கற்றதும் பெற்றதும் 2

எனது இனிய எழுத்தாளனை நான் கொண்டாட சில உதாரணங்கள்…

கற்றதும் பெற்றதும் வரிசையில் 2 ஆவதாக…

ஆறு வார்த்தைகளில் ஒரு கதை எழுத முடியுமா என்று ஹெமிங்வே சவால் விட்டு, ‘விற்பனைக்கு – குழந்தைக் காலணிகள், எப்போதும் அணியாதது ‘ (For Sale. Baby Shoes. Never Worn.) என்று எழுதி பிரம்பிக்க வைத்தார்.

அதைத் தொடர்ந்து ஜான் அப்டைக், நார்மன் மெய்லர் போன்றவர்களும் ஆறு வார்த்தைகளில் கதைகள் எழுதினர்.

தமிழில் எனக்கு பிடித்த ஆறு வார்த்தை கதை – ‘ ஒரு ஊர்ல ஒரு நரியாம் அதோட சரியாம் ! ‘.

உலகில் மிகச் சிறிய விஞ்ஞானப் புனைக்கதையை எழுதியவர் மைக்கேல் இ பிளேக். அவரது இந்தக் கதை, உலகின் பல தொகுப்புகளில் வந்திருக்கிறது. அசிமாவ் கூட அதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தக் கதையை மொழிப்பெயர்க்க எனக்கு ஐந்து செகண்ட் ஆனது.

கதையின் தலைப்பு ‘ டெலிப்பதிகாரர்களுக்கான விஞ்ஞானக் கதை’ அதன்பின், கதை ? ம்ஹூம் எதுவுமில்லை! வெற்றுத் தாள்தான். ‘டெலிப்பதி’ என்பது எண்ணங்கள் மூலம் பேசிக்கொள்ளும் திறமை என்பது தெரிந்து யோசித்தால், இந்தக் கதையின் புத்திசாலித்தனம் புரியும்.

உலகில் மிகச் சிறிய திகில் கதை எது ?

உலகின் கடைசி மனிதன் தனியாக ஒர் அறையில் உட்கார்ந்த்திருந்தான். கதவு தட்டப்பட்டது.

இதன் திருத்தங்கள் பலவற்றில் எனக்கு பிடித்தது…

உலகின் கடைசி மனிதன் தனியாக ஒர் அறையில் உட்கார்ந்த்திருந்தான். கதவு ‘பூட்டப்படது’.

சுஜாதாவின் நினைவாக அவரின் சில வரிகள்… 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s