கவண்

கவண் – ஜர்னலிசம், டிவி சேனல், ரிப்போர்ட்டர்ன்னு டிரைலர்ல பார்த்தாலே தெரியுது. கே.வி.ஆனந்த் வேற. அப்ப கோ 3 தான்னு நினைச்சி தியேட்டர் போனேன் (கோ 2 டான்னு நீங்க சொல்றது கேக்குது… அது தான் பாபி சிம்ஹா நடிப்புல ஒன்னு கேவலமா வந்துதே…) ஹீரோ எப்பவும் போல நேர்மையான ரிப்போட்டர். டிவி சேனல் முதலாளி எல்லாத்தையும் பிசினெஸ்ஸா பாக்குறவரு. ரெண்டு பேருக்கும் சண்டை. எப்படி ஹீரோ ஜெயிச்சாரு. இந்த ஒன் லைன ரொம்ப சாமர்த்தியமான கையாண்டு இருக்கிறார் இயக்குனர்.

பிஹைண்ட் தி சீன்ஸ்ன்னு எல்லா டிவி சேனல் பின்னாடியும் என்ன நடக்குதுன்னு அப்பட்டமா படம் காட்டுது. அதிலும் அந்த ரியாலிட்டி ஷோ பக்கா… விஜய் சேதுபதி அருமையா நடிச்சிருக்காரு. விஜய் சேதுபதியோட படங்களுக்கு விமர்சனம் எழுதணும்னா இந்த வசனத்தை நம்ம கிபோர்டே டைப் பண்ணிரும் போல. அதுக்கு ஏற்றாற்போல அவரோட உடல் மொழியும், நடிப்பும், பலே பாண்டியா!!! மடோனாவுடனான காதல், ஊடல் அத்தியாயங்களுக்கென்று ஓர் உடல்மொழியும், வில்லனுக்கு முன்பாக ஓர் உடல்மொழியும் காட்டி அசத்துகிறார்.

அடுத்து டி.ஆர். ரெண்டாம் பாதில தான் அவருக்கு ஏற்ற காட்சிகள் இருந்தாலும், வர எடத்துல நம்ம மனசுல நிக்குறார். அதும் எமோஷனலான கலக்குறார். என்ன..!!, அவர் பாணில அடுக்கு மொழில பேசித்தான் அங்க அங்க சோதிக்குறாரு. கே.வி.ஆனந்தின் கதை நாயகிகளுக்கு நடிக்கும் ஸ்கோப் இருக்கும். இதிலும் அப்படியே. அழகா வந்து நம்ம மனசுல நிக்குறாங்க நம்ம மடு.. (அதான்ப்பா மடோனா). அதும் “காலேஜ் ஹாஸ்டல் சீன்ல”… தியேட்டரே அலரிட்டு… அவங்க சொந்தக் குரல் பேசி நம்மள கொஞ்சம் படுத்தினாலும், முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும். பாண்டியராஜன், விக்ராந்த், நாசர், ஜெகன், போஸ் வெங்கட் என படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் அனைத்தும் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

வில்லன்,அயன் படத்துல வர அதே வில்லன் தான். அயன் படத்துல, அவர் அப்பா சொல்லுவாரு… “இவனுக்கு படிப்பும் வரல, பிஸினஸும் வரல… கணக்குபுள்ள, ராஜஸ்தானுக்கு இவனுக்கு டிக்கட் போடுன்னு…” அதே அப்பா இந்த படத்துல இருந்திருந்தா, இவனுக்கு நடிப்பும் வரலன்னு சொல்லி இருப்பாரு… எவளோ முக்கியமான கதாபாத்திரம், இப்படி பண்ணிடீங்களே கே.வி. சார்.

கேள்வி முக்கியம்னு நெனைக்கறவன் சத்தமா கேட்பான். பதில்தான் முக்கியம்னு நெனைக்கறவன் மெதுவா கேட்பான்’ என்பது போல ஆங்காங்கே  வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. ஆனா,விஜய் சேதுபதி பேசுற வசனம் சிலது புரியவே இல்ல. கொஞ்சம் மெதுவா பேசுங்க பாசு… டிவி ஷோ சீன்களெல்லாம் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம் மிஸ்டர் ஆண்டனி. முதல் பாதில இருந்த வேகம், இரண்டாம் பாதில இல்லாதது படத்துக்கு பெரிய மைனஸ். வித்தியாசமான இண்டர்வல் யோசிச்சு, இனி தான் ஆரம்பம்ன்னு சீட் நுனில உக்காந்து இருக்குற ரசிகர்களை ரொம்பவே சோதிக்குது செகண்ட் ஹாஃப். கடைசி 30 நிமிஷத்துல ஹீரோ ஜெய்க்குறது,கொஞ்சம் நாடகத்தன்மை.

படத்தின் இசை, பாடல்கள் ரொம்ப ரொம்ப சுமார் மூஞ்சு குமாரு (ஹிப் ஹாப் ஆதி). 4 பேர் சேர்ந்து மொத்த சேனலையும் கண்ட்ரோல் பண்றது, அரசியல் வாதி எந்த பின்புலமும் இல்லாமல் திரிவது, அரசாங்கம் இருக்கானே தெரியாதது, எதுக்கெடுத்தாலும் லைவ் ஷோ நடத்துவதுன்னு அங்க இங்க கொஞ்சம் சறுக்கல் இருந்தாலும், மீடியா செய்யும் தப்பான விஷயங்களை தோலுரித்து காட்ட முயற்சிப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

கவண் – கல் எய்த …

அடுத்த படத்துல சந்திப்போம்,

அன்புடன்,
பிரதீப்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s