உலக தாய்மொழி தினம்

பிப்ரவரி 21, உலக மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியை கொண்டாட யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று.
வங்கதேச தலைநகர் டாக்காவில் 1952ம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் 1998ல் முன்மொழிந்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த யுனெஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டு இந்த தீர்மானத்தை அங்கீகரித்தது. இதையடுத்து 2000த்திலிருந்து உலக தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

‘பன்மொழி கல்வியின் வாயிலாக நிலையான எதிர்காலத்தை நோக்கி’ (Towards Sustainable Futures through Multilingual Education) என்ற வாசகத்தின் அடிப்படையில் நடப்பு 2017ம் ஆண்டின் உலக தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்படும் என்று யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.

ஒரு மொழி எப்பொழுதும் அந்தந்த காலத்திற்கும் ஏற்றார் போல் தன்னை புதுப்பித்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதன் எதிர் காலம் கேள்விக்குறியே!!! நாம் பழங்கால மொழி என்று சொல்லி கொண்டு இருக்கும் பல மொழிகள் இப்பொழுது வழக்கில் இல்லை. இயேசு பிரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அராமியா மொழிக்கு அந்த நிலைமையே. நம் ஊரில் இருந்த சமஸ்க்ரிதம் வழக்கொழியும் நிலையில் தான் இருக்கிறது.

அந்த வரிசையில் நமது தாய் மொழி ஒரு விதிவிலக்கு என்று கூறுவதில் பெருமை தான். உலக மொழிகளில் 6 மொழிகளுக்கு மட்டுமே பழங்கால அந்தஸ்த்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒன்று நம் தாய் மொழி தமிழ். தமிழ் மொழியின் அருமை பெருமைகள் சொல்லி மாளாதவை.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்” என்றான் பாரதி.
இந்த இளம் தலைமுறையினர், தங்களுக்கு தமிழ் வாசிக்கத் தெரியவில்லை என்பதை பெருமை பேசி திரிவதை நம்மால் பார்க்க முடிகிறது. தாய் மொழி கல்வியின் அவசியம் எந்த அளவிற்கு இந்த சமூதாயத்தை சென்று அடைந்து உள்ளது என்பதை சிந்த்தித்துப் பார்த்தால்…!!! விடை என்னவோ உருப்படியாக இல்லை. தமிழ் மொழி இலக்கியங்கள், அதன் நுண்ணறிவு, அழகு நடை, அதன் இலக்கணம் எல்லாமே பிரம்மிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அதை பேணி காப்பது நம் கடமை.

பள்ளிகளில் மொழிப்பாடங்களுக்கு பெரிதாக மதிப்பளிப்பதில்லை. காரணம் அதற்கு வேலை கிடைக்காது என்ற பிம்மம் தான். மொழி அறிவில் தேர்ச்சி பெரும் மாணவர்கள், எத்தனையோ பேர் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, ஊடகவியலாளராக இருக்கிறாரகள்.

ஜெர்மானியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள் இன்னும் பல நாட்டவர்கள் இன்னும் தங்கள் தாய் மொழியில் தான் கல்வி கற்கின்றனர். மொழி அறிவின் முக்கியத்துவத்தை அறிவோம். ஆங்கிலம் இக்காலத்தில் அவசியம் தான். தமிழ் கண் போன்றது, ஆங்கிலம் கண்ணாடி போன்றது. தேவை படும் போது கண்ணாடி அணிவோம். மற்ற நேரங்களில் வெறும் கண்களால் உலகை காண்போம்…

அனைவருக்கும் இனிய தாய்மொழி தின நல்வாழ்த்துகள்…

அன்புடன்,
பிரதீப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s