ஹெலிகாப்ட்டர் வெர்ஷன் நீயா நானா

போன வாரம் நீயா நானா ஷோல ஒரு பொண்ணு என் மாப்பிள்ளையும், நானும் கல்யாண மண்டபத்துக்கு ஹெலிகாப்ட்டர்ல வரணும்ன்னு சொல்ல, அது நெட்டிசன்களுக்கு ஒரு வாரம் பெரிய தீனி. அந்த நிகழ்ச்சியை முழுமையா பார்த்த விட வேண்டும் என்று பெரிய போராட்டத்திற்குப்பின் அந்த நிகழ்ச்சியின் இணைப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை எத்தனை பேர் முழுமையாக பார்த்தார்கள் என்று தெரியவில்லை. நம் நெட்டிசன்கள் போடும் மீம்ஸ் எல்லாம் முதல் 15 நிமிடம் அந்த பெண்கள் பேசியதை பற்றியதை மட்டும் தான். அவர்களின் எதிர் வாதமாய் அமர்ந்து இருந்த அம்மக்களின் குரல்கள் சமூகத்தில் மிகவும் முக்கியமானவை.

முதல் 15 நிமிடங்கள், அந்த பெண்கள் தனக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சீர் வரிசைகளை பற்றி பேசுகிறன்றனர். அதில் சில பெண்கள் கேட்கும் விஷயம் ஒரு பந்தாவாக, ஊடகங்களில் பேசுகிறோம் என்றும், ஒரு மேட்டுக்குடி மக்கள் சமூகத்தில் இருந்து வந்திருக்கிறேன் நான் என்ற கர்வம் மாதிரி தான் தோன்றியது. அதில், எனக்கு 365 புடவை வேண்டும், காசா க்ராண்டாவில் வில்லா வேண்டும் என்பது போன்றது அடங்கும். அதை விட்டு விடுவோம். சில பெண்கள் கேட்பதில் சில ஞாயங்கள் தெரிந்தது. எனக்கு 50 சவரன் தங்கம் போட்டு விடுங்க, ஒரு வீடு கொடுங்க என்பது போன்று. இது சாதாரணமாக தெரிந்தாலும், எதிர் தரப்பில் இருந்த அம்மக்களின் முகங்களில் ஒரு மிரட்சி தோன்றுவதை நம்மால் பார்க்க முடிந்தது. 20 சவரன் முடியும், அதுக்கு மேல கடன் வாங்கி 5 சவரன் சேர்த்து, 25 சவரன் பண்ணலாம்ன்னு நினைத்து கொண்டு இருக்கும் வீட்டில் 50 சவரன், 80 சவரன் கேட்கும் போது என்ன செய்வார்கள்.

