மெர்க்குரிப் பூக்கள்

எழுத்தாளர் பாலகுமாரனோட ரொம்ப புகழ் பெற்ற நாவல். அவருடைய பல நாவல்களின் தளமான ஒரு தொழிற்சாலையின் யூனியன் பிரச்சனை, அதை சார்ந்த தொழிலாளர்களின் குடும்ப சூழலை தான் இந்த நாவலிலும் கையில் எடுத்திருக்கிறார்.

அழகாக ஒரு கணவன் மனைவி அறிமுகத்தோடு தொடங்கும் நாவல், அவர்களை சார்ந்த சுகங்களோடு நகரும் என்ற எதிர்பார்ப்பை சுக்குநூறாக்குகிறது. கணவன் கொலை செய்யப்படுகிறான். எதற்க்காக கொலை செய்யப்படுகிறான்? அவன் உயிர் பலி அவன் குடும்பத்தை தவிர்த்து யாரை எல்லாம் பாதிக்கின்றது, அவன் உயிர் போனதற்கு ஒரு அர்த்தம் இருந்ததா? அவனின் தியாகம் வெற்றி கண்டதா என்பதே கதையின் ஓட்டம்.

அவன் மனைவி சாவித்திரிக்கு, அவன் இறந்த பின்பு வரும் குடும்பம், சூழல், சமூகம் பற்றிய தெளிவு பரம்மிப்பானது. அவள் கோபாலனிடம் பேசும் ஒவ்வொரு உரையாடலும் அவளை நம் மனதில் அதிகமாக பதிய வைக்கின்றது.

சங்கரன், ஷியாமிலிக்குள் இருக்கும் நெருக்கமும், அதன் தவறும் நமக்கு ஒவ்வொரு தருணத்திலும் ஆசிரியர் யார் மூலமாகவோ சொல்லி கொண்டே வருகிறார். பெண்களை வெறும் ஜடமாக தான் ஆண்கள் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஆசை இருக்கிறது, ரசனை இருக்கிறது, கவிதையை ரசிக்க, பாடல் வரிகளில் சல்லாபிக்க ஒரு மனம் இருக்கிறது என்பதை சாவித்திரி பேசும் போது, அவள் பெண்ணியம் பேசும் அழகானவளாக தெரிகிறாள்.ஒரு காட்சியில் வாந்தாலும், காமாட்சி, ஒரு தமிழ் பெண்ணின் குணாதியங்களை பிரதிபலிக்கிறாள்.

பல விஷயங்களை அலசும் புத்தகமா இருக்கிறது. ஒவ்வொரு வாழ்க்கையும் அற்புதம் தான். சில மட்டுமே எழுதப்படுகின்றன. இந்த நாவலில் வரும் கதையை இறுதியில் சங்கரன் தன்னுடைய புத்தகமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறன். அதற்கு மெர்குரிப்பூக்கள் என்று பெயரும் சூட்டுகிறான்.

அடுத்த புத்தகத்தோடு சந்திக்கிறான்,

அன்புடன்,
பிரதீப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s