காற்று வெளியிடை

குற்றம் கடிதல், தெகிடி, மீகாமன் படங்கள் வரிசையில் பட தலைப்புக்கு அர்த்தம் தேடும் படம். காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்றார் பாரதியார். அப்படின்னா என்ன? அதை வேறு பதிவில் பார்க்கலாம். படத்துக்கு வருவோம். ஆர் ஃபோர்ஸ் ஃபைட்டர் பைலட்டுக்கும் (Air Force Fighter Pilot) ஒரு டாக்டருக்கும் உள்ள ஈகோ பிரச்சனையே காற்று வெளியிடை.

kaatru-veliyidai-song-02-1486031970.jpg

தன்னை மட்டும் பற்றி யோசிக்கும் ஹீரோ, ஒரு மென்மையான பெண்ணை காதலித்தால் என்ன ஆகும் என்பதை சொல்ல முயற்சிக்கிறார் இயக்குனர் மணிரத்னம். அது என்னமோ நமக்கு மெகா சீரியல் ஃபீல் தான் தருது. எப்படா முடிப்பீங்கன்னு தோண வச்சிருது படம். மணிரத்னம் படத்துல அதிகமா பேசுனா படம் இதுவா தான் இருக்கும். ரோஜா,அலைபாயுதே மாதிரி இருக்கும்ன்னு படத்துக்கு போனவர்களுக்கு விக்ரம் பிரபு நடிச்ச வாகா படம் மாதிரி இருந்தது எரிச்சல். கல்யாணம் நடத்துறாய்ங்களா இல்ல சீமந்தம் நடத்துறாய்ங்களேனே தெரில. பாகிஸ்தான் ஜெயில்ல இருந்து இவ்வளோ ஈஸியா தப்பிச்சிரலாமா? நாமளே ஒரு பாகிஸ்தான் ஜெயிலுக்கு இன்பச்சுற்றுலா போலாம்ன்னு தோணுது.

படத்துல சொல்ற மாதிரி விஷயம் ரெண்டே தான். ஒன்னு ரவி வர்மன் ஒளிப்பதிவு. இரு நாட்டு எல்லை, ஸ்ரீநகர், லே என ராணுவ முகாம், போர் விமானம், பாகிஸ்தான் சிறையில் கழுகு கண்கள் பார்வை, பெரிய பெரிய பள்ளத்தாக்கு, பனி மழைன்னு அட்டகாசம். அடுத்து ரஹ்மான் இசை. வான் வருவான் டியூன்ல பனி பிரதேசத்துல ஹீரோயின் இன்ட்ரோ… ரஹ்மானிசம்…!!! என்னமோ பண்ணுது அந்த டியூன்…

காற்று வெளியிடை – கிளம்பு காத்து வரட்டும்.

அடுத்த படத்துல சந்திப்போம் ,

அன்புடன்,
பிரதீப்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s