பிரிவோம் சந்திப்போம் 2 – பிரிவோம் சந்திப்போம் முதல் பாகத்தில் மதுவும், ரகுவும் பிரிந்ததாக கதை முடிந்தது. நான் முந்தய பதிவில் சொன்ன மாதிரி, அதன் இரண்டாவது புத்தகம் அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். பாபநாசத்துல கட் பண்ணி, ஓபன் பண்ண பள பளக்குது நியூயார்க் நகர கென்னடி விமான நிலையம்.
ரகு (டைப் பண்ணும் போது ராகுன்னு தான் வருது. இங்கயும் அது தொடருதுன்னு தான் சொல்லணும்) தனது மேல்படிப்பிற்காக, அப்பாவின் ஆசைக்காக, ‘தன்னாலயும் வாழ்த்துக்காட்ட முடியும்’, அவர்கள் போல் என்ற ஒரு வைராகியத்துடன் வந்து சேர்கிறான். வந்த முதல் வாரம் அமெரிக்கா வாழ்க்கை, அவனை பாடாய் படுத்துகிறது. உணவு, உடை, திருட்டு, இந்தியன் என்ற கேலி, பாஷை, அமைதின்னு வித்தியாசமான உலகம் அவனை மீண்டும் இந்தியா செல்லத் தூண்டுகிறது. படிப்பின்மேல் கொஞ்சம் தான் நாட்டம் செலுத்துகிறான். தன்னால் முடியாது, இது தனக்கான இடம் இல்லை என்பதை ஆணித்தரமாக நம்புகிறான். கடைசியில் மதுவையும் சந்திக்கிறன். அவன் அப்பா கோவிந்தராஜ் அவனுக்கு கொடுத்த உபதேசங்கள் எல்லாம் வீணாக செல்கிறது. அவன் தனது வைராக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறான். அவளை தவிர்க்க முயற்சி செய்தலும், மது, மது என்று முழு சிந்தனையில் இருக்கிறான்.
மது, அமெரிக்க வாசத்துக்கு தன்னை வடிவமைத்துளாள் (வடிவமைக்கப்பட்டுள்ளால் என்பதே சரி). அது எதோ அவனுக்கு உறுத்தலாகவே இருக்கிறது. ஒரு பாசாங்கு வேலை போல். திரும்ப திரும்ப “நீ சந்தோஷமாக இருக்கிறாயா என்று கேட்கிறான்?”. முதல் பகுதியில் வரும், பகுதி நேர வில்லன் ராதாகிருஷ்ணன், இங்கு முழு நேர வில்லனாக வருகிறான். கோட் சூட், சிகரெட், குடி என்று ஹை டெக் பொருக்கி.
ரத்னா கதாபாத்திரம் உண்மையில் ரத்தினம் போல்.பொறுமையான, மென்மையான பெண். அமெரிக்காவில் பிறந்து இந்தியாவில் குடிபுக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அமெரிக்கா வாழ் தமிழ் கலாச்சார பெண். கோவிந்தராஜோட வேலையை அமெரிக்காவில் அவர் நண்பர் மோகன்ராம் பார்த்துக்கொள்கிறார் . ரகுவிற்கு சில சமயம் ஆலோசனை வழங்குகிறார்.
இப்படி செல்லும் கதையில், மது,ரகு, ரத்னா, வில்லன் என்ன ஆனார்கள், கதையின் முடிவு சுபமா? என்பதை 240 பக்கத்தில் சொல்லி இருக்கிறார். நிறைய டெக்னலாஜி விஷயங்களை எப்பவும் போல் சுஜாதா அள்ளி தெளிக்கிறார். ஜெயலலிதா இறந்த பொழுது கிளப்பட்ட Embalming பற்றி பேசுகிறார். 1983 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவலில், பிற்காலத்தில் பேப்பரே தேவைப்படாது, ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னொரு கம்ப்பியூட்டரிடம் நெட்வொர்க்கிங் மூலம் பேசமுடியும் என்று இப்பொழுது உள்ள எல்லா முன்னேற்றங்களையும் கணிக்கும் தீர்க்கதரிசியாக சுஜாதா இருந்திருக்கிறார் என்றால் அது மிகை இல்லை.
புத்தகம் படித்து முடித்த உடன், அமெரிக்கா போக வேண்டும், அங்குள்ள வசதிகளை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி இருந்த என் உள்ளம் கொஞ்சம் சஞ்சலப்பட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அங்குள்ள போலி தனத்தை, அதிகமாக அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர். அவர்கள் சொல்லும் ஹாய், வெறும் உதட்டளவு மட்டுமே தவிர, உணர்வு பூர்வமானதில்லை என்பதே சுஜாதாவின் வாதம். புத்தகம் முடிந்த உடன், அமெரிக்கா ஒரு மாய பிம்பமாகவும், அதில் ஒன்றும் இல்லை, வெறும் பாசாங்கு தான் என்று தோன்ற வைக்கிறது.
அடுத்த புத்தகம் நீலப்படம்… ஒரு துணிச்சலான முயற்சி…
படித்து முடித்தவுடன் பகிர்கிறேன்…
அன்புடன்,
பிரதீப்.