சுஜாதா…!!!

இன்று என் இனிய எழுத்தாளனுக்கு பிறந்த நாள்.
ஒரு பெயர், அதன் பின்னால் நிரந்தர ஆச்சிரியக்குறி…

சுஜாதா… !

எனக்கு அலுவலக பிறந்த நாள் () இன்று தான். இன்று சுஜாதாவின் பிறந்தநாள் என்று நான் உணர்ந்த பிறகு தான், இன்று எனக்கும் பிறந்த நாள் என்றே நான் உணர்ந்தேன்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் எனக்கும் என் இனிய எழுத்தாளனுக்கும்…

நான் ரசித்த அவரின் ஒரு நகைச்சுவை துணுக்கு உங்கள் பார்வைக்கு:

ஸ்ரீரங்கம் மருத்துவமனை staff log book இலிருந்து :

2/5/1935.இரவு 9.30 மணி

நர்ஸ் பாலம்மா எழுதுகிறேன்.
மதியம் இரண்டு மணிக்கு நர்ஸ் லக்ஷ்மியிடமிருந்து சார்ஜ் எடுத்துக்கொண்டேன்.
கீழ்கண்ட நபர்கள் கடந்த ஏழு மணிநேரத்தில் சேர்க்கப்பட்டார்கள்.
கமலா வயது 40;
நோய் மூச்சுத்திணறல்.;
கொடுத்த மருந்து …..
பார்க்கும் டாக்டர் புஷ்பவல்லி.
குப்பு வயது 75
நோய் அதிக ஜுரம்; 105*F
கொடுத்த மருந்து …..
பார்க்கும் டாக்டர் புஷ்பவல்லி.
கோதை வயது 30 ;;
பிரசவத்திற்காக;
கொடுத்த மருந்து …..
பார்க்கும் டாக்டர் கமலாபாய்.
இப்படிக்கு,
பாலம்மா (கையொப்பம்)
++++++++++++++++++++++++++++++++++++++++
3/5/1935 ராத்திரி 9.30
by பாலம்மா
from குமாரி 2.30
உள்ளே:
ராதைக்கா 40
பட்ட இடத்திலேயே அடி:(போன மாதம் அடிபட்ட அதே முழங்காலில்)
கொடுத்த மருந்து …
பார்க்கும் டாக்டர்: ஸ்ரீமதி.
சுப்பக்கா 40
படக்கூடாத இடத்தில் அடி:
கொடுத்த மருந்து …நல்ல திட்டு..(இந்த வயசில் என்ன சைக்கிள் ஓட்டற ஆசை?)
பார்க்கும் டாக்டர்: ஸ்ரீமதி
மீனாக்ஷி அம்மாள்: 95
மூச்சு விட மிகுந்த சிரமம்
கொடுத்த மருந்து ..உச்சி பிள்ளையார்கோயில் வீபூதி (ஆறு மணிக்கு ஒரு முறை இட்டு சிறிது வாயிலும் போடவேண்டும்)…
(அப்பப்போ எட்டி)பார்க்கும் டாக்டர்: கேசவன்.
வெளியே:
குப்பு வயது 75 (ஜுரம் என்று நேற்று சேர்க்கப்பட்டவர்)
வெளியேற காரணம்:அதிக குளிர்ச்சி 90*F;
To:வைகுண்டம்.
பிரசவம்:(சுக)
மாலை 4 மணிக்கு;
கோதைக்கு; பையன் ..
பெயர் ரங்கராஜன்
என்று எழுதிக்கொள்ள சொன்னார்கள்.
see you & bye’
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4/5/1935.மாலை மணி 2
B ஷிப்ட்வேலைக்கு வரும் நர்ஸ் பாலம்மாவிடம் A ஷிப்ட் குமாரி சொல்கிறார்..
“பாலம்மா நாலு மணிக்கு Chief உன்னை ஒரு என்குயரிக்கு வர சொல்லியிருக்கார்.!”
“ஐயோ! என்னடி விஷயம்?”
“எனக்கும் முழுசா தெரியாது.நீ எதோ தப்பு செய்துட்டேன்னு சொல்லிண்டாங்க!”
“கடவுளே! பயமா இருக்குடி”
“பயப்படாதே Chief Dr.Vk Srinivasan ரொம்ப நல்லவர் ஏதாவது தப்பு செய்திருந்தா ஒத்துண்டுடு .மறைத்தால் அவர் மன்னிக்கமாட்டார்.
“சரிடி”
4 மணி Chief Dr அறை
“குட் ஈவினிங் dr”
“குட் ஈவினிங்! How are you sister?
“நல்லா இருக்கேன் டாக்டர்!”
“சிஸ்டர் பாலம்மா உங்க பேர்ல ஒரு புகார்”
“??”
“2 ந்தேதி அட்மிட் ஆன patient பேர் கோதை ன்னு போட்டுருக்கீங்க?”
“ஆமா டாக்டர்!”
“கோதை என்பது அவங்கள கொண்டு வந்த சேர்த்த அவங்க மாமியார் பேரு”
“ஒ சாரி டாக்டர்! பேரு என்னன்னு கேக்கும்போது அவங்க கோதை ன்னு தான் சொன்னாங்க!”
“நீங்க தெளிவா patient பேர் என்ன ன்னு கேட்டிருக்கணும்”
“சாரி டாக்டர்! இனிமே ஜாக்கிரதையா இருக்கேன்.”
“சரி உடனே போய் அவங்களிடம் மன்னிப்பு கேட்டுண்டு ,தப்பை கரெக்ட் செய்துடுங்க!”
“இதோ டாக்டர்!”
“அப்புறம் நேற்று உங்க log record ஏன் புது மாதிரியான styleலில் எழுதப்பட்டிருந்தது?”
“நானே சொல்லணும்ன்னு இருந்தேன் டாக்டர்! என்னை அறியாம நான் இந்த மாதிரி எழுதிட்டேன்! எனக்கே காரணம் தெரியல.”
“பாலம்மா நீங்க நல்ல track record உள்ளவங்க ..இந்த மாதிரியெல்லாம் செய்யக்கூடாது.அது உங்க career ஐ பாதிக்கும்”
“very sorry டாக்டர். இனிமே…”
“BTW அது படிக்க சுவாரசியமாக இருந்தாலும் நம்ம ஹாஸ்பிடல் விதிகளுக்கு ஒத்து வராது .so get back your old style”
“Sure டாக்டர்”
“நீங்க போகலாம்”
நர்ஸ் சென்றபின் அவர் அந்த log ஐ மீண்டும் படிக்க ஆரம்பிக்கிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s