20 சவரன் தான் போட முடியும் என்ற எண்ணம் உள்ள வீட்டில், 80 சவரன் வேண்டும் என்று கேட்க்கும் பெண், வெறும் ஒரு நிகழ்ச்சிக்காக கேட்டது போல் எனக்கு தோன்ற வில்லை. இப்படி அந்த பெண்கள் பேசுவதற்கு, பெற்றோர் தான் முழுக்க முழுக்க பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். வீட்டு சூழ்நிலையை எந்த விதத்திலும் அவர்களை பாதிக்காத வண்ணம் வளர்த்த விதம். அதில் ஒரு பெண் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருந்தது. “நான் TCS ல place ஆயிட்டேன் சார். மாதம் வர சம்பளத்தை நானே எனக்கு தேவையான நகையை சேர்த்து வச்சிக்கிரேன்னு வீட்ல சொல்றேன். ஆனா வீட்ல என்னோட முழு சம்பளத்தையும் கேக்குறாங்க… என்ன ஞாயம் சார்..?” என்று கேட்டது. வீட்டு பாரம் முழுவதையும் தன் மேல் ஏற்றிக்கொண்டு, மிகவும் சிக்கனமாக, கஷ்டத்துடன் வாழும் என் நண்பர்களை பார்த்திருக்கிறேன். ஏற்கனவே வாங்குன வீட்டுக்கடன் முடியமால், அடுத்து தங்கை கல்யாணத்துக்கு எங்கு கடன் வாங்குவது என்று யோசிக்கும் நண்பர்களை பார்த்து இருக்கிறேன்.பரவலாக நம் வீட்டில் ஒரு சொலவடை உண்டு. “ஒரு பெண் குழந்தை இருந்த என்னை பாத்துக்கும். கடைசி வர அது தான் பாசமா இருக்கும்ன்னு”. ஒரு விளையாட்டாக அதை சொன்னாலும், அதில் எதோ ஒரு நம்பிக்கை இருப்பதாக தான் நான் பார்க்கிறேன். அப்படி என்ன ஆண் குழந்தைகள், பாசத்தில் குறைந்து விட்டார்கள் என்று (சில விதி விலக்குகள் இருக்கலாம்). நானும் சில சமயங்களில் அதை உண்மையாகவே, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிக பாசமாக இருக்குமோ என்று யோசித்தது உண்டு. ஆனால், அந்த TCS பெண்ணின் கேள்வி, என் யோசனை கேள்வியை திரும்ப அவர்களை நோக்கி கேட்க வைக்கிறது. அந்த நிகழ்ச்சி பார்த்த அனைத்து பெற்றோர்களும் அதை உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஒரு விளையாட்டாக ஒன்று எனக்கு இங்கே கேட்க தோன்றுகிறது. தனது சொந்த வீட்டில் இருந்து, தனது அப்பாவை, சகோதரனை கடன் காரனாக ஆக்கியாவது தான் நினைத்த பொருளை எடுத்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், கணவரை என்னா பாடு படுத்தும்…??? கேலிகள் ஒரு பக்கம் இருக்கட்டும். பெற்றோர்கள்,பெண் பிள்ளைகளை எந்த விதத்தில் வளர்க்கிறார்கள் என்று ஒரு கேள்வி எழுகிறது இங்கே. இதை பொதுப்படையாக எல்லாருடைய வீட்டிற்கும் பொருந்தாது என்ற வாதம் இருந்தாலும், அந்த நிகழ்ச்சியை மட்டும் வைத்தே பேசுவோம். சமையல் செய்ய தெரியாது என்று சொல்வது இந்த காலத்தில் ஒரு நாகரிக முன்னேற்றமாக பார்க்கிறார்கள். ஒரு அம்மா சொன்னார்கள், என் பெண் 10 வகுப்பு படிக்கும் போது, “அம்மா அந்த டிரஸ் மாதிரி தான் என் கல்யாணத்துக்கும் நீ வாங்கி தருணமும் என்று”. அந்த அம்மா அதற்கு “எனக்கு அதை கேட்ட உடன் பக்குன்னு இருந்தது சார்… நாங்கன்னா கல்யாணம் ஒரு பேச்சு வந்தாலே ஒரு வெட்கத்தோட வீட்டு குள்ள ஓடிருவோம். இப்ப என்னனா இந்த பிள்ளைங்க இப்படி இருக்குதுன்னு.” என்னோட பார்வைல இதை மாதிரி எண்ணங்கள் பெண்களுக்கு வருவது தப்பு என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. இதிலும் நாம் ஒரு அழகியலை பார்க்க முடியும். அவர்கள் அம்மா காலத்திலும், அவர்களுக்கும் இதை போன்று எண்ணங்கள் தோன்றி இருக்கும் . ஆனால் சொல்ல ஒரு கூச்சம் இருந்துருக்கும். இக்காலத்து பெண்கள் வாய் விட்டு பேசுகிறார்கள். அவ்வளவு தான்.ஆனால், குடும்ப நிலையை உணராமல், இங்கு சில பெண்கள் கேட்டது போல், அந்த TCS பெண் போல், சில அடுக்கடுக்கான கோரிக்கைகள் பெற்றோர் வயிற்றில் கண்டிப்பாக அமிலத்தை உருவாக்கும்.

மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்த்திப்போம்,

இது ஆச்சி மசாலா… நீயா நானா… அனவைருக்கும் பிரதீப்பின் அன்பு வணக்கங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s