பவர் பாண்டி

தனுஷோட இயக்கத்துல வெளி வந்து இருக்குற படம். படம் எப்படி இருக்குன்னு பாக்குறதுக்கு முன்னாடி, இன்னைக்கு காலைல நான் டிரைன்ல வரும் போது ரெண்டு பசங்க பேசுன உரையாடல பத்தி சொல்லணும். மச்சான், பவர் பாண்டி படத்துக்கு போனேன்டா , காவியம் மச்சான்னு ஒருத்தன் ஆரம்பிச்சான். உண்மையவாடா??, இது இன்னொருத்தன். முதல் ஆளோட முக பாவனை ஒரு கோணகிளி கிண்டுச்சி. என்னடா சொல்லு, படம் எப்படி இருந்தது? ‘படமாடா எடுத்துருக்கான் தனுஷ். ஒரு குப்பைக்கு ஆகாதுடா அது. இதுல இந்த படம் 10 வருஷம் பேசும்ன்னு ரஜினி பேட்டி வேற…”. அதுக்கு இன்னொருத்தன், அதே அப்படி எடுத்துக்கக்கூடாது மச்சி, ‘தயவு செஞ்சு 10 வருஷத்துக்கு படம் கிடம் எடுத்துறாதீங்கன்னு ரஜினி சொல்றாருடா’. முதல் ஆள் திரும்ப, அந்த மடோலினான்னா இருக்காடா படத்துல. (மடோனாவ தான் அந்த பக்கி அப்படி சொல்லுது). இப்படி போன அந்த சம்பாஷணையில படம் அவனுக்கு புடிக்கலன்னு தெரிஞ்சிகிட்டேன்.

எனக்கு என்னமோ அந்த ட்ரைலர் பாத்ததுல இருந்து படத்துல ஒரு மெசேஜ் இருக்கும்ன்னு தோணிட்டே இருந்தது. என் எதிர் எதிர்பார்ப்புக்கு எந்த ஒரு ஏமாற்றமும் இல்லாம படம் ரொம்ப அழகா நகருது. நாம சின்ன வயசுல செஞ்ச எல்லா குறும்பையும் சேட்டையயும் பொறுத்துகிட்ட அப்பா அம்மா, அவுங்க வயசானத்துக்கு அப்பறம் பண்ற விஷயங்களை நம்மளால ஏன் ஜீரணிக்க முடில? அப்படி ஒரு பெரியவர் தான் தன் குடும்பத்தினருக்கு பாரம் ஆகிரக்கூடாதுன்னு, தனது இலக்கை நோக்கி பயணப்படுறார். இந்த ஒன் லைனை ரொம்ப நேர்தியா கையாண்ட இயக்குனர் தனுஷுக்கு ஒரு கிளாப்ஸ் போடலாம்.

படத்தோட ஹீரோ ராஜ் கிரண். இந்த பாத்திரத்தை வேற யாராலயும் இவளோ இமோஷனலா செய்ய முடியுமாங்கிறது கேள்வி தான். மொத்த படத்தையும் வேட்டிய மடிச்சு கட்டிட்டு, ஒரு கைல தூக்கி நிறுத்துறார். ஒரு அழகு தாத்தாவாக, ஜிம் மாஸ்டராக, ‘ஷ்யூர்’ ‘டோன்ட் ட்ரபுள் யூரசல்ஃப்’ ன்னு இங்கிலீஸ் பேசி சும்மா தட்டி தூக்குறார். ராஜ் கிரனோட, பக்கத்து வீட்டு பையன் ஃப்ரண்ட்ஷிப் அத்தியாயம், டைரக்டர் டச்.

படத்தின் அடிநாதத்தை சில முக்கியமான வசனங்கள் தொட்டு செல்கிறது. தண்ணி அடிச்சுட்டு ராஜ் கிரண் பேசும் வசனங்கள் ஒவ்வொரு பசங்க மூஞ்சுலயும் கண்டிப்பா அறையும். அப்பா, அம்மா முன்னாடி இனி குரலை உயர்த்தி பேச ஒரு தயக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமா, ‘உங்க அம்மா சொன்னாடா!!!, என்ன வச்சி நீ நல்ல தாங்குவேன்னு… நல்ல தாங்குறியேடா…’ அந்த சின்ன பையன் ப்ரசன்னாவிடம், ‘ஏன்ப்பா, தாத்தாவ திட்டுறே. அவர் உன் அப்பா தானே. நான் உன்ன திட்டுனா உனக்கு எப்படி இருக்கும்…’

ஃபிளாஷ் பாக் சீன்ல வரும் தனுஷ், எப்பவும் போல மிகை இல்லாத நல்ல நடிப்பு. மடோனா பிரியும்போது கொடுக்குறே ரியாக்ஷன்ஸ் அல்டிமேட். அடுத்தது ரேவதி. ஹீரோயின்னா இப்படி நடிங்கமான்னு சொல்ற அளவுக்கு அப்படி ஒரு நடிப்பு. ஒன் டே வித் பாண்டி, தனக்கு தானே சிரிக்கும் போதும், நிதானமா யோசிச்சு மெசஜ் பண்ணும் போதும் ஒரு மெச்சூர் ஆர்டிஸ்ட்னு காட்டுறாங்க.  மகள் தனது காதலை ஊக்கு விக்கும் போது செய்யும் அந்த அழகு டான்ஸ் மொமண்ட் அழகு தருணம். ராஜ் கிரண் மகனாக பிரசன்னா. அப்பா, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை  குழந்தைகளிடம் சொல்லும் போது, அவரை பார்த்து ஒரு புன்முறுவலோடு டிவி பார்ப்பது, கோவத்தில் அப்பாவிடம் வெடிப்பது, மனைவி மடியில் அழுவதுன்னு நம்ம மனசுல நிக்குறார்.

வயசான பிறகு, மடோனா, ரேவதி ஆகுறது ஓகே. ஆனா, எத்தனை வருஷம் எடுத்தாலும், தனுஷ் ராஜ் கிரண் ஆகவே முடியாதுப்பா. ரெண்டு நிமிஷத்துல ரேவதியை ஃபேஸ்புக்ல கண்டு புடிக்குறதுனா ரொம்ப ஓவர்யா. அந்த சின்ன பையனுக்கு எப்படியா ரேவதி போட்ட ஃபோட்டோ நியூஸ் ஃபீட்ல வந்துது. இப்படி சின்ன சின்ன சறுக்கல்கள் அங்கங்கே படத்துல .

ஷான் ரோல்டன் இசை படத்துக்கு பெரிய பிளஸ்.பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி நம்மள படத்தோடு ஒன்ற வைக்குது. அதும் ‘பார்த்தேன்’ பாடல், முதுமை காதலின் அழகு கவிதை. படம் நம்மை கேட்கும் ஒரே கேள்வி, முதியவர்களின் மனநிலையை நம் வீட்டில் எப்படி கையாள்கிறோம்? படத்துல ராஜ்கிரண் கேக்குரே மாதிரி, ‘நமக்கு அவுங்க தான் வாழ்க்கை, அவுங்களுக்கு நாம வாழ்க்கையா?’

பவர் பாண்டி – ஃபுள் சார்ஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s