பாகுபலி 2

குறிப்பு – ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்ற புதிரை உடைக்க இதை நான் எழுதவில்லை. படம் தரும் பல மயிர் கூச்சரியும் தருணங்களை நீங்களும் ரசிக்க ஒரு துண்டு சீட்டு. அதனால் தைரியமாக முழுவதும் படிக்கலாம்.

2 வருஷத்திற்கு பின் பாகுபலி இரண்டாம் பாகம். பிரம்மாண்டமான ஓப்பனிங். பல எதிர்பார்ப்புகள். முக்கியமாக எல்லாரோடும் இருக்கும் அந்த கட்டப்பா கேள்வி. இதை எல்லாத்தையும் அதிகமாவே பூர்த்தி செஞ்சிருக்குது பாகுபலி அண்ட் டீம்.

முதல்பாகம் முழுவதும் மகன் பிரபாஸ் ஷிவு. இந்த பாகம் பிளஷ்பாக் நால, அமரேந்திர பாகுபலியா வரார். மகிழ்மதியையே தன்முதுகுல தாங்கி நிறுத்துறார். அவர் உடலும் அதற்கு ஏற்றார் போல் நம்பும்படி இருக்குது. புகழ்ச்சி, பெருமை, மக்கள் கரகோஷம் எது வந்தாலும், அது இல்லாவிட்டாலும், சலனமே இல்லாமல் நிற்கும் அமரேந்திர பாகுபலி, சாகாமல் நம் மனதில் நிற்கிறார். குந்தல தேசத்தை ஒரே ஆளாக  காப்பாற்றும் மாவீரனாக வளம் வரார். எப்பவும் அவர் கண்ணில் இருக்கும் தேஜஸ், அவர் உடல் மொழி, ஒரே காண்டீபத்தில் 3வில் விடுவது என்று அவர் நடிப்புக்கு எழுந்து நின்று கை தட்டலாம்.

அடுத்து கட்டப்பா. பிரபாஸின் தோள் சுமையை தாங்க, தாங்கி பிடிக்க வல்ல, ஒரே கதாபாத்திரம் சத்யராஜ். அவ்வளவு அனுபவ நடிப்பு. ரம்யா கிருஷ்ணன், “இதுவே என் கட்டளை,என் கட்டளையே சாசனம்” என்று சொல்லும் போது மகிழ்மதியே அலறுது.

முதல் பாகத்துல வெறும் கைதியாவே இருந்த அனுஷ்கா, மின்னும் யுவராணியா, வாள் வீசும் மங்கையாய், அழகு தேவசேனையாய் வராங்க. அதும் முதல் சண்டை காட்சி அமைப்பிலயும், குந்தல தேசத்தை விட்டு வரும் போதும் அழகு. முதல் பாதில தேவையான அளவு நடிச்சிட்டனால தமன்னாவுக்கு கோவரவ வேடம்.

சரி, படக்குழுவினரை பத்தி பாப்போம். கப்பலின் காப்டன் ராஜமௌலி. 5 வருஷ உழைப்பு தெரியுது, ஒவ்வொரு இடத்துலயும். மகதீரா மாதிரி படங்கள் பண்ணனாலயும், அதற்கு அடுத்த நிலைக்கு இந்த படத்த கொண்டு போக முடிஞ்சிருக்கு. வாழ்த்துகள் ராஜமௌலி. பிரபாஸ் அறிமுக தேர் காட்சி, அன்னப்படகு, கிளைமாக்ஸ் அக்னி வலம், குந்தல தேசத்து மதகு உடைப்பு என்று படத்தில் காட்சிகள் சொல்லிக் கொண்டே போகலாம். VFXவோட இருக்குற எல்லா டெக்னீக்ஸ் பயன்படுத்தி, திரைக்கதை சொன்ன விதம் பட்டாசு. சாபு சிறிலின் சின்ன சின்ன ஆர்ட் டீடைலிங் அருமை. செந்திலின் ஒளிப்பதிவில் மகிழ்மதி பேரழகி. கார்கியோட வசங்கள் அப்லாஸ்.

பின்னணி இசைக்கு கொடுத்த மாதிரி, படத்தின் பாடலுக்கும் கொடுத்திருக்கலாம். வஞ்சகம், ராஜ தந்திரம், தோரகம், பொறாமைன்னு நம்ம ஏற்க்கனவே பார்த்த கதை நாளும், அதையும் நம்மை இருக்கை நுனியில் அமர வைத்து பார்க்கவைத்ததில், ஜெயிக்கிறார் இயக்குனர். தரமான இந்திய சினிமா வரிசையில் பாகுபலிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.

பாகுபலி – ஜெய் மகிழ்மதி…
அடுத்த படத்துல சந்திப்போம்…

அன்புடன்,

பிரதீப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s