நீலப்படம்

நீலப்படம் – பெயர் வித்தயாசமாக யோசிக்க வைக்கின்றது அல்லவா? அதுதான் இந்த புத்தகத்தின் திறவுகோல். எனக்கு இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியது விகடன். பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய 5 புத்தகங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் இடம்பிடித்த புத்தகம்.

பெயரைப் பார்த்தவுடன் யோசிக்க வேண்டாம். ஒரு தைரியமான முயற்சி. நடிகைகளும் பெண்கள்தான் என்பதை, எழுத்தும் உணர்வுமாக எழுதியுள்ள புத்தகம் இது. ஒரு ‘பி’ கிரேடு பட நாயகியின் வாழ்க்கையை மையமாக வைத்து வரையப்பட்டுள்ள கதை.

ஆனந்தியின் ஆசைகள், பொய்த்துப்போன கனவுகள், அவமானங்கள் ஆகியவற்றை சித்தரித்துள்ள நாவல். A தர சான்றிதழ், குடி பழக்கம் உடன் நலத்திற்கு கேடு, மது அருந்துதல் உடலுக்கு தீங்கானது. குடி, புகை, புணர். நூறு வருடங்கள் உடல் அழுகி வாழ்வதற்கல்ல, கொண்டாடவே வாழ்க்கை. – ஆனந்தி, அவள் இயக்க இருக்கும் படத்தின் “Story Board”ன் சில வரைபடங்கள், ரிக் வேத வரிகள் என்று வித்தியாசமான பக்கங்களுடன் மத்திய சிறைச்சாலை கடலூரில் ஆரம்பிக்கிறது கதை.

அவள் வாழக்கை தனது அம்மாவின் உலகத்தால் தான் மாறியது என்று தெளிவாக நம்புகிறாள். 16 ஆவது பக்கத்தில், ஆனந்தி தனது அம்மாவிற்கு எழுதும் கடித்ததில், வாசகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது புத்தகம். புத்தகம் முடியும் வரை அதே நிலையில் இருக்க வைக்கிறது. தான் செய்யும் எந்த விஷயத்தையும் ஆனந்தி தவறாக நினைக்க வில்லை. தான் நினைத்ததை செய்கிறாள். சமூகத்தில் தன்னை எப்படி பார்ப்பார்கள் என்ற எந்த உணர்வுமின்றி, தனக்கு கிடைத்த இந்த வாழ்க்கையை தனது விருப்பம் போல், குடியும், குடித்தனுமாக இருக்கிறாள். அதற்காக அவள் தான் செய்வது எல்லாம் சரி என்று எந்த இடத்திலும் ஞாயம் கற்பிக்கவில்லை.

பாபு என்ற அசிங்கமான விலங்கு போல், மனிதர்கள் இந்த உலகத்தில்  இருக்கிறார்கள் என்று இந்த புத்தகம் அனைவரின் முகத்திலும் அறைந்து சொல்கிறது. அவனின் ஒவ்வொரு செய்கையும் நமக்கு அருவருப்பை தர வைக்கிறது. அசாமில் ஆரம்பிக்கும் அவனின் இச்சை, சத்யா வரை தொடர்கிறது. அதற்கு தகுந்த பாடம் கற்பிக்க நினைக்கும் ஆனந்தி ஒரு உத்தமமான கதாபாத்திரம். தன்னை போல் சத்யா ஆகி விடக்கூடாது என்று அவளின் மனம் பதறுகிறது. பாபுவின் உயிர் அதற்கு பதில் இல்லை என்று தீர்மானிக்கிறாள். அதற்குண்டான தண்டனையை Increment இல் கொடுக்கிறாள். அந்த விதத்தில், பாபுவின் குணம் அசிங்கமானது என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

காமம் பற்றிய பார்வையும், புரிதலும் அவரவர் கண்ணோட்டத்தில் இருக்கின்றன என்பதை, வார்த்தைகள் வழி உணர வைக்கும் ஆசிரியர் லஷ்மி சரவணக்குமாரிற்கு ஒரு சலாம் போடலாம். (ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக, சாஹித்ய ஆகடமியின் யுவ புரஸ்கார் விருதை திரும்ப அளித்தவர்)

அடுத்த புத்தகம்… மீண்டும் “காவல் கோட்டம்”… சுமார் 5 ஆண்டுகள் முன் படித்த புத்தகம்… ஒடுக்கப்பட்ட ஒரு கள்ளர் பரம்பரையின் வரலாறு… சுமார் 1 கிலோ எடையும், 1050 பக்கங்களும் கொண்ட பெரிய புத்தகம்… மீண்டும் சந்திக்கிறேன், புத்தகம் முடிந்த உடன்…

அன்புடன்,
பிரதீப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s