மகளிர் தினம் 2017

எல்லா வருடமும் மகளிர் தினத்தன்று, மகளிர் பற்றி கண்டிப்பாக எதாவது எழுத வேண்டும் என்று நினைப்பேன். கடந்த வருடம் இலக்கியங்களில், வரலாறுகளில் பெண்களின் மகத்துவம் என்ன என்பதை பற்றி எழுதி இருந்தேன்.

 மகளிர் தினம் 2016

அதற்கு முந்தின வருடம், பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை பற்றி எழுதி இருந்தேன். (மகளிர் தினம் 2015) முகநூலில், அதை திரும்ப வாசிக்கும் போது, அந்த கொடுமைகள் எதுவும் மாறவில்லை என்பது புலப்படுகிறது . ஒன்றே ஒன்று மாறி உள்ளது. பெண்களின் பெயர்கள். ஆசிட் வீச்சு, ஆணவக்கொலை, கற்பழிப்பு, காதல் தோல்வியால் கொலை செய்தல் என்று இந்த வருடமும் ஏராளமான வன்கொடுமைகள். அதில் என்னை அதிகமாக பாதித்த ஒரு கொடுமை நந்தினிக்கு ஏற்பட்டது தான்.

ஒவ்வொரு வன்கொடுமைகள் பெண்கள் மீது நடக்கும் போதும், அந்த பெண் மீதும், அவள் பெற்றோர் மீதும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தும் ஒரு கேவலமான குழு திரியும். அவர்களின் வசை, “அந்த பொண்ண அவுங்க வளர்த்த விதம் அப்படி…”. மற்றவர்கள், அந்த நிகழ்வை எடுத்துக்காட்டி, அது நம் வீட்டு பெண்ணுக்கு நடக்காமல் இருக்க அறிவுரை வழங்கும் சமூகம், அந்த கொடுமையை செய்த ஆண் போல் நீ இருக்கக்கூடாது என்று தன் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு ஏன் சொல்லித்தருவதில்லை? சமூகம், சமூகம் என்று எதற்கு எடுத்தாலும் சமூகத்தை வசை பாடும் நாம், சமூகம் என்பது நம் ஒவ்வொரு வீட்டின் கட்டுமானம் தான் என்பதை ஏன் புரிய மறுக்கிறது…? பின் சமூகம் எந்த விதத்தில் முன்னேறும்… பெண்களுக்கு சொல்லிட தரப்படும் கட்டுப்பாடும், ஒழுக்க அளவுகளும் ஏன் ஆண் குழந்தையை அடைவதில்லை?

உங்கள் வாட்ஸப்பில் கடந்த இரண்டு தினங்களில், ஒரு தம்பதியரின் காணொளியை பார்த்து இருப்பீர்கள். தன் கணவனுக்கு காலையில் இருந்து பணி விடை செய்யும் அந்த பெண், அவள் எதிர் பார்க்கும் எந்த விஷயத்தையும் அந்த கணவன் செய்ய மாட்டான். ஞாயிறு வெளியே அழைத்து செல்லுதல், தான் சமைத்த உணவை பாராட்டுதல், வீட்டு வேலைகளில் சில சிறிய உதவிகள் செய்தல், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுதல், உடம்பு சரி இல்லாதபொழுது ஆறுதல் பேசுதல், இவை எல்லாம் அந்த காணொளியில் அந்த பெண் எதிர் பார்க்கும் விஷயங்கள். அதில் ஒன்று கூட அந்த கணவன் நிறைவேற்ற மாட்டான். இந்த மனநிலை, அந்த ஆண் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதத்தில் தானே இருக்கிறது? காதலிக்கும் பொழுது உருகி உருகி பேசும் ஒரு ஆண், கல்யாணத்திற்கு பிறகு அந்த அழைப்பை எரிச்சலாய் பார்க்கும் எண்ணம் எப்படி வருகிறது?

ஒவ்வொரு வருடமும், பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை பற்றி பேசிக்கொண்டே மட்டும் இருந்தால், அடுத்த வருடமும் இந்த பட்டியல் தொடரும், பெயர்கள் மாற்றத்துடன். ஆண்கள் பெண்களை விட அதிக பலத்துடன் படைக்கப்பட்டது அவர்களை பாதுகாக்க, பலாத்காரப்படுத்துவதற்கு அல்ல… பெண்ணியம் பற்றி வெறும் வாயால் பேசாமல், செய்கைகளில் காட்டுவோம். வீட்டில் ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம். நல்ல நெறி என்பது ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஆரம்பிக்க வேண்டும். அதுவே நல்ல சமூதாயத்தை உருவாக்கும். அனைவரும் சமம் என்ற மனநிலையை உருவாக்கும்.இந்த நல்ல நாளில் இந்த உறுதியை எடுப்போம்.

அனைவருக்கும் பிரதீப்பின் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s