி எடுக்குறாரு. அங்க ஆரம்பிக்குது சிங்கத்தின் வேட்டை.

மருத்துவ கழிவுகள், மின்னணு கழிவுகள், இதுக்கு தான் போராடுறாரு ஹீரோ. சிங்கம் 1,2 மாதிரி, இந்த படத்துலயும் திரைக்கதைல எந்த தொய்வும் இல்ல. ஹீரோ பண்ற எல்லா காரியங்களுக்கும், கூடவே இயக்குனர் நியாயம் கற்பிக்கிறார். தப்பு செய்ற ஒவ்வொரு ஆளுக்கும், ஹீரோவோட ஒவ்வொரு அடிலயும் ஒன்றை டன் வெயிட் விழுது.

முதல் ரெண்டு பாகத்தை விட இதுல கொஞ்சம் ஆக்குரோஷமா இருக்குறார் சூர்யா. வேகம், அதிரடி, கோவம், பன்ச்ன்னு சூர்யா 3.0 வெர்ஷன். குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச், ஃபைட்டர்களுக்கு அடி, அனுஷ்காவோட காதல், ஸ்ருதிக்கு அட்வைஸ்ன்னு படம் எல்லாம் சூர்யா தான். இரண்டாம் பாகத்துல இருந்த எல்லா வில்லன் கதாபாத்திரத்துக்கும், இங்க ஆல்ட்டர்நேட்டிவ் கதாபாத்திரங்கள் இருக்காங்க.

அழகுக்கு ஒரு ஹீரோயின், ஆட்டத்துக்கு ஒரு ஹீரோயின். ஸ்ருதி, ஹன்ஷிகாக்கு ரீபிலேஸ்மண்ட். காமெடிக்கு சூரி. ரொம்ப சுமார் ரகம். இன்னும் காமெடிக்கு மெனக்கிட்டு இருந்திருக்கலாம். எல்லாரையும் குறிப்பட முடியாத அளவுக்கு ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஆஜானுபாகுவா வரும் வில்லன், அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் போதே தெரியும், அவர் சட்டைய கிழிச்சு போட்டு, ஹீரோவோட சண்டை போடுவாருன்னு.

எல்லா காட்சிகளோடும் நம்மை படத்தோட ஒன்ற வைக்க நிறைய வீட்டு படம் செய்திருக்கிறார் இயக்குனர். அதில் பாசும் ஆகிறார். தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம்,ஆஸ்திரேலியான்னு ஊரு விட்டு ஊரு, நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பறக்குது திரைக்கதை. ஏழாம் அறிவு கிளைமாக்ஸ் எடுத்த இடத்துலயே தான் இந்த பட கிளைமாக்ஸ் எடுத்திருக்காங்க போல, அதுக்காக அதே ம்யூஸிக்க போட்டா எப்படி ஹாரிஸ் ஜெயராஜ்? பாடல்கள் ஏதும் கேட்க்கும் ரகம் (ராகம்) இல்ல.

ஒரு சண்டைக்காட்சியில் வில்லனின் ஆளை துரைசிங்கம் அடித்து வீழ்த்த, அவன் எடை இயந்திரத்தின் மேல் போய் விழுகிறான். மெஷின் எடை சரசரவென உயர்ந்து 1.5 டன் எனக் காட்டுகிறது. நிதின் சத்யா எல்லா நெட்ஒர்க் விஷயங்களும், ஜஸ்ட் லைக் தாட் பண்றாரு. ரன்வேயில் இருந்து கிளம்புகிற விமானத்தை, துரைசிங்கம் டாட்டா சுமாவை வைத்துக் கொண்டு வழிமறிப்பதெல்லாம் ஹாலிவுட் இயக்குநர்கள் கூட சிந்திக்கத் தயங்குகிற பிரம்மாண்டம். முடியல….

பக்காவான கமர்ஷியல் பேக்கேஜாக வந்துருக்கும் சி3யின் வேட்டை நல்லாவே இருக்குது. அது அடுத்த களத்தையும் தேடி போகும்ன்னு சொல்லித்தான் முடிக்குறாங்க… பொறுத்து இருந்து பாப்போம்.

சி3- மூன்றாம் முறையும் கர்ஜிக்கின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s